பெங்களூரில் பெண்ணை கூட்டு பலாத்காரம் செய்த வங்கதேச கும்பல்.. 2 பேரை சுட்டுப் பிடித்த போலீஸ்

Subscribe to Oneindia Tamil

பெங்களூர்: பெண் உறுப்புக்குள் இரக்கமின்றி பாட்டிலை நுழைத்து கொடுமைப்படுத்தி, அந்த இளம் பெண்ணை கும்பலாக பலாத்காரமும் செய்த கும்பலில் இருவர் தப்பியோட முயன்றபோது போலீசார் துப்பாக்கிச் சூடு நடத்திய சம்பவம் பெங்களூரில் நடந்துள்ளது.

கடந்த சில நாட்களுக்கு முன்பு ஒரு வீடியோ சமூக வலைத்தளங்களில் பரவியது. அதில் ஒரு பெண்ணின், பிறப்பு உறுப்புக்குள் பாட்டிலை ஒரு கும்பல் புகுத்துவதோடு, கும்பலாக பலாத்காரம் செய்யப்படுவது போன்ற காட்சி இருந்தன.

இந்த தகவல் காவல்துறைக்கும் சென்றது. இதையடுத்து பெங்களூர் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணையை துவக்கின்றனர்.

அசாம் போலீசாரும் தேடினர்

அசாம் போலீசாரும் தேடினர்

பலாத்காரத்தில் ஈடுபட்ட 5 பேர் கொண்ட கும்பல் புகைப்படத்தை வைத்து, அவர்கள் வட கிழக்கு மாநிலங்களைச் சேர்ந்தவர்கள் என போலீசார் நினைத்தனர். அசாம் மாநில காவல்துறை இது தங்கள் மாநிலத்தில் நடந்த பலாத்காரம் என்று நினைத்து குற்றவாளிகளை தேட ஆரம்பித்தது. ஆனால் சம்பவம் பெங்களூரில் நடந்தது என்பது தெரியவந்தது.

 பெங்களூரில் சிக்கினர்

பெங்களூரில் சிக்கினர்

போலீஸ் விசாரணையில், 2 பெண்கள் உட்பட 6 குற்றவாளிகளை கைது செய்தனர். குற்றவாளிகள் அனைவரது சொந்த நாடும் வங்கதேசம். பணப் பிரசசினை தொடர்பாக, பெண்ணை வங்கதேசத்திலிருந்து இந்தியாவிற்குள் கடத்தி வந்துள்ளனர். இங்கு வைத்து பலாத்காரம் செய்து கொடுமைப்படுத்தியுள்ளனர் என்று விசாரணையில் தெரியவந்தது.

போலீஸ் துப்பாக்கிச் சூடு

போலீஸ் துப்பாக்கிச் சூடு

இதற்கிடையில், இன்று காலை, குற்றம் சாட்டப்பட்டவர்களை குற்றம் நடந்த இடத்தை காட்ட அழைத்துச் சென்றனர் போலீசார். அப்போது அதில் 2 பேர் தப்பியோட முயன்றுள்ளனர். எனவே, அவர்களை நோக்கி போலீஸ் துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளது. அப்போது குற்றவாளிகள் கால்களில் காயமேற்பட்டது. இதையடுத்து அவர்கள் அங்கேயே சுருண்டு விழுந்தனர். அவர்களை சிகிச்சைக்காக மருத்துவமனையில் சேர்த்துள்ளதாக டி.சி.பி (பெங்களூரு கிழக்கு) சரணப்பா தெரிவித்தார்.

கேரளாவில் பதுங்கியுள்ள கும்பல்

கேரளாவில் பதுங்கியுள்ள கும்பல்


இதற்கிடையில், மனித கடத்தல் மோசடியில் அதிகமானோர் ஈடுபட்டுள்ளனர் என்று குற்றம் சாட்டப்பட்டவர்கள் போலீசாரிடம் கூறியுள்ளதாக கர்நாடக உள்துறை அமைச்சர் பசவராஜ் பொம்மை தெரிவித்துள்ளார். "இந்த வழக்கு தொடர்பாக அனைத்து மாநிலங்களும் விழிப்புடன் இருக்க வேண்டும் என்று மத்திய அமைச்சர் கிரேன் ரிஜிஜு ட்வீட் செய்திருந்தார். பெங்களூர் போலீசார் வழக்குப் பதிவு செய்து, சில மணி நேரத்திற்குள் இந்த கும்பலைக் கண்டுபிடித்தனர், 6 பேர்களில், இரண்டு பெண்கள். இந்த கடத்தலின் பின்னால் பலர் இருப்பதாக அவர்கள் தகவல்களை வழங்கியுள்ளனர். அவர்கள் கேரளாவில் உள்ளனர். நாங்கள் விசாரணையை தீவிரப்படுத்துகிறோம், " என்றும் பசவராஜ் பொம்மை கூறினார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+