இது தென்னிந்தியா.. மிஸ்ஸான மோடி "மேஜிக்"! பிராமணருக்கு முக்கியத்துவம் - பாஜக தோல்விக்கு 3 காரணங்கள்
பெங்களூர்: கர்நாடகாவில் ஆளும் பாரதிய ஜனதா கட்சி தேர்தலில் படுதோல்வியை தழுவி இருக்கும் சூழலில், அவர்களின் தோல்விக்கு 3 காரணங்கள் முக்கியமானதாக பார்க்கப்படுகிறது. அவை என்ன? விரிவாக பார்ப்போம்.
கர்நாடகாவில் பசவராஜ் பொம்மை தலைமையிலான பாரதிய ஜனதா கட்சியின் ஆட்சிகாலம் நிறைவடைய இருப்பதை தொடர்ந்து கடந்த மே 10 ஆம் தேதி அம்மாநிலத்தில் சட்டமன்றத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெற்றது. இன்று தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டு வருகின்றன.

இதுவரை வெளியான தேர்தல் முடிவுகளின்படி கர்நாடகாவில் ஆளும் பாஜகவை வீழ்த்தி அம்மாநிலத்தில் காங்கிரஸ் ஆட்சியை பிடிப்பது உறுதியாகி இருக்கிறது. காங்கிரஸ் பெரும்பான்மைக்கு தேவையான தொகுதிகளை விட அதிகமான இடங்களில் முன்னிலை வகித்து வருகிறது. அந்த கட்சி 136 தொகுதிகளிலும், ஆளும் பாரதிய ஜனதா கட்சி 64 இடங்களிலும் முன்னிலையில் உள்ளன.
மதசார்பற்ற ஜனதா தளம் கட்சி 20 தொகுதிகளிலும், இதர வேட்பாளர்கள் 4 தொகுதிகளிலும் முன்னிலை வகித்து வருகிறார்கள். இந்த நிலையில் கர்நாடக மாநிலத்தில் கடந்த ஓராண்டுக்கு முன்பே பாஜக வெற்றிபெறுவது கடினம் என்று உளவுத்துறை தகவல் தெரிவித்தனர். அன்றிலிருந்து பாஜக பல்வேறு வியூகங்களை வகுத்து செயல்பட்டு வந்தது.
கர்நாடக மாநில பாஜகவில் நிலவிய உள்கட்சி பிரச்சனை, எடியூரப்பா விலகல், லிங்காயத்து மக்கள் எதிர்ப்பு, 40% கமிஷன் சர்ச்சை, ஹிஜாப், ஹலால் போன்ற சர்ச்சைகளால் ஏற்பட்ட மதவாத மோதல்கள் உள்ளிட்டவை பாஜகவுக்கு பின்னடைவாக பார்க்கப்பட்டது. இதனை சமாளிக்க பிரதமர் நரேந்திர மோடியே பல முறை கர்நாடகாவுக்கு நேரில் வந்து பல்வேறு திட்டங்களை தொடங்கி வைத்தார். தேர்தல் பிரச்சாரங்களிலும் தீவிரமாக கலந்துகொண்டார். இருப்பினும் அம்மாநிலத்தில் பாஜக தோல்வியை தழுவியதற்கு 3 பிரதான காரணங்கள் இருக்கின்றன.
அதில் முதலாவது காரணம் லிங்காயத்துகளுக்கு குறைவான சீட் ஒதுக்கியது. கர்நாடகாவில் லிங்காயத்துகள் 17 சதவீதம் பேர் உள்ளனர். ஆனால் லிங்காயத்துகளுக்கு போதிய சீட் தரவில்லை. மிகவும் குறைவான சதவீதம் கொண்ட பிராமண சமூகத்தைச் சேர்ந்தவர்களுக்கு 13 சீட்கள் வழங்கப்பட்டன. இதன் பின்னணியில் பி.எல்.சந்தோஷ் இருப்பதாக குற்றம்சாட்டப்பட்டது.
2 வது காரணம், புதுமுகங்களுக்கு வாய்ப்பளித்து சீனியர்கள் ஓரம்கட்டப்பட்டதாகும். இந்த தேர்தலில் பாஜக 52 புது முகங்களுக்கு வாய்ப்பு வழங்கியது. மூத்த தலைவர்களான எடியூரப்பா, ஈஸ்வரப்பா போன்றோர் நேரடியாகவோ மறைமுகமாகவோ போட்டியிலிருந்து விலக்கப்பட்டனர். ஜெகதீஷ் ஷெட்டர், லட்சுமண் சவதி போன்ற சீனியர் தலைவர்கள் பாஜகவிலிருந்து விலகியதற்கும் இதுதான் காரணமாக பேசப்பட்டது.
கர்நாடக தேர்தலில் மோடி முகமே பிரதானமான முன்னிறுத்தப்பட்டது. எடியூரப்பா உள்ளிட்ட உள்ளூர் தலைவர்களை முன்னிறுத்தி கர்நாடகாவில் பிரச்சாரம் நடக்கவில்லை. குஜராத் போன்ற வட மாநிலங்களை போல தேசிய தலைமையை முன்னிறுத்தும் முயற்சி செய்து பார்க்கப்பட்டது. அது தோல்வியில் முடிந்துள்ளது.

3 வது காரணம், தென் மாநிலங்கள் தனி கலாசாரம் கொண்டவை, தாய்மொழி பக்தி கொண்டவை. வட மாநிலங்கள் பலவும் தங்கள் தாய்மொழியை மறந்துவிட்டு இந்தியை தங்கள் தாய்மொழி போல பாவிக்கத் தொடங்கியுள்ளன. அவர்களுக்கு வேண்டுமானால் டெல்லி தலைமை சரியாக இருக்கலாம்.
ஆனால் மாநில மற்றும் மொழிப்பற்று கொண்ட தென் இந்தியர்களுக்கு தனி தலைமைதான் எப்போதுமே விருப்பமானது. ஆக மொத்தம் 3 காரணங்களால் தனக்கு தானே தோல்வியை தேடிக்கொண்டது பாஜக. ஆனால் நீண்ட காலத்திற்கு இந்த முயற்சிதான் உதவும் என்கிறது பாஜக தரப்பு.
-
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
1 சவரன் தங்க நகை வாங்க போறீங்களா? கடைக்காரர் போடும் கணக்கில் அதிக மாற்றமா? ஏமாறாமல் இருக்க பில் தேவை -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு? -
அதை சொல்ல யாருக்கும் அருகதை இல்லை.. வீட்டிலும், ஆபீஸிலும் இதுதான் நடக்குது செல்வராகவன் ஆதங்கம் -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
48 அவுட் ஆஃப் 234! திமுக கூட்டணியில் இதுவரை எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை சீட் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000! -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
நாகர்கோவில் எம்எல்ஏ காந்திக்கு கல்தா.. பாஜக தலைமை முடிவால் கலக்கம்












Click it and Unblock the Notifications