கர்நாடகா: 13 மாவட்டங்களில்.. கடந்த 7 நாட்களாக கொரோனா மரணங்கள் இல்லை.. குறைகிறது தொற்று
கர்நாடகாவில் கொரோனா தொற்று குறைந்து வருகிறது
பெங்களூரு: கர்நாடகாவில் உள்ள 13 மாவட்டங்களில், கடந்த 7 நாட்களாக கொரோனா இறப்பு எதுவும் பதிவாகவில்லை என்ற தகவல் வெளியாகி உள்ளது.
6 மாதங்களுக்கு முன்பு வரை நாட்டிலேயே கர்நாடக மாநிலத்தில்தான் அதிக அளவு கொரோனா பாதிப்புகள் ஏற்பட்டன.. என்ன செய்வதென்றே எங்களுக்கு தெரியவில்லை என்று கர்நாடக முதல்வர் கைவிரிக்கும் சூழலும் ஏற்பட்டது.
இதற்கு பிறகுதான் அந்த மாநில அரசு பல்வேறு தடுப்பு நடவடிக்கைகளை கையில் எடுத்தது.. லாக்டவுன்கள், தளர்வுகள் என மாறி மாறி விதிக்கப்பட்டது. பிறகு மெல்ல கர்நாடகாவில் தொற்று குறையும் சூழல் ஏற்பட்டது.

ஆய்வு
குறிப்பாக, உலகம் முழுதும் 32 முறை கொரோனா வைரஸ் உருமாறிய சூழலில், இதில் 16 உருமாறிய வைரஸ் கர்நாடகாவில் தென்பட்டுள்ளன என்று ஒரு ஆய்வில் அதிர்ச்சி தகவல் வெளிவந்தது.. அதில், ஏஒய் 4, ஏஒய் 12 ஆகிய 2 வகையான உருமாறிய வைரஸ், கர்நாடகாவில் குறைந்து வருவதாகவும் சொல்லப்பட்டது. எனினும், ஆங்காங்கே கர்நாடகாவில் தடுப்பூசி போடும் முகாம்கள் முழு வீச்சில் நடத்தப்பட்டன.

பாதிப்புகள்
மக்கள் அதை சரியாகவும் பயன்படுத்தி வருகிறார்கள்.. இப்போது ஒருநாளில் 500 முதல் 600 கொரோனா கேஸ்கள் பதிவாகின்றன.. இதுவரை கிட்டத்தட்ட 30 ஆயிரம் பேருக்கு தொற்று உறுதி ஆகியுள்ளது. .. சுமார் 38 ஆயிரம் பேர் கொரோனாவால் உயிரிழந்தனர்... எனினும், அகில இந்திய அளவில் கொரோனா பாதிப்பில் கர்நாடகா மூன்றாம் இடத்தில் உள்ளது..

ஆய்வு
இப்போது இன்னொரு தகவலும் வெளியாகி உள்ளது.. கடந்த 7 நாட்களாக 13 மாவட்டங்களில் ஒரு கொரோனா பலியும் பதிவாகவில்லையாம்.. கர்நாடக மாநிலம் கொரோனா பெருந்தொற்றிலிருந்து மெல்ல விடுபட்டு வருவதை இது எடுத்துக்காட்டும் விதத்தில் உள்ளது.. குறிப்பாக, பெல்லாரி, பிடார், சாம்ராஜன்நகர், சிக்காபெல்லாபுர், சிக்மகளூர், காலாபர்கி, கோலார், கோப்பல், மாண்டியா, ராயச்பூர், உடுப்பி, விஜயபுரா, யாத்கர் போன்ற மாநிலங்களில்தான் இறப்பு ஏதும் பதிவாகவில்லை.. கடந்த 7 நாட்களில் அதாவது அக்டோபர் 5 வரை பதிவான விவரங்கள்தான் இவையெல்லாம்.

தடுப்பூசிகள்
அதேபோல ஒட்டுமொத்த மாநிலத்தையும் எடுத்து கொண்டால் தொற்று பரவலாக குறைந்தே காணப்படுகிறது.. செப்டம்பர் முதல் 5,612 கொரோனா கேஸ்கள் பதிவாகிய நிலையில், இந்த அக்டோபர் முதல் வாரத்தில் 3,676 கேஸ்கள் மட்டுமே பதிவாகி உள்ளது. தடுப்பூசி செலுத்துவதிலும் எண்ணிக்கை அதிகமாகி உள்ளது.. முதல் டோஸ் 81 சதவீதம் செலுத்தப்பட்டுவிட்ட நிலையில், 36 சதவீதம் பேருக்கு 2வது டோஸ்கள் செலுத்தப்பட்டுள்ளன.. 2 மாவட்டங்களில் 100 சதவீதம் தடுப்பூசி போட்டு முடிக்கப்பட்டுள்ளது. 7 மாவட்டங்களில் 90 சதவீதம் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications