"மிட்நைட்டில்" அலறல்.. ஷில்பா வீட்டுக்குள்ளயே லவ்வர்.. அதென்ன கழுத்தில்?.. இப்ப மேடம் ஜெயிலுக்குள்ளே
கள்ளக்காதலனுக்காக கணவனை கழுத்தை நெரித்து கொன்ற பெண் கைதாகி உள்ளார்
பெங்களூரு: கள்ளக்காதலுக்காக கொலையை செய்துவிட்டு, ஜெயிலுக்குள் கம்பி எண்ணி கொண்டிருக்கிறார் இளம்பெண் ஒருவர்.
கர்நாடக மாநிலம் மண்டியா பகுதியை சேர்ந்தவர் மகேஷ்.. 30 வயதாகிறது.. இவரது மனைவி பெயர் ஷில்பா.. 27 வயதாகிறது.. இவர்களுக்கு கடந்த சில மாதங்களுக்கு முன்பு தான் இருவீட்டார் சம்மதத்துடன் திருமணம் நடந்துள்ளது.
மகேஷ் -ஷில்பா தம்பதி கோனேகுண்டே என்ற பகுதியில் வசித்து வந்தனர்.. ஆனால், ஷில்பாவுக்கு ஆண் நண்பர் ஒருவர் இருக்கிறாராம்.. அவருடன் கணவருக்கு தெரியாமல் ஊர் சுற்றி வந்துள்ளதாக தெரிகிறது.
இருவரும் பல்வேறு பகுதிகளுக்கு சென்று ஜாலியாக இருந்துள்ளனர்.. இந்த விவகாரம், ஒருகட்டத்தில் மகேஷூக்கு தெரிந்துவிட்டது.. இதனால் அதிர்ச்சி அடைந்த மகேஷ், ஷில்பாவிடம் இதை பற்றி கேட்டுள்ளார்.

மகேஷூக்கு கடுப்பு
அதற்கு ஷில்பா, அவர் என்னுடைய நண்பர் என்று சொன்னாராம்.. ஆனாலும், பகல் நேரத்தில் ஷில்பா வீட்டில் இல்லாததும், அப்படியே இருந்தாலும் எந்நேரமும் போனில் பேசி கொண்டிருப்பதும், மகேஷூக்கு கடுப்பை தந்தது.. இதனால், தம்பதிக்குள் தினமும் தகராறு நடந்து வந்துள்ளது.. இப்படிப்பட்ட சூழலில்தான், கணவர் உயிருடன் இருக்கும்வரை, தன்னால் ஜாலியாக இருக்க முடியாது என்று நினைத்த ஷில்பா, மகேஷை கொலை செய்ய முடிவு செய்தார்.

கல்யாணம்
அதன்படி, கடந்த 2-ம் தேதி இரவு, கள்ளக்காதலனை வீட்டுக்கு வரவழைத்துள்ளார்.. அவருடன் சேர்ந்து கணவனை கழுத்தை நெரித்து ஷில்பா கொலை செய்துள்ளார்... துடிதுடித்து மகேஷ் உயிரிழந்ததை பார்த்த ஷில்பா, வலிப்பு நோயால் கணவர் உயிரிழந்துவிட்டதாக மகேஷின் பெற்றோருக்கு தகவல் தெரிவித்துள்ளார்... மேலும், கார் மூலம் சடலத்தை மண்டியாவுக்கும் எடுத்து சென்றுள்ளார்... அப்போதுதான், மகேஷின் சடலத்தை பெற்றோர் பார்த்தபோது, அவரது கழுத்து பகுதியில் காயங்கள் இருந்துள்ளது தெரியவந்துள்ளது.

போஸ்ட் மார்ட்டம்
இதைப்பார்த்து பதறிப்போன பெற்றோர், உடனடியாக மண்டியா போலீஸில் புகார் தந்தனர்.. அந்த புகாரின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்த போலீசாரும், விசாரணையை ஆரம்பித்தனர்.. அதற்குள் மகேஷின் போஸ்ட் மார்ட்டம் ரிப்போர்ட்டும் வந்துவிட்டது.. அதில், மகேஷ் கொலை செய்யப்பட்டிருக்கலாம் என்று டாக்டர்கள் ரிப்போர்ட் தந்தனர்.. இதையடுத்து முதல் விசாரணையே ஷில்பாதான். தீவிர விசாரணையை அவரிடம் நடத்தினர். அப்போதுதான் எல்லா உண்மைகளையும் ஷில்பா சொன்னார்.

வலிப்பு
திருமணத்திற்கு முன்பே நான் ஒருவரை காதலித்து வந்தேன்.. அவரைதான் திருமணம் செய்ய முடிவு செய்தேன்.. இந்த விருப்பத்தை என்னுடைய பெற்றோரிடமும் சொன்னேன்.. ஆனால், அவர்கள் எங்கள் திருமணத்துக்கு எதிர்ப்பு தெரிவித்தனர்.. அவசர அவசரமாக மகேஷை திருமணம் செய்து வைத்துவிட்டனர்.. அவருடன் வாழவே எனக்கு பிடிக்கவில்லை.. அதனால்தான் கள்ளக்காதலனுடன் சேர்ந்து கழுத்தை நெரித்துவிட்டேன்" என்று வாக்குமூலம் தந்தார்.. இதையடுத்து ஷில்பா கைதானார். அதற்குள் கள்ளக்காதலனும் எஸ்கேப் ஆகியிருந்தார்.. எனினும் அவரை வலைவீசி போலீசார் பிடித்துவிட்டனர்.. இந்த ஜோடி இப்போது ஜெயிலில் உள்ளது..!
-
பெங்களூர் நகர வளர்ச்சி துறை அமைச்சர் யார் தெரியுமா? கர்நாடக அமைச்சர்களின் இலாகா விவரம் -
Kerala: ஒன்றரை வயது குழந்தையின் உடலில் 91 காயங்கள்! 7 எலும்பு முறிவுகள்! துடிதுடித்த திருவனந்தபுரம்! -
மாயமான தவெக நிர்வாகி 4 நாட்களுக்குப் பின் சடலமாக மீட்பு.. கல் குவாரி பள்ளத்தில் உடல் கண்டெடுப்பு! -
மதுரையை சேர்ந்தவர்.. கர்நாடக முதல்வர் டிகே சிவக்குமாரின் செயலாளராக தமிழர் நியமனம்.. யார் இவர்? -
மேகதாது அணை: முதல்வரானதும் டி.கே.சிவகுமார் அதிரடி! முடிவெடுக்க வேண்டியது தமிழ்நாடு இல்லை! -
தன்னை கேலி செய்தாலும்.. கர்நாடகா முதல்வரானதும் டிகே சிவக்குமாருக்கு வாழ்த்து கூறிய விஜய் -
தஞ்சையில் கள்ளக்காதல்.. நள்ளிரவில் புருஷன்- சொந்த அக்காவை தீயில் கொளுத்திய அமுதா -
மாணவிகளுக்கு மட்டுமில்லை, பள்ளி, கல்லூரி மாணவர்கள் அனைவருக்கும் இலவச பஸ் பாஸ்! டிகே சிவகுமார் பலே -
காலையில் கஞ்சா பால்.. இட்லிக்கு கஞ்சா சட்னி.. பெட் ரூம் முழுக்க 70 கஞ்சா செடிகள்.. மிரண்ட போலீஸ் -
காதல் திருமணம் செய்துக்கொண்ட மகள்! பெட்ரோல் குண்டு வீசிய பாசக்கார தந்தை! நெல்லையில் ஷாக்! -
திருச்சியில் கார் ஓட்டுநரால் 14 வயது சிறுமிக்கு நேர்ந்த கொடுமை.. மது கொடுத்து பாலியல் தொல்லை! -
முதல்வர் விஜய் தொகுதியில் சூட்கேஸுக்குள் தலையில்லாத ஆண் சடலம்.. பெரம்பூர் ரயில் நிலையத்தில் ஷாக்!












Click it and Unblock the Notifications