அதிர்ந்த அத்திப்பள்ளி.. தமிழர்கள் 13 பேர் பலி.. பட்டாசு கடை தீ விபத்து ஏற்பட்டது எப்படி? பரபர தகவல்
பெங்களூர்: தமிழக கர்நாடக எல்லையான அத்திப்பள்ளியில் உள்ள பட்டாசு கடையில் ஏற்பட்ட தீ விபத்தில் தமிழகத்தை சேர்ந்த 13 பேர் உயிரிழந்துளனர். இந்த நிலையில் பட்டாசு கடையில் தீ விபத்து எப்படி ஏற்பட்டது என்பது குறித்த தகவல் வெளியாகியுள்ளது.
கர்நாடக மாநிலம் அத்திப்பளியில் பட்டாசு கடைகள் செயல்பட்டு வருகிறது. தமிழகம் - கர்நாடக எல்லைப்பகுதியில் அமைந்துள்ளதால், தீபாவளி பண்டிகையையொட்டி தமிழகம் மற்றும் கர்நாடகவை சேர்ந்தவர்கள் இங்கே பட்டாசு வாங்குவது வழக்கம். அந்த வகையில் தீபாவளிக்கு சில வாரங்களே இருக்கும் நிலையில் நவீன் என்பவருக்கு சொந்தமான கடையில் பட்டாசுகள் விற்பனைக்காக கொண்டு வரப்பட்டதாக கூறப்படுகிறது.

நவீன் என்பவரிம் கடைக்கு அருகில் பட்டாசு குடோனும் இருந்துள்ளது. இந்த நிலையில் தான் திடீரென நவீன் என்பவரின் கடைகளில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. ஒரு கடையில் பற்றிய தீ சிறிது நேரத்தில், அருகில் உள்ள மற்ற கடைகளுக்கும் பரவியது. இதனால் மொத்தம் 5 பட்டாசு கடைகளில் தீப்பிடித்தது. நாலாபுறமும் தீ பற்றி எரிந்ததால் கடைகளில் இருந்த ஊழியர்கள் அதிர்ச்சியடைந்து வெளியேறினர்.
வெடித்து சிதறிய பட்டாசுகள்: ஒருசிலர் கடைக்குள் சிக்கிக்கொண்டனர். மேலும் பட்டாசு கடைகளில் தீ கொழுந்துவிட்டு எரிந்ததோடு, நாலாபுறமும் பட்டாசுகள் வெடித்து சிதறின. இதனால் அந்த இடம் முழுவதும் புகை மண்டலமாக மாறியது. சம்பவம் குறித்து தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் தீயணைப்பு துறையினர் விரைந்து வந்து நாலாபுறமும் நின்று தண்ணீரை பீய்ச்சி அடித்து தீயை அணைக்க போராடினர்.
1.50 கோடி மதிப்புள்ள பட்டாசுகள்: பிற்பகல் 3 மணியளவில் தீ விபத்து ஏற்பட்டதாக கூறப்படுகிறது. பட்டாசு கடை தீ விபத்தில் சிக்கி 13 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் காயமடைந்த 4 பேர் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகின்றனர். பட்டாசுகள் வெடித்து சிதறியதில் அருகே நிறுத்தப்பட்டிருந்த வாகனங்களும் சேதமடைந்துள்ளன. பட்டாசு கடைக்கு முன்பு நிறுத்தப்பட்டிருந்த 7 மோட்டார் சைக்கிள்கள், வேன் மற்றும் சரக்கு லாரி தீயில் கருகி எலும்புக்கூடாகியது.
இந்த விபத்து குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். பட்டாசு தீ விபத்தில், கடையில் இருந்த ரூபாய் 1.50 கோடி மதிப்புள்ள பட்டாசுகள் வெடித்து சிதறியுள்ளன. மேலும் ஓசூர்- பெங்களூர் நெடுஞ்சாலையில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. தமிழகம், கர்நாடக போலீசார் இணைந்து போக்குவரத்து ஒழுங்குபடுத்தினர். இதன் பின்னர் போக்குவரத்து ஒழுங்கானது.
விபத்து ஏற்பட்டது எப்படி?: தீ விபத்து எப்படி ஏற்பட்டது குறித்த முதல் கட்ட தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, பட்டாசுக்கடைக்கு சரக்குகளை கண்டெய்னர் லாரி ஒன்று கொண்டு வந்துள்ளது. லாரியில் இருந்த பட்டாசுகளை கடையில் இறக்கி வைத்துக் கொண்டு இருந்த போது எதிர்பாராத விதமாக மின்சார வயரில் உரசி தீ பிடித்துள்ளது. சில வினாடிகளில் இந்த தீ மளமளவென பரவியுள்ளது.
தீ பிடித்ததால் பட்டாசுகள் வெடித்து சிதறி அப்பகுதியே கரும்புகை மண்டலமாக காட்சி அளித்தது. உயிரிழந்தவர்கள் உடல் முழுவதும் கருகி அடையாளம் காண முடியாத நிலையில் இருந்தது. இவர்கள் 13 பேரும், தர்மபுரி, அம்மாபேட்டை பகுதியினை சேர்ந்த இளைஞர்கள் என்று கூறப்படுகிறது.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications