கள்ளக்காதல் போதும்.. கணவன் – மனைவியை ஏமாற்றிவிட்டு ஓடிப்போய் திருமணம் செய்த ஆண்ட்டி – அங்கிள்!

Subscribe to Oneindia Tamil

பெங்களூர்: ஹோட்டலுக்கு அடிக்கடி சாப்பிட போன ஒருவர் அந்த ஹோட்டல் உரிமையாளரான பெண்ணுடன் நெருங்கி பழகினார். இந்த பழக்கம் கள்ளக்காதலாக மாறியது. இருவரும் அடிக்கடி தனிமையில் சந்தித்து உல்லாசம் அனுபவித்த நிலையில் தற்போது வீட்டை விட்டு வெளியேறி திருமணம் செய்து கொண்ட சம்பவம் நடந்துள்ளது.

கர்நாடகா மாநிலம் மண்டியா மாவட்டம் நாகமங்களா தாலுகா சிகாரிபுரா கிராமத்தை சேர்ந்தவர் யேசுதாஸ். இவருக்கு 36 வயது ஆகிறது. திருமணமாகி மனைவி, 2 குழந்தைகள் உள்ளனர். இதே கிராமத்தை சேர்ந்தவர் பவித்ரா. இவருக்கு திருமணமாகி கணவன் மற்றும் 2 குழந்தைகள் உள்ளனர்.

karnataka

பவித்ரா சொந்தமாக ஹோட்டல் நடத்தி வருகிறார். இங்கு அடிக்கடி யேசுதாஸ் சாப்பிட சென்றார். இதனால் பவித்ரா மற்றும் யேசுதாஸ் ஆகியோருக்கு இடையே பழக்கம் ஏற்பட்டது.

முதலில் இருவரும் நண்பர்களாக பழகினர். அதன்பிறகு செல்போன் எண்களை பரிமாறி கொண்டு பேசி வந்தனர். இந்த பழக்கம் நாளைடையில் இருவருக்கும் இடையே கள்ளக்காதலாக மலர்ந்தது. இருவரும் யாருக்கும் தெரியாமல் வெளியே காதல் ஜோடியாக வலம் வந்தததோடு, தனிமையில் சந்தித்து உல்லாசம் அனுபவித்து கொண்டனர்.

இதற்கிடையே தான் எவ்வளவு நாள் தான் கள்ளக்காதல் ஜோடியாக, யாருக்கும் தெரியாமல் உறவில் இருப்பது. இருவரும் திருமணம் செய்து கொண்டால் என்ன? என்பது பற்றி யோசித்தனர். இதையடுத்து கடந்த ஒரு வாரத்துக்கு முன்பு பவித்ரா மற்றும் யேசுதாஸ் ஆகியோர் திடீரென்று மாயமாகினர். இருவரும் ஒரே நேரத்தில் மாயமான நிலையில் குடும்பத்தினர் அவர்களை தேடி பார்த்தனர். ஆனால் எங்கு தேடியும் கிடைக்கவில்லை.

இந்நிலையில் தான் அவர்களின் கள்ளக்காதல் விவகாரம் இருவரின் குடும்பத்துக்கும் தெரியவந்தது. மேலும் யேசுதாஸ் - பவித்ரா ஆகியோர் வீட்டை விட்டு வெளியேறி கோவிலில் திருமணம் செய்து கொண்டது தெரியவந்தது. இருவரும் மாலை மாற்றி திருமணம் செய்து கொண்ட போட்டோவை பவித்ரா தனது கணவருக்குஅனுப்பினார். அதேபோல் யேசுதாஸ் தனது மனைவிக்கு அந்த போட்டோவை அனுப்பி வைத்தார்.

இதை பார்த்து குடும்பத்தினர் அதிர்ச்சியடைந்தனர். இதையடுத்து பவித்ராவின் கணவர் மற்றும் யேசுதாஸின் மனைவி நாகமங்களா போலீசில் புகார் செய்தார். பவித்ராவின் கணவர் அளித்த புகாரில் ''எனது மனைவி பவித்ராவை என்னுடன் சேர்த்து வைக்க வேண்டும். அவரை ஏமாற்றி யேசுதாஸ் திருமணம் செய்துள்ளார்'' என்று புகாரளித்தார். அதேபோல் யேசுதாஸின் மனைவி அளித்த புகாரில், ''என் கணவர் என்னையும், 2 குழந்தைகளையும் விட்டுவிட்டு 2வது திருமணம் செய்துள்ளார். அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்'' என்று புகாரளித்துள்ளார்.

இதுதொடர்பாக போலீசார் விசாரைண மேற்கொண்டு வருகின்றனர். கணவன் -மனைவியை விட்டு திருமணம் செய்து கள்ளக்காதல் ஜோடி தற்போது எங்கே உள்ளனர்? என்பது தெரியவில்லை. அவர்களை கண்டுபிடிக்கும் பணியில் போலீசார் ஈடுபட்டு வருகின்றனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+