Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

வெற்றி சித்தராமையாவுக்கு மட்டுமல்ல! துணை முதல்வரான ஆனாலும் டிகே.சிவக்குமாருக்கும் வெற்றிதான்! எப்படி

Subscribe to Oneindia Tamil

பெங்களூர்: கர்நாடகாவில் சித்தராமையா முதல்வராகவும் டிகே சிவக்குமார் துணை முதல்வராகவும் அறிவிக்கப்பட்டுள்ளனர். இது இரு தரப்பிற்குமே கிடைத்த வெற்றிதான். ஏன் என்பதைப் பார்க்கலாம்.

கர்நாடகாவில் காங்கிரஸ் கட்சி வெற்றி பெற்ற உடன் அனைவருக்கும் எழுந்த முதல் கேள்வி அங்கே முதல்வர் யார் என்பது தான். கர்நாடகாவைப் பொறுத்தவரை சித்தராமையா, டிகே சிவக்குமார் ஆகியோர் இடையே கடும் போட்டி இருந்தது.

சுமார் 4 நாட்கள் ஆலோசனை நடைபெற்ற நிலையில், இறுதியில் சித்தராமையா முதல்வராகவும் டிகே சிவக்குமார் துணை முதல்வராகவும் அறிவிக்கப்பட்டனர். இதன் மூலம் 4 நாட்கள் நீடித்த சஸ்பென்ஸ் முடிவுக்கு வந்துள்ளது.

3 Reasons Why Siddaramaiah And DK Shivakumar won in Karnataka election

கர்நாடக முதல்வர்: சித்தராமையா மற்றும் டி.கே.சிவக்குமார் இருவரும் கர்நாடக முதல்வர் பதவிக்கான போட்டியில் இருந்தாலும் கூட, தொடக்கம் முதேல சித்தராமையா தேர்வு செய்யப்படவே அதிக வாய்ப்பு இருப்பதாகக் கூறப்பட்டது. கர்நாடக தேர்தலுக்காக டி.கே. சிவக்குமார் கடுமையாக உழைத்தார். காங்கிரஸ் வெற்றியில் அவருக்கு முக்கிய பங்கு இருக்கிறது என்பதில் மாற்றுக்கருத்து இல்லை. இருப்பினும், இந்த முறை அவர் ஒதுக்கி வழிவிட வேண்டும்.

இந்த நிலை இப்படியே தொடருமா என்பது 2024 லோக்சபா தேர்தல் முடிவுகளைப் பொறுத்து இருக்கும். சித்தராமையா முதல்வராக அறிவிக்கப்பட்டது அவருக்குக் கிடைத்த வெற்றியாக இருந்தாலும் டி.கே.சிவகுமாருக்கும் இது முக்கியமானது. சிவக்குமாருக்கு சாதகமான 3 முக்கிய அம்சங்கள்.

1) டி.கே.சிவக்குமார் ஏற்கனவே வருமான வரி மற்றும் அமலாக்கத் துறை வழக்குகளை எதிர்கொண்டுள்ளார். இந்த வழக்குகளில் மத்திய அரசு தீவிரம் காட்ட வாய்ப்புகள் உள்ளன. இதுபோன்ற வழக்குகளால் அவர் செயல்பாடுகள் குறைந்தால்.. 2024 தேர்தலுக்கு அது காங்கிரஸுக்கு பாதிப்பை ஏற்படுத்தும்.. பாஜக அரசின் மீது ஊழல் குற்றச்சாட்டுகளை வைத்து "40 சதவிகித சர்க்கார்" பிரசாரம் முன்னெடுக்கப்பட்ட நிலையில், இது முக்கியமானது.

முதல்வர் யார் என்று ஆலோசனை நடைபெற்ற சமயத்திலும் கூட, டி.கே.சிவகுமார் வழக்கு விசாரணைக்கு இடைக்காலத் தடை விதித்ததை எதிர்த்து சிபிஐ தொடர்ந்த மனு மீதான விசாரணையை உச்ச நீதிமன்றம் ஒத்திவைத்தது. இது அவர் இக்கட்டான நிலையில் இருப்பதைக் காட்டுகிறது. முதல்வர் பதவியை அவர் அடைவதைத் தடுக்க இது ஒரு முக்கிய காரணியாக இருந்தது.

2) கர்நாடகாவில் அனைத்து தரப்பு மக்களின் ஆதரவையும் கொண்ட மாஸ் லீடராக சித்தராமையா இருக்கிறார். கர்நாடகாவில் உள்ள அனைத்து பிராந்தியங்களிலும் அவருக்கு ஆதரவு இருக்கிறது. எப்போதும் பெரும்பான்மையான காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்களின் ஆதரவு அவருக்கு இருக்கிறது. அவரது அனுபவமும் 5 ஆண்டுகள் முழுமையாக முதல்வர் பதவியில் இருந்த பெயரும் அவருக்கு சாதமாக இருந்தது.

