பெங்களூரில் சிக்கிய '41 கோவா ஜம்பிங் சிக்கன்'! ஒன்னுமே புரியலையா? உள்ளே படியுங்க 'நல்லாவே' புரியும்!
பெங்களூர்: நீங்கள் கோவாவுக்கு சுற்றுலா போயிருக்கிறீர்களா? கோவாவில் விலை உயர்ந்த உணவான ' ஜம்பிங் சிக்கன்' 1 பிளேட் ரூ1,500 என வாங்கி சாப்பிட்டது உண்டா? கோவாவுக்கு இனி மேல் சுற்றுலா செல்ல திட்டமிட்டிருக்கிறீர்களா? நிச்சயம் உங்களுக்கான செய்திதான் இது.. முழுமையாக பொறுமையாக படிக்கவும்.
பொதுவாக பெங்களூரில் இருந்து கோவா செல்லும் வாகனங்கள் கடும் கண்காணிப்புக்குள்ளாக்கப்படும். பெங்களூர் நகரில் இருந்து கோவாவுக்கு கடத்தப்படும் சில பொருட்களை கோவாவுக்குள் நுழைய விடாமல் தடுக்கத்தான் இந்த தீவிரமான கண்காணிப்புகள்.

இப்படியான கண்காணிப்புகளுக்கு நடுவேதான் பெங்களூர்- கோவா பேருந்தில் அந்த '41 ஜம்பிங் சிக்கன்' சிக்கியது. அதுவும் கோவா புகழ் ஜம்பிங் சிக்கன் 41-ம் "உயிருடன்" சிக்கியதுதான்.. இதனால் பேருந்து ஓட்டுநர், நடத்துநர் இருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர். சரி அதென்னய்யா ஜம்பிங் சிக்கன்? அதுவும் உயிருடன் சிக்கிய ஜம்பிங் சிக்கன்..
அடவேறு ஒன்றும் இல்லை.. கோவாவில் வெளிநாட்டவரும் சுற்றுலாப் பயணிகளும் பெரிதும் விரும்பி சாப்பிடக் கூடியதுதான் ஜம்பிங் சிக்கன். இது ஒரு பிளேட் ரூ1,500. இப்பவரைக்கும் அந்த ஜம்பிங் சிக்கன் பற்றி சொல்லவே இல்லையே?
அதுவேறொன்றும் இல்லைங்க.. கர்நாடகா மாநிலத்தின் கிடைக்கும் ஒருவகை 'அரிய தவளை'தான்.. இந்த அரிய வகை தவளைகள் கர்நாடகாவில் இருந்து கோவாவுக்கு கடத்திச் செல்லப்பட்டு 'தவளை லெக் பீஸ் பிரை'யாக விற்பனை செய்யப்படும். இதற்கு பெயர்தான் கோவாவில் 'ஜம்பிங் சிக்கன்'. 41 தவளைகளை உயிருடன் கர்நாடகாவில் இருந்து கோவாவுக்கு கடத்திய போதுதான் ஓட்டுநரும் நடத்துநரும் சிக்கி இருக்கின்றனர். கர்நாடகா தவளைகளை கோவாவுக்கு கடத்துவதைத் தடுக்க பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டும் 'ஜம்பிங் சிக்கன்' கடத்தல் தொடரத்தான் செய்கிறதாம்.
கர்நாடகா- கோவா இடையே தவளை கடத்தல் நடைபெறுவதைப் போல வடகிழக்கு மாநிலங்களில் 'தெருநாய்கள்' கடத்தப்பட்டு பறிமுதல் செய்யப்பட்ட சம்பவங்களும் நிகழ்ந்துள்ளன. நாகாலாந்து மாநிலத்தில் நாய் இறைச்சி அமோகமாக விற்பனையாகின. நாய்களை கொடூரமாக கொலை செய்து நாகாலாந்தின் அத்தனை உணவகங்களிலும் ஸ்பெஷல் அயிட்டமாக நாய்க்கறி விற்பனை செய்யப்பட்ட காலத்தில்தான் இத்தகைய 'நாய்' கடத்தல் சம்பவங்கள் நடைபெற்றன என்பது குறிப்பிடத்தக்கது.
-
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது!












Click it and Unblock the Notifications