பெங்களூர் ரயிலில் 2 பெண்கள்.. தோளில் தொங்கிய "காஸ்ட்லி பை".. வாங்கி பார்த்த கேரளா போலீஸ்! அட கடவுளே
சென்னை: பெங்களூரு, ஆந்திரா, ஜார்கண்ட் உள்பட பல்வேறு மாநிலங்களில் இருந்து கேரளாவுக்கு கஞ்சா உள்ளிட்ட போதை பொருட்கள் கடத்தப்படுவது அதிகரித்து காணப்படுகிறது.. எனவேதான் இவைகளை தடுப்பதற்காக ரயில்வே போலீசார், கலால் துறையினர், போதைப் பொருள் தடுப்புத் துறையினர் ஆகியோர் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். அப்படியிருந்தும் கஞ்சா கடத்தல் முழுமையாக ஒழியவில்லை.. இதில் அதிர்ச்சிகரமான விஷயம் என்னவென்றால், சில இளம்பெண்களே போதைப்பொருட்களை விற்பனை செய்வதுதான்..!!!
சென்னையில் சட்டவிரோதமாக கஞ்சா மற்றும் போதை பொருட்கள் கடத்தி வருபவர்கள் மற்றும் விற்பனை செய்பவர்கள் மீது சென்னை பெருநகர காவல் ஆணையாளர் உத்தரவின்படி, கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. சென்னை பெருநகரில் கஞ்சா மற்றும் போதை பொருட்கள் கடத்தி வருபவர்களையும், விற்பனை செய்பவர்களையும் கண்டறிந்து உடனடியாக கைது செய்ய, சிறப்பு சோதனைகள் மேற்கொள்ள சென்னை பெருநகர காவல் ஆணையாளர் ஏற்கனவே உத்தரவிட்டிருந்ததால், இந்த அதிரடிகள் நடத்தப்பட்டு வருகின்றன.

துரைப்பாக்கம் கண்ணகி நகர்
கடந்தமாதம் கூட, , துரைப்பாக்கம், கண்ணகி நகர் பகுதியில் கூலி தொழிலாளர்கள், இளைஞர்கள், மாணவர்களுக்கு , கஞ்சா விற்பனை செய்யப்படுவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதனால் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று பார்த்தபோது, 3 பெண்கள் கையில் கஞ்சாவுடன் இருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தனர். இந்த பெண்கள், ஒடிசா மாநிலத்தில் கஞ்சா வாங்கி வந்து, கண்ணகி நகர் பகுதியில் விற்பனை செய்பவர்கள் என்பதும் தெரியவந்தது. இதையடுத்து, இவர்களை போலீசார் கைது செய்திருந்தனர்.
இதுபோல அண்டை மாநிலங்களிலும் கஞ்சா விற்பனை அதிகரித்து வருகிறது.. அம்மாநிலங்களிலும் இளம்பெண்களே கஞ்சா விற்பனை செய்ததாக கைதாகி வருகின்றனர்.. நேற்றுகூட கர்நாடக மாநிலம், பெங்களூருவில் ராஜனு குண்டே அருகே இளம்பெண் ஒருவர் போதை பொருள் விற்பனை செய்வதாக குற்றப்பிரிவு போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
25 வயது பெண்
இதையடுத்து போலீசார் விரைந்து சென்று சோதனை நடத்தியபோது, ஆப்பிரிக்க பெண் அகின்வுமி பிரின்சஸ் என்ற 25 வயது பெண், எம்டிஎம்ஏ எனப்படும் போதை பொருளை வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அவரது வீட்டில் சோதனை நடத்தி 5.32 கிலோ எம்டிஎம்ஏ போதைப் பொருள்களை கைப்பற்றினர்.
கைதான பெண் நைஜீரியா நாட்டை சேர்ந்தவராம்.. படிப்பதற்காக தெலுங்கானா வந்துள்ளார், பிறகு பெங்களூரு வந்து போதைப் பொருள் விற்றுள்ளார் என்பது தெரியவந்தது.. கிட்டத்தட்ட ரூ.10 கோடி மதிப்புள்ள போதை பொருளை இந்த பெண்ணிடமிருந்து போலீசார் கைப்பற்றி, போதைப் பொருள் தடுப்புச் சட்டத்தின் கீழ், வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
டூர் போவதாக சொல்லிவிட்டு
அதேபோல, கேரளாவிலும் 2 இளம் பெண்கள் சிக்கி உள்ளனர்.. பெங்களூரூவில் இருந்து கேரளா வரும் ரயிலில் போதைப் பொருள் கடத்தப்படுவதாக பாலக்காடு மற்றும் எர்ணாகுளம் போலீசுக்கு ரகசிய தகவல் நேற்றைய தினம் கிடைத்திருக்கிறது..
