"முதல்வர்" கனவு எல்லாம் இருக்கட்டும்! சொந்த தொகுதியிலேயே குமாரசாமிக்கு உள்ள சிக்கல்! என்ன செய்வார்
பெங்களூர்: கர்நாடகாவில் இன்று சட்டசபைத் தேர்தல் முடிவுகள் வெளியாகும் நிலையில், ஜேடிஎஸ் தலைவரும், இரண்டு முறை முதல்வராகவும் இருந்த எச்.டி.குமாரசாமி சொந்த தொகுதியிலேயே கடும் போட்டியை எதிர்கொள்கிறார். இதுவரை வாக்கு எண்ணிக்கையில் முன்னிலை, பின்னடைவு என மாறி மாறி இருந்து வருகிறார்.
கர்நாடகாவில் இன்று சட்டசபைத் தேர்தல் முடிவுகள் வெளியாகிறது. அங்கே மொத்தம் இருக்கும் 224 தொகுதிகளில் பெரும்பான்மையுடன் ஆட்சியை அமைக்க 113 இடங்களில் வெல்ல வேண்டும் என்ற சூழலில் இன்று வாக்கு எண்ணிக்கை நடைபெறுகிறது.

இன்று வாக்கு எண்ணிக்கை நடைபெறும் நிலையில், எக்ஸிட் போல்கள் சிலவற்றில் அங்கே தொங்கு சட்டசபை அமையும் என கணிக்கப்பட்டிருந்தது. இதனால் கடந்த தேர்தலைப் போல ஜேடிஎஸ் மீண்டும் அங்கே கிங் மேக்கராக உருவாகும் என்றும் கூறப்படுகிறது.
குமாரசாமி: கர்நாடக மாநிலத்தில் மர பொம்மைகள் மற்றும் பட்டுப்புழு வளர்ப்புக்குப் பெயர் பெற்ற தொகுதி ராமநகரா மாவட்டம் சன்னபட்னா ஆகும். அங்கே இப்போது மிகவும் கடுமையான ஒரு போட்டி நிலவி வருகிறது. அங்கு ஜேடிஎஸ் தலைவரும், இரண்டு முறை முதல்வராக இருந்த எச்.டி.குமாரசாமிக்கும், பாஜகவின் சி.பி.யோகேஸ்வராவுக்கும் இடையே கடும் போட்டி நிலவுகிறது.
இருவரும் இப்பகுதியில் ஆதிக்கம் செலுத்தும் வொக்கலிகர் சமூகத்தைச் சேர்ந்தவர்கள் ஆகும்.. இது தவிரக் காங்கிரஸ் சார்பில் கங்காதரும் களமிறங்கியிருந்தார்.
யோகேஸ்வரா: இதில் யோகேஸ்வரா 1999 முதல் சுயேட்சையாகவும், காங்கிரஸ், பாஜக மற்றும் சமாஜ்வாடி கட்சி ஆகியவற்றிலிருந்து ஐந்து முறை தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். கடந்த 2018இல் இங்கே குமரசாமி களமிறங்கிய நிலையில், யோகேஸ்வரா அந்தத் தேர்தலில் தோல்வியடைந்தார்.
அந்தத் தேர்தலில் குமாரசாமி 21,530 வாக்குகள் வித்தியாசத்தில் யோகேஸ்வராவை தோற்கடித்தார். முன்னதாக 2013 தேர்தலில், எஸ்பி சார்பில் இறங்கிய யோகேஸ்வரா 6,464 வாக்குகள் வித்தியாசத்தில் குமாரசாமியின் மனைவி அனிதா குமாரசாமியைத் தோற்கடித்தார்.
குமாரசாமி, யோகேஸ்வரா என இருவருக்கும் சினிமாவுடன் தொடர்பு இருக்கிறது. குமாரசாமி திரைப்பட தயாரிப்பாளர், வினியோகஸ்தர் இருந்தவர். அதேநேரம் யோகேஸ்வரா சில படங்களில் நடித்துள்ளார். இருவருக்கும் இடையே இந்தத் தொகுதியில் கடும் போட்டி நிலவும் என்றே கூறப்படுகிறது.
கடும் போட்டி: இருவருக்கும் அங்குள்ள தொகுதி மக்களிடையே நல்மதிப்பும் மரியாதையும் இருக்கிறது. இதில் யோகேஸ்வரா அப்பகுதி மக்களிடையே பிரபலமானவர். அங்கே அவர் எம்எல்ஏவாக இருந்த போது, ஏரிகள் மற்றும் நீர்த்தேக்க தொட்டிகள் என அவரது வளர்ச்சிப் பணிகளை மக்கள் மறக்கவில்லை. அதேநேரம் மறுபுறம் வரும் காலத்தில் முதல்வராக வாய்ப்புள்ள குமாரசாமியை தேர்ந்தெடுக்கும் வாய்ப்பையும் இங்குள்ள ஒரு தரப்பு மக்கள் இழக்க விரும்பவில்லை.
