Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

UPI ஷாக்.. காய்கறி விற்கும் பெட்டிக்கடைக்காரர்களுக்கு.. ₹29 லட்சம் ஜிஎஸ்டி நோட்டீஸ் அனுப்பிய அரசு!

Subscribe to Oneindia Tamil

பெங்களூர்: நீங்கள் ஜிஎஸ்டியில் பதிவு செய்யப்படாவிட்டாலும், வருமான வரித் துறையினர் உங்களைக் கண்காணிக்கலாம் என்று மத்திய அரசு தொடர்ந்து கூறி வருகிறது. கர்நாடகாவின் ஹவேரியைச் சேர்ந்த காய்கறி வியாபாரி ஒருவருக்கு ₹29 லட்சம் ஜிஎஸ்டி செலுத்தும்படி நோட்டீஸ் அனுப்பப்பட்டதே இதற்குச் சான்று என்பது குறிப்பிடத்தக்கது.

ஷங்கர்கௌடா ஹடிமணி என்ற அந்த வியாபாரி ஜிஎஸ்டியில் பதிவு செய்தவர் அல்ல. அவர் கடந்த நான்கு வருடங்களாக முனிசிபல் உயர்நிலைப் பள்ளி மைதானத்தின் அருகே ஒரு சிறிய கடையை நடத்தி வருகிறார். ஷங்கர்கௌடா பெரும்பாலும் யுபிஐ மற்றும் பிற டிஜிட்டல் வாலெட்கள் மூலம் பணம் பெற்று வந்துள்ளார். ஜிஎஸ்டி அதிகாரிகள் அளித்த தகவலின்படி, கடந்த நான்கு வருடங்களில் அவர் டிஜிட்டல் முறையில் ₹1.63 கோடி வரை பரிவர்த்தனை செய்துள்ளார். இதுவே ஜிஎஸ்டி நோட்டீஸுக்குக் காரணம் என்று கூறப்படுகிறது.

UPI

யுபிஐ payments-ஐ முற்றிலும் நிறுத்திவிட்டார்

அதிகாரிகள் அனுப்பிய நோட்டீஸில், "கடந்த நான்கு வருடங்களில் நீங்கள் ₹1.63 கோடிக்கு பரிவர்த்தனை செய்துள்ளீர்கள், எனவே நீங்கள் ₹29 லட்சம் ஜிஎஸ்டி செலுத்த வேண்டும்" என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த வரி நோட்டீஸ் ஷங்கர்கௌடாவை மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளாக்கியுள்ளது. இதன் காரணமாக அவர் யுபிஐ payments-ஐ முற்றிலும் நிறுத்திவிட்டார்.

இதுகுறித்து அவர் கூறுகையில், "நான் விவசாயிகளிடம் இருந்து காய்கறிகளை வாங்கி, முனிசிபல் உயர்நிலைப் பள்ளி மைதானத்தின் அருகே உள்ள எனது சிறிய கடையில் விற்பனை செய்கிறேன். இப்போது வாடிக்கையாளர்கள் பெரும்பாலும் யுபிஐ மூலம் பணம் செலுத்துகிறார்கள். நான் ஒவ்வொரு வருடமும் வருமான வரி (I-T) கணக்குகளைச் சரியாகத் தாக்கல் செய்கிறேன். அதற்கான ஆவணங்களும் என்னிடம் உள்ளன. இந்நிலையில் ஜிஎஸ்டி அதிகாரிகள் ₹29 லட்சம் வரி செலுத்த வேண்டும் என்று நோட்டீஸ் அனுப்பியுள்ளனர். என்னால் இவ்வளவு பெரிய தொகையை எப்படிச் செலுத்த முடியும்?" என்று கேள்வி எழுப்பியுள்ளார்.