எனவே, கேரள எல்லையான பாலக்காடு முதல் ரயில்களில் போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டிருந்தனர்.. அதேபோல, எர்ணாகுளம் வடக்கு ரயில் நிலையத்தில், ரயில்வே பாதுகாப்புப் படை போலீசார் மற்றும் போதைப் பொருள் தடுப்புத் துறையினரும் பயணிகளை கண்காணித்துக் கொண்டிருந்தனர்.
அந்த நேரத்தில், பெங்களூரு ரயிலில் இருந்து 2 இளம்பெண்கள் இறங்கினார்கள்.. அவர்களிடம் 2 பெரிய பைகள் இருந்தன.. இவர்கள் மீது போலீசுக்கு சந்தேகம் ஏற்பட்டதால், அந்த 2 பெரிய பேக்குகளை திறந்து சோதனையிட்டனர்.. அதில், 37 கிலோ கஞ்சா இருப்பதை கண்டு அதிர்ந்தனர்..
கல்லூரி மாணவி
இதையடுத்து அவர்களிடம் விசாரித்ததில், 2 பேருமே மேற்குவங்க மாநிலம் முர்ஷிதாபாத்தை சேர்ந்த கல்லூரி மாணவி சுல்தானா (21), காதூன் பீவி (29) என்பது தெரியவந்தது. இவர்கள் 2 பேரும் கேரளாவுக்கு டூர் போவதாக சொல்லிவிட்டு, கஞ்சாவை கடத்தி வந்தார்களாம்.. இதற்கு முன்பே பலமுறை இப்படி கஞ்சாவுடன் டூர் வந்திருக்கிறார்களாம்.. ஒரு கிலோவுக்கு இவ்வளவு கமிஷன் என்று ரேட் உள்ளதாம்.. அந்த கமிஷன் பணத்துக்காகவே பலமுறை கஞ்சாவை இவர்கள் கடத்தி வந்ததும் தெரியவந்தது. இந்த பெண்களும் கைதாகி விசாரணையின் கீழ் உள்ளனர்.. கஞ்சா நடமாட்டம் பெருகிவருவதுடன், அதை இளம்பெண்களே கடத்தி விற்பனை செய்வது அதிகரித்துள்ளது, பொதுமக்களுக்கு கவலையையும், அதிர்ச்சியையும் தந்து வருகிறது.
-
பெங்களூரில் நடக்கும் கொடுமை..! திடீர் திடீரென வீட்டை காலி செய்யச் சொல்லும் வீட்டு ஓனர்கள்.. ஏன்? -
கேரளாவில் மீண்டும் தலைதூக்கிய நிபா வைரஸ்.. தடுப்பூசி கூட இல்லையே.. வௌவால்கள் மூலம் பரவும் ஆபத்து! -
"வயிற்றுப்போக்கில் வரும் ரத்தம்.." கேரளாவில் உயிரை குடிக்கும் நோய்.. அதிர வைக்கும் ஷிகெல்லா பாதிப்பு -
கேரளாவை உலுக்கும் ஷிகெல்லா.. தமிழ்நாட்டுக்குள் ஜாலியாக உலா வரும் வாகனங்கள்! கலக்கத்தில் கன்னியாகுமரி -
பெங்களூரில் நடைபெறும் 7-வது உலகத் திருக்குறள் மாநாடு.. தமிழ் அமைப்புகள் கலந்து கொள்ள அழைப்பு! -
இனி அரசு ஊழியர்களுக்கு வாரம் 2 நாள் விடுமுறை.. அனைத்து சனிக்கிழமையும் ‘லீவு’ அறிவித்த முதல்வர் -
ராயல் என்பீல்டு முதலீடு ஆந்திரா சென்றதா? அமைச்சர் கீர்த்தனா பற்றி உண்மையை உடைத்த MP மாணிக்கம் தாகூர் -
"அமைச்சர் ஆதவ் அர்ஜுனாவை பதவிநீக்கம் செய்ய வேண்டும்”.. முதல்வர் விஜய்க்கு கிருஷ்ணசாமி வைத்த கோரிக்கை -
வெளிநாடு போயிருக்கதே 'ரீல்ஸ்' பார்த்துதான் தெரியுது.. அமைச்சர் கீர்த்தனாவை கலாய்த்த மேயர் பிரியா! -
"எதிரிகள் சர்வ நாசம்".. எம்ஜிஆர், ஜெ., பாணியில் விஜய்.. கொல்லூர் மூகாம்பிகை கோவிலுக்கு செல்வது ஏன்? பின்னணி -
தங்கப்பத்திரத்தில் 1.50 கோடி முதலீடு செய்தவர்களுக்கு 6 கோடி தந்த மத்திய அரசு.. லாபம் 4.85 கோடி -
"ஜனவரி 1 முதல் ஆர்.எஸ்.பாரதி அரை மீசை பாரதி என்று அழைக்கப்படுவார்" - மாணிக்கம் தாகூர் கிண்டல்!












Click it and Unblock the Notifications