கர்நாடகாவில் நண்பன் செய்த மன்னிக்க முடியாத துரோகம்.. காதலனுடன் ஓடும் போதும்.. சும்மா போகாத மனைவி
பெங்களூர்: கர்நாடகா மாநிலம் பெலகாவி மாவட்டம் கானாபுராவை அடுத்த நந்தகடாவை சேர்ந்த ஆட்டோ டிரைவர் ஆசிப்பை, மாசாவி என்பவர் கடந்த ஏழு வருடங்களுக்கு முன்பு திருமணம் செய்தார். இவர்களுக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில் மாசாவிற்கு அந்த பகுதியைச் சேர்ந்த இளைஞருடன் பழக்கம் ஏற்பட்டது. இதனால் அந்த பெண் தனது 2 குழந்தைகள், நகை-பணத்தை எடுத்து கொண்டு கள்ளக்காதலனுடன் எஸ்கேப் ஆகிவிட்டார்.
கர்நாடகா மாநிலம் பெலகாவி மாவட்டம் கானாபுராவை அடுத்த நந்தகடாவை சேர்ந்த 33 வயதாகும் ஆசிப் ஆட்டோ டிரைவர் ஆவார். ஆசிப்பின் மனைவி பெயர் மாசாவி (28). கடந்த 7 ஆண்டுகளுக்கு முன்பு காதலித்து திருமணம் செய்து கொண்ட ஆசிப் மாசாவி தம்பதிக்கு மாஹிரா (7), அனியா (2) என்ற 2 குழந்தைகள் உள்ளனர்.

இந்த நிலையில் மாசாவிக்கும் பெலகாவி மாவட்டம் கானாபுராவை அடுத்த மாரிகாலாவை சேர்ந்த பசவராஜ் (30) என்பவருக்கும் பழக்கம் ஏற்பட்டது. இந்த பசவராஜ் யார் என்றால் ஆசிப்பின் நெருங்கிய நண்பர். நண்பர் என்ற முறையில் அடிக்கடி பசவராஜ் வீட்டிற்கு வந்து போன நிலையில், நண்பனுடன் இருந்த நட்பு, அவரது மனைவியான மாசாவி உடனும் ஏற்பட்டுள்ளது. பசவராஜ் அடிக்கடி வீட்டுக்கு வந்து சென்றதால், மாசாவியுடனான பழக்கம் பின்னாளில் கள்ளக்காதலாக மாறியது.
இந்த கள்ளக்காதல் விவகாரம் ஆசிப்புக்கு கடைசி வரை தெரியவே இல்லை.. இந்த நிலையில், கடந்த புத்தாணடு நாளான ஜனவரி 1-ம் தேதி மாசாவி தனது 2 குழந்தைகளுடன், கள்ளக்காதலன் பசவராஜுடன் வீட்டை விட்டே ஒடிவிட்டார். கள்ளக்காதலனுடன் செல்லும்போது மாசாவி சும்மா போகவில்லை.. கணவர் ஆசிப்பின் கார், 2 சொத்து ஆவணங்கள், 60 கிராம் தங்க நகைகள், ரூ.5 லட்சம் ரொக்கப்பணம் ஆகியவற்றை எடுத்து சென்றுள்ளார். இதுபற்றி அறிந்து ஆசிப் அதிர்ச்சி அடைந்தார். தனது நெருங்கிய நண்பர் பசவராஜ் இப்படி செய்ததை எண்ணி மனம் உடைந்த அவர். தனது மனைவி, குழந்தைகள் மற்றும் நகை-பணத்துடன் ஓடியதால் கடும் ஏமாற்றம் அடைந்தார்.
இதுகுறித்து ஆசிப், தனது மனைவி மற்றும் கள்ளக்காதலன் பசவராஜ் குறித்து மாரிகாலா போலீசில் புகார் அளித்தார். அதில் மனைவி, குழந்தைகள் மற்றும் சொத்து ஆவணங்கள், தங்க நகை, கார், பணத்தை மீட்டு கொடுக்க வேண்டும், பசவராஜ் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தினார். அதன்பேரில் மாரிகாலா போலீசார் வழக்குப்பதிவு செய்து கள்ளக்காதல் ஜோடியை தேடி வருகின்றனர்.
இந்த கள்ளக்காதல் ஜோடி ஓடிப்போன சம்பவம் பெலகாவியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.












Click it and Unblock the Notifications