பகீர் சம்பவம்.. காதல் வெறி.. மயக்க மருந்து கொடுத்து.. அப்பாவை எரித்து கொன்ற 15 வயது சிறுமி!
Recommended Video
பெங்களூரு: வேற வழியே இல்லை.. நம்பிதான் ஆகணும்.. 15 வயசு பொண்ணு, தன்னுடைய அப்பாவையே எரித்து கொன்றிருக்கிறாள்... இந்த அதிர்ச்சி சம்பவம் பெங்களூருவில் நடந்துள்ளது.
ராஜஸ்தானைச் சேர்ந்தவர் ஜெயக்குமார் ஜெயின். இவருக்கு 40 வயதாகிறது. பெங்களூருவில் துணி வியாபாரம் செய்து வருகிறார். சொந்தமாக ஒரு கடைகூட வைத்துள்ளார். இவரது மனைவி பெயர் பூஜாதேவி. 15 வயதில் ஒரு மகளும், 12 வயதில் ஒரு மகனும் உள்ளனர்.
இந்நிலையில், கடந்த 17-ம் தேதி ஒரு சொந்தக்காரர் வீட்டு கல்யாணத்துக்காக பூஜாதேவி மகனை அழைத்து கொண்டு சென்றுவிட்டார். வீட்டில் ஜெயக்குமாரும், மகளும் இருந்திருக்கிறார்கள். அப்போது, ஜெயக்குமாரின் வீட்டில் இருந்து கரும் புகை வந்துள்ளது.

எரிந்த சடலம்
இதை பார்த்த அக்கம்பக்கத்தினர், வீட்டில் ஏதோ தீப்பிடித்ததாக நினைத்து கொண்டு, தீயணைப்பு துறையினருக்குத் தகவல் சொன்னார்கள். விரைந்து வந்த வீரர்கள் வீட்டின் கதவை உடைத்துக்கொண்டு உள்ளே சென்று பார்த்தபோது, பாத்ரூமில் இருந்து புகை வருவதை பார்த்தனர். அங்கு சென்று பார்த்தபோது, ஜெயக்குமார் பாதி எரிந்த நிலையில் சடலமாக கிடந்தார்.

கல்யாணம்
இதனால் தீயணைப்பு வீரர்கள் போலீசுக்கு தகவல் சொன்னார்கள். போலீசார்கள் வந்து வீட்டை சுற்றி பார்த்தபோதுதான், 15 வயது மகளும் அங்கேயே இருந்திருக்கிறாள் என்பது தெரியவந்தது. இதை பற்றி கேட்டதற்கு, எனக்கு எதுவும் தெரியாது.. என் அம்மா ஒரு கல்யாணத்துக்கு போயிருக்காங்க.. அதனால சாப்பிடுவதற்காக சொந்தக்காரர் வீட்டுக்கு போயிருந்தேன்" என்று சொன்னார்.

தீக்காயம்
சிறுமி சொன்ன இந்த பதில், போலீசாரால் ஏற்று கொள்ளவே முடியவில்லை. ஏனெனில் வீட்டு பெட்ரூமில் ரத்தக்கறை இருந்தது. மேலும் எந்தவித சலனமும், பதட்டமும் மகள் இல்லாமல் இருந்தாள். அவளது காலில் தீக்காயம் இருந்தது. இதனால் போலீசார் சிறுமியை துளைத்தெடுத்து கேள்வி கேட்டனர். அப்போது தன் தந்தையைக் கொலை செய்ததை அவர் ஒப்புக்கொண்டார்.

வாக்குமூலம்
அது மட்டுமில்லை.. சிறுமி சொன்ன காரணத்தை கேட்டு போலீசாரே நடுங்கிவிட்டனர். அந்த பெண் சொன்னதாவது,"நான் என் வீட்டின் அருகில் வசிக்கும் பிரவீன் என்ற மாணவனை காதலித்தேன். பிரவீனுக்கு 18 வயசு. பி.காம் படிக்கிறார். எங்கள் வீட்டுக்கு அடிக்கடி வருவார். என்னிடம் பேசுவார். இது என் அப்பாவுக்கு பிடிக்கல.போனில் பேசுவதும் பிடிக்கல. அதனால் போனை பிடுங்கி வெச்சிட்டார்.

பிரவீன்
இதனால் எனக்கு என் அப்பா, அம்மா மேல கோபம். அதனால அப்பாவை, என் காதலனுடன் சேர்த்து சேர்ந்து கொலை செய்ய முடிவு பண்ணேன். என் அம்மா கல்யாணத்துக்கு போனதும், அப்பாவுக்கு பாலில் தூக்க மாத்திரையை கலந்து குடுத்துட்டேன். அவர் தூங்கியதும் பிரவீனை வீட்டுக்கு கூப்பிட்டேன். ரெண்டு பேரும் சேர்ந்து என் அப்பாவை கத்தியால் 10 இடங்களில் குத்தி கொன்றோம்.

ரத்தக்கறை
அவரது உடலை பாத்ரூமுக்கு இழுத்து சென்றோம். வீடு முழுக்க ரத்தக்கறை இருந்தது. இருவரும் சேர்ந்தே அதை துடைத்தோம். நான் போய் 3 பாட்டில்களில் பெட்ரோல் வாங்கி வந்தேன். அதை அப்பாமீது ஊற்றி தீ வைத்தோம். அவரோட 2 கால்களிலும் தீப்பிடிச்சிடுச்சு. யாராவது கேட்டால் எலக்ட்ரிக் ஷாக்-ன்னு காரணம் சொல்லிக்கலாம்னு முடிவு பண்ணோம். ஆனால் இப்படி மாட்டிக்கிட்டோம்" என்றார்.

அதிர்ச்சி
இதையடுத்து மகளையும் காதலன் பிரவீனையும் போலீசார் கைது செய்தனர். சிறுமி என்பதால், அவரை காப்பகத்தில் ஒப்படைத்த போலீசார், பிரவீனை ஜெயிலில் தள்ளினர். பெற்ற மகளே காதலுக்காக, அப்பாவை இவ்வளவு கொடூரமாக கொலை செய்த காரியம் பெங்களூரில் மட்டுமில்லாது நாட்டு மக்களுக்கே பெரிய அதிர்ச்சியை தந்துள்ளது.












Click it and Unblock the Notifications