அடுத்தவர் மனைவியை கர்ப்பமாக்கிய ஜிம் பயிற்சியாளர்.. தாலி கட்டும் நேரத்தில் அதிரடி கைது

Subscribe to Oneindia Tamil

பெங்களூர்: அடுத்தவர் மனைவியை திருமணம் செய்வதாக கூறி ஆசை வார்த்தை கூறி, கர்ப்பமாக்கிய ஜிம் பயிற்சியாளர், அவரது திருமண நாளன்று கைது செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பெங்களூர் அடுத்த தொட்டபள்ளாப்பூர் பகுதியை சேர்ந்தவர் கவுதம் (31). அப்பகுதியில் புல்லட் ஜிம் என்ற பெயரில் உடற்பயிற்சி கூடம் நடத்தி வந்தார். பயிற்சியாளராகவும் இருந்தார்.

A Gym owner arrested for rape charge near Bangalore

இந்த ஜிம் ஆண் மற்றும் பெண்களுக்காக தனித்தனியாக இயங்கக்கூடியதாகும். இந்த நிலையில், கடந்த வருடம் அந்த ஜிம்மில் ஸ்வேதா (பெயர் மாற்றப்பட்டுள்ளது, வயது 24), உடற்பயிற்சி செய்ய இணைந்துள்ளார்.

ஸ்வேதாவின் செல்போன் எண்ணை ரிஜிஸ்டரில் இருந்து எடுத்துக் கொண்ட கவுதம், ஸ்வேதாவுக்கு போன் செய்து, உடற்பயிற்சி, உடலை பக்குவமாக பராமரிப்பது குறித்து, டிப்ஸ் கொடுப்பது போல பேச்சுக் கொடுத்துள்ளார். இந்த பேச்சு நாளடைவில் இருவர் நடுவே நெருக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.

இப்படி பேசிக்கொண்டு இருந்தபோது, ஒருநாள், ஸ்வேதா தனக்கு ஏற்கனவே திருமணமாகிவிட்டதை கவுதமிடம் தெரிவித்துள்ளார். ஆனால், கருத்து வேற்றுமையால், ஓராண்டாக, கணவரைவிட்டு பிரிந்து அப்பா வீட்டில் வசித்து வருவதாகவும் ஸ்வேதா கூறியுள்ளார். இதைக்கேட்டதும், கவுதமுக்கு சபலம் தட்டியது. ஸ்வேதாவுக்கு ஆறுதல் சொல்வது போல மேலும் நெருக்கத்தை அதிகரித்துள்ளார். இதன்பிறகு, திருமண ஆசை காட்டி, ஜிம் வளாகத்தில் வைத்தே ஸ்வேதாவுடன் உடலுறவு கொண்டுள்ளார். பிறகு வெவ்வேறு இடங்களுக்கும் ஸ்வேதாவை கூட்டிச் சென்று, உல்லாசம் அனுபவித்துள்ளார். இதனால் ஸ்வேதா கர்ப்பமானார்.

இதையறிந்ததும், கருவை கலைத்துவிட சொல்லி, மூளைச்சலவை செய்து வெற்றி பெற்றுவிட்டார் கவுதம். திருமணத்திற்கு பிறகு குழந்தை பெற்றுக்கொள்ளலாம் என்று ஸ்வேதாவிடம் சொல்லி கருவை கலைக்கச் செய்துள்ளார். இதன்பிறகும், ஸ்வேதாவுடன் உறவு வைத்துக்கொண்டார் கவுதம். மீண்டும் ஸ்வேதா கர்ப்பமானதும், அவரைவிட்டு விலக தொடங்கினார்.

இன்னொரு பெண்ணுக்கும் கவுதமுக்கும் நடுவே திருமணம் நிச்சயமாகி, 8 மற்றும் 9ம் தேதிகளில் திருமண வரவேற்பு மற்றும் திருமணத்திற்கு நாள் குறிக்கப்பட்டது. இதையறிந்த ஸ்வேதா, காவல் நிலையத்தில், கவுதம் மீது புகார் கொடுத்தார். இதையடுத்து தாலி கட்டும் நேரத்தில் சினிமா போலீஸ் பாணியில் அதிரடியாக மண்டபத்திற்குள் நுழைந்த காவல்துறையினர் கவுதமை ஜீப்பில் அள்ளிப்போட்டு கொண்டு சென்றுவிட்டனர்.

இந்த விவகாரம் தெரிந்தும், கவுதமுக்கு திருமணம் செய்து வைக்க முயன்ற அவரின் தந்தை ராஜண்ணாவும் கைது செய்யப்பட்டுள்ளார். கவுதம் மீது பலாத்கார வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+