5 வயது சிறுமி கடத்தி பலாத்காரம்.. பீகாரை சேர்ந்தவர் என்கவுண்டரில் சுட்டுக்கொலை.. போலீஸ் அதிரடி

Subscribe to Oneindia Tamil

பெங்களூர்: கர்நாடகாவில் 5 வயது சிறுமியை கடத்தி பாலியல் பலாத்காரம் செய்து கொன்ற 35 வயது நிரம்பிய பீகாரை சேர்ந்த இளைஞரை போலீசார் கைது செய்ய முயன்றனர். அப்போது போலீசாரை தாக்கிவிட்டு அவர் தப்பிக்க முயன்றபோது துப்பாக்கியால் என்கவுண்டர் செய்ததில் குண்டு பாய்ந்து அவர் இறந்தார்.

கர்நாடகா மாநிலம் கொப்பல் மாவட்டத்தை சேர்ந்த தம்பதி தனது 5 வயது மகளுடன் தார்வார் மாவட்டம் உப்பள்ளியில் தங்கி உள்ளார். சிறுமியின் தாய் ஹவுஸ் ஹெல்பராக வேலை செய்து வருகிறார். சிறுமியின் தந்தை பெயிண்டராக இருக்கிறார்.

5-year-old-girl-kidnapped-and-murdered-by-bihar-man-now-he-killed-in-police-encounter

இந்நிலையில் சிறுமியை அழைத்து கொண்டு அவரது தாய் வீட்டு ஒன்றில் வேலை செய்து கொண்டிருந்தார். சிறுமி வீட்டருகே விளையாடி கொண்டிருந்தாள். அப்போது திடீரென்று சிறுமி மாயமானார். சிறுமியை அவரது தாய் தேடிப்பார்த்தார்.

அப்போது வீட்டு முன்பக்கத்தில் உள்ள கழிவறையில் சிறுமி மயங்கிய நிலையில் கிடந்தாள். உடனடியாக சிறுமி மீட்கப்பட்டு அருகே உள்ள மருத்துவமனை கொண்டு சென்றனர். அங்கு சிறுமியை பரிசோதித்த டாக்டர்கள் ஏற்கனவே சிறுமி இறந்துவிட்டதாக தெரிவித்தனர். இதுபற்றி போலீசார் விசாரணையை மேற்கொண்டனர். அங்கிருந்த கண்காணிப்பு கேமராவை ஆய்வு மேற்கொண்டனர்.

அப்போது சிறுமியை ஒருவர் கடத்தி செல்வது தெரியவந்தது. இதையடுத்து அவர் யார்? என்பது பற்றி விசாரித்தனர். விசாரணையில் அந்த நபர் பீகார் மாநிலம் பாட்னாவை சேர்ந்தவர் என்பது அவரது பெயர் நிதிஷ் குமார் (வயது 35) என்பதும் தெரியவந்தது. மேலும் அவர் சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்து கொலை செய்ததும் தெரியவந்தது. அவரை கைது செய்ய போலீசார் தீவிர நடவடிக்கையை எடுத்தனர்.

நிதிஷ் குமார் இருக்கும் இடத்தை போலீசார் நெருங்கினர். போலீசாரை பார்த்த அவர் தாக்கிவிட்டு ஓடினார். போலீசார் சரணடையும்படி கூறினர். ஆனால் அவர் கேட்காமல் ஓடினார். விரட்டி பிடிக்க முயன்ற போலீசாரையும் தாக்கினார். இதனால் போலீசார் தற்காப்புக்காக நிதிஷ் குமாரை நோக்கி துப்பாக்கியால் சுட்டனர். இதில் உடலில் குண்டு பாய்ந்து அவர் பரிதாபமாக இறந்தார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+