இந்தியாவில், புதிய மற்றும் பதப்படுத்தப்படாத காய்கறிகளுக்கு ஜிஎஸ்டி கிடையாது. அதாவது, அவற்றுக்கு 0 சதவீத வரி விதிக்கப்படுகிறது. இந்த விலக்கு விவசாயிகள் அல்லது சில்லறை விற்பனையாளர்கள் விற்பனை செய்யும் புதிய, குளிரூட்டப்பட்ட அல்லது பதப்படுத்தப்படாத காய்கறிகளுக்குப் பொருந்தும். அதே சமயம், உறைந்த, பதப்படுத்தப்பட்ட, பேக் செய்யப்பட்ட அல்லது லேபிளிடப்பட்ட காய்கறிகளுக்கு 5 சதவீதம் அல்லது அதற்கு மேற்பட்ட ஜிஎஸ்டி விதிக்கப்படலாம். உதாரணமாக, உலர்ந்த, முன் பேக் செய்யப்பட்ட மற்றும் லேபிளிடப்பட்ட காய்கறிகளுக்கு பொதுவாக 5 சதவீதம் ஜிஎஸ்டி விதிக்கப்படுகிறது. மேலும் பதப்படுத்தப்பட்ட பொருட்களுக்கு 12 சதவீதம் வரை வரி விதிக்கப்படலாம்.

இந்தியாவில் உள்ள சிறு வியாபாரிகள், அவர்களின் ஆண்டு வருமானம் ₹2.5 லட்சத்துக்கு அதிகமாக இருந்தால் வருமான வரி அறிக்கையை (ITR) தாக்கல் செய்ய வேண்டும். பெரும்பாலான சிறு வியாபாரிகள், குறிப்பாக ₹50 லட்சத்துக்குள் வருமானம் உள்ளவர்கள் மற்றும் வருமானத்தை மதிப்பிடும் முறையைத் தேர்ந்தெடுப்பவர்கள் ITR-4 (சுகம்) படிவத்தைப் பயன்படுத்த வேண்டும்.

இந்தத் திட்டத்தின் கீழ், வியாபாரிகள் தங்கள் மொத்த வருமானத்தில் ஒரு குறிப்பிட்ட சதவீதத்தை லாபமாக அறிவித்தால் போதும். இதன் மூலம் கணக்கு தாக்கல் செய்வது எளிதாகும். வருமான வரி அறிக்கைகளை வருமான வரித் துறையின் இணையதளம் மூலம் ஆன்லைனில் தாக்கல் செய்யலாம். 2024-25 நிதியாண்டுக்கான (FY) வருமான வரி அறிக்கையைத் தாக்கல் செய்ய வேண்டிய கடைசி தேதி செப்டம்பர் 15, 2025.

பறக்கும் நோட்டீஸ்

இந்தியாவில் யு.பி.ஐ தீவிரமாக பயன்படுத்தப்படும் நகரங்களில் ஒன்று பெங்களூர். தற்போது அங்கே முழுக்க முழுக்க 90% சிறு - குறு கடைகளில் யு.பி.ஐ சேவை நிறுத்தப்பட்டு உள்ளது. கர்நாடக வணிக வரித்துறை, மாநிலம் முழுவதும் உள்ள சிறு வணிகர்களுக்கு ஜிஎஸ்டி (GST) வரி செலுத்தக் கோரி நோட்டீஸ் அனுப்பியுள்ளது. அவர்கள் பயன்படுத்தும் யு.பி.ஐ மூலம் வருவாயை கண்டறிந்து.. இந்த நோட்டீசை அனுப்பி உள்ளனர். இதனால் பலரும் அதிர்ச்சி அடைந்துள்ளனர். மேலும், பல வணிகர்கள் பணப் பரிவர்த்தனையை மட்டுமே மேற்கொண்டு வருகின்றனர்.

2021-22 முதல் 2024-25 வரையிலான நிதியாண்டுகளின் யுபிஐ (UPI) மற்றும் பிற டிஜிட்டல் பரிவர்த்தனை தளங்களில் இருந்து பெறப்பட்ட தரவுகளின் அடிப்படையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. டிஜிட்டல் பரிவர்த்தனைகள் மூலம் மட்டும் ரூ.20 லட்சம் (சேவைகள்) அல்லது ரூ.40 லட்சம் (சரக்குகள்) வர்த்தகம் செய்தவர்களுக்கு, பதிவு மற்றும் வரி செலுத்துமாறு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.

பெங்களூரு மற்றும் பிற நகரங்களில் உள்ள தேநீர் கடைகள், பேக்கரிகள் மற்றும் சிறிய கடைகள் உட்பட பல விற்பனையாளர்கள் யுபிஐ பரிவர்த்தனைகளை தவிர்த்து வருகின்றனர். இதன் காரணமாக பல கடைகளில் "யுபிஐ இல்லை" என்ற அறிவிப்பு பலகையை காண முடிகிறது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+