3 Reasons Why Siddaramaiah And DK Shivakumar won in Karnataka election

சிவக்குமார் இத்தனை தூரம் போட்டி தராமல் போய் இருந்தால் காங்கிரஸ் தலைமை முதலிலேயே சித்தராமையாவை அறிவித்திருக்கும். மேலும், பல முன்னாள் கேபினட் அமைச்சர்களின் ஆதரவும் சித்தராமையாவுக்கு இருந்தது.

3) டி.கே.சிவக்குமார் ஓபிசி வொக்கலிகர் சமூகத்தைச் சேர்ந்தவர். அவரை முதல்வராக அறிவித்திருந்தால், அது இதர சமூகங்களில் இருந்து காங். அரசை அந்நியப்படுத்தி இருக்க வாய்ப்பு இருக்கிறது. காங்கிரஸ் தேர்தலில் 42 சதவீத வாக்குகளைப் பெற்றுள்ள நிலையில், வொக்கலிகர் அல்லாத வாக்குகளை இழக்கக் கூடாது.

சித்தராமையாவின் நியமனம் வொக்கலிகர் சமூகத்திடம் கோபத்தைக் கிளப்பும் என்ற போதிலும், சிவகுமார் மாநிலத்தின் ஒரே துணை முதல்வராக நியமிக்கப்பட்டுள்ளது ஓரளவுக்கு இதை ஈடு செய்யும்.

4) சித்தராமையாவுக்கு பலரது ஆதரவு இருந்த போதிலும், சிவகுமார் கடைசி வரை விடவில்லை. இதன் காரணமாகவே காங்கிரஸ் தலைமை ஒருவருக்கு ஒரு பதவி என்ற விதியை தள்ளிவைத்துவிட்டு, மாநில காங்கிரஸ் தலைவராகவும், துணை முதல்வராகவும் சிவகுமாரைத் தொடர அனுமதித்தது. இது அவருக்கு அமைச்சரவையில் கணிசமான செல்வாக்கையும் கட்சியின் மீது உறுதியான பிடியையும் கொடுக்கிறது.

5) சிவகுமார் தனக்கும் அவருக்கு நெருக்கமானவர்களுக்கும் முக்கிய இலாகாக்களைப் பெறுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அமைச்சரவையில் அதிகார சமநிலை வளைந்துவிடாமல் இருக்கும் வகையில் அமைச்சரவை இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

6) சித்தராமையா 2013-2018 வரை முதல்வராக இருந்த போது, முதலாம் ஆண்டில் டிகே சிவகுமாரை அமைச்சரவையில் சேர்க்கக் கூட மறுத்தார். அப்போது மல்லிகார்ஜுன் கார்கே உட்பட மூத்த கட்சித் தலைவர்கள் கூட மாநிலத்தில் ஓரங்கட்டப்பட்டனர். பல வழிகளில், சில மூத்த தலைவர்களின் ஆதரவுடன், சிவகுமார் கடுமையாக முயன்று, சித்தராமையாவின் கண்ட்ரோல் குறைக்கப்பட்டுள்ளது.

3 Reasons Why Siddaramaiah And DK Shivakumar won in Karnataka election

சித்தராமையாவுக்கு முதல்வர் பதவி எனத் தெரிந்தாலும், அவரது அதிகாரத்தைக் குறைப்பதில் டிகே சிவக்குமார் பெரிய வெற்றியைப் பெற்றுள்ளார். அமைச்சரவையிலும் கட்சியிலும் வலுவான சக்தியாக சிவக்குமார் இனி இருப்பார். 2024 தேர்தலுக்குப் பிறகு, ஒரு மாற்றத்தை அமல்படுத்த வேண்டும் என்றால், அதிகார சமநிலை இருக்கக் கூடாது. அதை இது உறுதி செய்கிறது.

கர்நாடகாவில் இரு தரப்பையும் திருப்திப்படுத்தும் முடிவைக் காங்கிரஸ் எடுத்துள்ளது. அதேநேரம் சித்தராமையா மற்றும் சிவக்குமார் இருவரும் பழைய மைசூர் பகுதியைச் சேர்ந்தவர்கள்.. இப்போது அமைச்சரவையில் அனைத்து பகுதிகள் மற்றும் சமூகங்களுக்கும் பிரதிநிதித்துவத்தை உறுதி செய்வதே காங்கிரஸின் சவாலாகும்.

இந்தியாவைப் பொறுத்தவரை ஒரு வருடம் என்பது மிக நீண்ட காலமாகும்.. எனவே, 2024 மக்களவை தேர்தலில் என்ன வேண்டுமானாலும் நடக்கலாம்!

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+