ஒரே பொய்யில் 5.75 கோடி குவித்த பெண்.. இங்கிலாந்து டவர் சைசுக்கு பெங்களூர் தொழில் அதிபருக்கு அல்வா

Subscribe to Oneindia Tamil

பெங்களூர்: பெங்களூரைச் சேர்ந்த ரேகாவுக்கு, கடந்த 2023-ம் ஆண்டு பசவனகுடியை சேர்ந்த தொழிலதிபர் ஒருவருக்கும் பழக்கம் ஏற்பட்டதாம். அந்த தொழில் அதிபரிடம் ரூ.5.75 கோடி ரூபாயை ஏமாற்றி வாங்கிவிட்டாராம் ரேகா.. பெரிய பொய் சொல்லி ஏமாற்றி பணத்தை வாங்கியதாக குற்றம்சாட்டியிருந்தார். இந்த வழக்கில் தம்பதி உள்பட 3 பேரை மத்திய குற்றப்பிரிவு போலீசார் கைது செய்துள்ளனர்.. என்ன நடந்தது என்று இந்த பதிவில் பார்ப்போம்.

பெங்களூர் நகரில் மோசடி வழக்கில் ரேகா என்ற பெண்ணை போலீசார் கைது செய்துள்ளனர். இவர் மீது கடந்த ஆண்டு (2024) தொழில்அதிபர் ஒருவர் பசவனகுடி போலீசில் புகார் கொடுத்திருந்தார். பசவனகுடியை சேர்ந்த தொழிலதிபர் ஒருவருக்கும் ரேகாவுக்கும் கடந்த 2023 ஆண்டு பழக்கம் ஏற்பட்டதாம். அப்போது ரேகா, தொழில் அதிபரிடம் இங்கிலாந்தில் உள்ள கார்ல்டன் டவர் தீ விபத்தில் நான் முக்கிய சாட்சியாக உள்ளேன். இதுகுறித்து சாட்சி கூறாமல் இருக்க அந்த நிறுவனம் எனக்கு ரூ.25 கோடி தருவதாக கூறியிருக்கிறது என்று கூறினாராம்.

bangalore scam england

ஆனால் அந்த பணத்தை எனது வங்கி கணக்கில் வரவு வைக்க முடியாது. அதில் இருந்த ரூ.6 கோடியை அமலாக்கத்துறை, வருமான வரித்துறை அதிகாரிகள் முடக்கி வைத்திருக்கிறார்கள் என்று ரேகா கூறினாராம். மீண்டும் அந்த வங்கி கணக்கை பயன்படுத்த வேண்டும் என்றால் ரூ.7 கோடி பணம் தேவைப்படுகிறது என்று கூறினாராம் ரேகா.. இதை நம்பிய தொழில் அதிபர் ரூ.5.75 கோடியை ரேகாவிடம் கொடுத்ததாக கூறுகிறார். அதை வாங்கிய ரேகா, அந்த பணத்தை திருப்பி கொடுக்கவில்லையாம்

இதையடுத்து தான் மோசடி செய்யப்பட்டதை உணர்ந்த தொழில் அதிபர் பெங்களூர் மத்திய குற்றப்பிரிவு போலீசில் ரேகா மற்றும் அவரது கணவர் மஞ்சுநாத், நண்பர் சேத்தன் ஆகியோர் மீது புகார் கொடுத்தார். அந்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்தனர். அப்போது தான், ரேகா மீது இதேபோல 5 மோசடி வழக்கு பதிவாகி இருப்பது விசாரணையில் தெரியவந்தது.

இதை தொடர்ந்து பெங்களூர் தொழில் அதிபர் கொடுத்த புகாரின் பேரில் ரேகா, அவரது கணவர் மஞ்சுநாத், சேத்தன் ஆகிய 3 பேரையும் மத்திய குற்றப்பிரிவு போலீசார் அதிரடியாக கைது செய்தனர். அத்துடன் ரேகா, கம்ப்யூட்டர் இன்ஜினீயர் ஒருவரிடம் 'ஷேர்சேட்' செயலி மூலம் பழக்கமாகி அவரது அந்தரங்க வீடியோவை செல்போனில் பதிவு செய்து ரூ.31 லட்சத்தை பறித்ததாக புகார் எழுந்தது. அந்த புகார் குறித்தும் பசவனகுடி போலீசார் வழக்குப்பதிவு செய்திருக்கிறார்கள்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+