கடந்த 2018இல் சன்னபட்னா மற்றும் ராமநகர் என இரு தொகுதியில் இறங்கிய குமாரசாமி, சன்னபட்னாவில் தான் எம்எல்ஏ பதவியைத் தக்க வைத்துக் கொண்டார். அதன்பிறகு ஜேடி(எஸ்)-காங்கிரஸ் கூட்டணி ஆட்சியின் 14 மாத ஆட்சியில் அவர் முதல்வராகவே இருந்தார்.
இப்படி இரு தரப்பை தேர்ந்தெடுக்கவும் பல காரணங்கள் இருப்பதாகத் தெரிவிக்கும் அத்தொகுதி மக்கள், குமாரசாமி அல்லது யோகேஸ்வரா இருவரில் யார் வேண்டுமானாலும் வெற்றி பெறலாம். ஆனால் அது கடைசியில் முடிவெடுத்த 16,000 பேரைப் பொறுத்தே இருக்கும் என்கிறார்கள்.
இது குறித்து அப்பகுதி மக்கள் கூறுகையில், "இருவருக்கும் தலா 58,000-60,000 வாக்குகள் உள்ளன.. இந்தத் தேர்தலில் கட்சி சாராதவர்களே யாருக்கு வெற்றி என்பதை முடிவு செய்வார்கள். காங்கிரஸ் வேட்பாளர் அதிக வாக்குகளைப் பிரித்தால் அது யோகேஸ்வராவின் வாய்ப்புகளைப் பாதிக்கும்" என்கிறார்.
-
பிராய்லர் சிக்கன் சாப்பிட்டால் சிறுமிகள் சீக்கிரம் பருவமடைகிறார்களா? 65 சாப்பிடலாமா? FSSAI விளக்கம்? -
கங்கை அமரன் போட்ட போடு! பாரதிராஜாவின் 500 கோடி சொத்தில் வெடித்த சர்ச்சை! நீலாங்கரை பங்களா யாருக்கு -
40,000 கோடி முதலீட்டில் கப்பல் தளம்! அமைச்சர் கீர்த்தனாவின் மாஸ்டர் மூவ்! ஆனால் கனிமொழி சொல்வதென்ன -
ராஜ்மோகன் மெகா அறிவிப்பு.. அரசு பள்ளி மாணவர்களுக்கு சிறப்பு திட்டம்.. 5000 அரசுப் பள்ளிகளுக்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு வருகிறேன்! முடிவை அறிவித்தார் லாரன்ஸ்! விஜய்யின் தவெகவா? அண்ணாமலை இயக்கமா? -
"மீட்டிங் போட்டு.. யாரும் கமிஷன் தர வேண்டாம்னு சொன்னவரு.." ஆதவ் அர்ஜுனாவை புகழ்ந்து தள்ளிய ராஜ்மோகன் -
10 பைசா செலவு இல்லாம.. ரூ.7 லட்சம் கிடைக்கும்.. எத்தனை பேருக்கு இப்படியொரு திட்டம் இருப்பது தெரியும்? -
சிபிஐ எந்த கூட்டணியிலும் இல்லை.. தவெகவுக்கு எதிராக போராட்டத்தை அறிவித்த வீரபாண்டியன்! -
கடன் சுமையை சமாளிக்க முடியல.. அதிமுகவினர் தவெகவிற்கு தாவ இதுதான் காரணமா? ஆட்டம் காணும் அடித்தளம்! -
அறிவாலயத்தை உலுக்கிய ஆய்வுக்குழு! சேகர்பாபு மீது அடுக்கப்பட்ட குற்றச்சாட்டுகள்.. டென்ஷனில் ஸ்டாலின்! -
ஐடி துறையை கதறவிட்ட எலான் மஸ்க்! ஒரே ஆண்டில் கோடிங் எழுதும் வேலையை மொத்தமாக AI காலி செய்யுமாம்! -
“ஆண் உறுப்பின் சைஸை பார்ப்போம்..” பெண் டாக்டர் பேச்சால் சர்ச்சை! சவக்கிடங்கில் இதுதான் நடக்குதா?












Click it and Unblock the Notifications