பெங்களூரு அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

கர்நாடகாவில் தொடரும் மழை.. வெள்ளத்தால் 31 பேர் பலியான பரிதாபம்.. 1.8 லட்சம் பேர் வெளியேற்றம்!

கர்நாடகாவில் பெய்து வரும் மழை மற்றும் வெள்ளம் காரணமாக கடந்த நான்கு நாட்களில் மட்டும் அங்கு 31 பேர் பலியாகி உள்ளனர்.

Google Oneindia Tamil News

பெங்களூர்: கர்நாடகாவில் பெய்து வரும் மழை மற்றும் வெள்ளம் காரணமாக கடந்த நான்கு நாட்களில் மட்டும் அங்கு 31 பேர் பலியாகி உள்ளனர்.

தென்மேற்கு பருவ மழை தென் மாநிலங்களில் மிக மோசமாக பெய்து வருகிறது. கர்நாடகாவுக்கு, கேரளாவும் இந்த மழையால் மிக மோசமாக பாதிக்கப்பட்டுள்ளது.

கர்நாடகாவில் கடந்த 4 நாட்களாக மிக அதிக கனமழை பெய்து வருகிறது. இதனால் அங்கு பல மாவட்டங்களில் வெள்ளம் ஏற்பட்டுள்ளது.

57 பேர் பலி.. 1 லட்சம் பேர் வெளியேற்றம்.. 1300 மீட்பு முகாம்கள்.. கேரளாவை புரட்டி எடுத்த வெள்ளம் 57 பேர் பலி.. 1 லட்சம் பேர் வெளியேற்றம்.. 1300 மீட்பு முகாம்கள்.. கேரளாவை புரட்டி எடுத்த வெள்ளம்

மழை

மழை

கர்நாடகாவில் கடலோர மாவட்டங்கள் மற்றும் மேற்கு மாவட்டங்களில் கடுமையாக மழை பெய்து வருகிறது. உத்தர கர்நாடகா, சிவமோகா, பெலகாவி, மடிகேரி, மைசூர், மங்களூர், குடகு உள்ளிட்ட பகுதிகளில் மழை காரணமாக வெள்ளம் ஏற்பட்டுள்ளது.

நான்கு நாட்கள்

நான்கு நாட்கள்

இந்த மழை காரணமாக கர்நாடகாவில் கடந்த 4 நாட்களில் மட்டும் 31 பேர் பலியாகி இருக்கிறார்கள். இதில் பெரும்பாலான மக்கள் வெள்ளத்தில் மூழ்கி பலியாகி உள்ளனர். இன்னும் சிலரின் உடலை கண்டுபிடிக்க முடியாமல் மீட்பு படையினர் திணறி வருகின்றனர்.

எத்தனை பேர்

எத்தனை பேர்

அதேபோல் கடந்த நான்கு நாட்களில் மட்டும் மழையால் 1.8 லட்சம் பேர் தங்கள் வீடுகளை இழந்து உள்ளனர். இவர்கள் தற்போது பாதுகாப்பான மீட்பு முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். கர்நாடகாவில் மொத்தம் 1248 மீட்பு முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளது.

எத்தனை கிராமங்கள்

எத்தனை கிராமங்கள்

இந்த வெள்ளத்தால் 1026 கிராமங்கள் மொத்தமாக நீரில் மூழ்கி விட்டதும் குறிப்பிடத்தக்கது. இந்த வெள்ளம் காரணமாக 44 ஆயிரம் குடும்பங்கள் வீடுகளை இழந்துள்ளது. அதிகாரப்பூர்வமாக 6 ஆயிரம் கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

English summary
31 people died due to heavy rain and flood in Karnataka in 4 days.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X