பொண்ணுக்கு 20 வயசு.. பையனுக்கு 17.. பேஸ்புக்கால் வந்த விபரீதம்.. அதிர வைத்த சம்பவம்
பெங்களூர்: அந்தப் பெண்ணுக்கு 20 வயது.. பிஎஸ்சி நர்சிங் படித்து வருகிறார்.. ஆனால் மணம் முடித்தது 17 வயது சிறுவனை.
பேஸ்புக் மூலம் பழக்கமாகி இப்படி ஒரு விபரீத முடிவை இரண்டு பேரும் எடுக்க, இப்போது காவல்துறையின் வழக்கை சந்தித்துக் கொண்டிருக்கிறது இந்த ஜோடி.
நமது அண்டை மாநிலமான கர்நாடகாவில்தான் இப்படி ஒரு பேஸ்புக் அவசர காதல் அரங்கேறியுள்ளது.

பேஸ்புக் பழக்கம்
பெங்களூரை சேர்ந்தவர் 20 வயது இளம்பெண். குடகு மாவட்டம் மடிகேரி நகரில் தங்கி இருந்து பிஎஸ்சி நர்சிங் படித்து வருகிறார். படிப்பு நேரம்போக அவ்வப்போது செல்போனில் ஃபேஸ்புக் பார்த்துக்கொண்டு இருப்பது இவரது பழக்கம். இப்படித்தான் 17 வயதாகும் சிக்மங்களூர் பகுதியை சேர்ந்த ஒரு சிறுவன் இவருக்கு பழக்கமாகி உள்ளான்.

காதல் முற்றியது
பக்கத்து மாவட்டங்கள் என்பதால் முதலில் நட்புடன் பழக ஆரம்பித்துள்ளனர். இப்படியே சாட்டிங் செய்து செய்து ஒரு கட்டத்தில் இந்த நட்பு காதலாக மாறிவிட்டது. அதுவும் உடனே திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்று அவசரம் காட்டும் அளவிற்கு காதல் முற்றிப் போனது.
இவர்கள் திருமணம் செய்ய விரும்பியபோது, மணமகன் சிறுவனாக இருப்பதை புரிந்து கொண்ட பெண் வீட்டார் அதற்கு எதிர்ப்பு தெரிவித்து உள்ளனர். ஆனால் தனது முடிவில் உறுதியாக இருந்த அந்த பெண் கடந்த 16ஆம் தேதி கோவில் ஒன்றில் வைத்து திருமணம் செய்துள்ளார். இந்த திருமணத்தில் மணமகனின் உறவினர்கள் பங்கேற்றுள்ளனர்.

விசாரணையில் திடுக்கிடும் தகவல்கள்
இது எப்படியோ குழந்தைகள் நலத்துறை கவனத்துக்கு சென்று விட்டது. ஊர்க்காரர்கள் அல்லது பெண்வீட்டார் இவர்களில் யாரோ குழந்தைகள் நல அமைப்புக்கு தொலைபேசியில் தொடர்புகொண்டு புகார் தெரிவித்துள்ளனர். இதையடுத்து குழந்தைகள் நலத்துறை அதிகாரிகள் திருமணம் நடைபெற்ற ஊருக்குச் சென்று இருவரிடமும் விசாரணை நடத்தினர். அப்போது சிறுவனுக்கு, 21 வயது என்று பொய்யான தகவலை தெரிவித்து திருமணம் செய்துள்ளது அம்பலமாகியுள்ளது.

குஜராத்தில் பலாத்காரம்
இதையடுத்து திருமணம் செய்து அந்தப் பெண் மட்டுமில்லாது, சிறுவனின் குடும்பத்தினர் மற்றும் திருமணத்தில் பங்கேற்ற உறவுக்காரர்கள் மீது வழக்கு பதிவு செய்துள்ளது காவல்துறை. சமீபத்தில் 23 வயது பெண் 17 வயது சிறுவனுடன் பாலியல் உறவு கொண்ட சம்பவம் குஜராத் மாநிலத்தில் நடைபெற்றது. சிறுவனை பலாத்காரம் செய்த குற்றத்தின் கீழ் பெண் மீது காவல்துறை வழக்கு பதிவு செய்தது. இப்போது கர்நாடகாவிலும் வயது குறைவான சிறுவனை, இளம்பெண் திருமணம் முடித்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.











Click it and Unblock the Notifications