தகாத உறவுக்கு இடையூறு.. கூலிப்படை மூலம் "ஸ்கெட்ச்".. 3 குழந்தைகள் உட்பட குடும்பத்தையே "தீர்த்த" பெண்
பெங்களூர்: தகாத உறவிற்கு இடையூறாக இருந்ததாக கூறி பெண் ஒருவர் கூலிப்படையை ஏவி 4 பேரை கொன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
கர்நாடக மாநிலம் உடுப்பியை சேர்ந்தவர் கங்காராம். இவர் லட்சுமி என்ற பெண்ணை சில வருடங்களுக்கு முன் திருமணம் செய்து கொண்டார்.
இவர்களுக்கு 2 குழந்தைகள் உள்ளனர். இவர்களின் திருமண வாழ்க்கை நன்றாக சென்று கொண்டு இருந்த நிலையில் கங்காராமிற்கு லட்சுமி என்ற இன்னொரு பெண்ணுடன் காதல் ஏற்பட்டுள்ளது.

தகாத உறவு
தனது மனைவி லட்சுமிக்கு தெரியாமல் காதலி லட்சுமியை அடிக்கடி பார்த்து வந்திருக்கிறார் கங்காராம். இவர்களுக்கு இடையில் காதல் அதிகரித்து அது பாலியல் ரீதியான உறவில் முடிந்துள்ளது. இவர்கள் அடிக்கடி ஒன்றாக தங்கும் வழக்கம் கொண்டு இருக்கின்றனர். முதலில் கங்காராம் மனைவி லட்சுமிக்கு இந்த விஷயம் தெரியவில்லை. ஆனால் ஊருக்குள் கங்காராம் குறித்த விஷயம் தீயாக பரவி இருக்கிறது.

மிரட்டல்
உறவினர்கள் மூலம் கங்காராம் பற்றி தெரிந்து கொண்ட அவரின் மனைவி லட்சுமி.. கங்காராமை கடுமையாக கண்டித்து இருக்கிறார். இனி அந்த பெண்ணுடன் சுற்ற கூடாது. அவருடன் பேசுவது தெரிந்தால் நான் உங்களை பிரிந்துவிடுவேன். குழந்தைகளையும் அழைத்துக்கொண்டு என் வீட்டிற்கு சென்றுவிடுவேன் என்று லட்சுமி கூறியுள்ளார். இதனால் கங்காராம் தனது காதலி லட்சுமியிடம் பேசுவதை நிறுத்தி உள்ளார்.

கொலை
காதலி லட்சுமி அடிக்கடி போனில் பேச முயன்றும் கங்காராம் பேசவில்லை. கடைசியில் லட்சுமியிடம் போனில் பேசிய கங்காராம், நாம் இனி பேசவேண்டாம் .. என் மனைவிக்கு பிடிக்கவில்லை என்று கூறியுள்ளார். இந்த நிலையில்தான் தகாத உறவிற்கு இடைஞ்சலாக இருந்ததால் கங்காராமின் மனைவி லட்சுமி மற்றும் குழந்தைகளை காதலி லட்சுமி கூலிப்படையை ஏவி கொலை செய்துள்ளார். நேற்று கங்காராம் தனது வீட்டில் மனைவியுடன் அமர்ந்து சாப்பிட்டுக்கொண்டு இருந்தார்.

வாக்குமூலம்
அப்போது வீட்டிற்குள் புகுந்த கூலிப்படை கங்காராமை மட்டும் விட்டுவிட்டு அவரின் மனைவி லட்சுமி, மற்றும் இரண்டு குழந்தைகள், வீட்டிற்கு விருந்தினராக வந்த இன்னொரு உறவினர் குழந்தை என்று 4 பேரை கொன்று உள்ளனர். இதையடுத்து போலீசாரிடம் புகார் அளித்த கங்காரம் தனது காதலி லட்சுமிதான் கூலிப்படையை ஏவியதாக வாக்குமூலம் அளித்துள்ளார். இதையடுத்து லட்சுமியை கைது செய்த போலீசார் தற்போது கூலிப்படையை தேடி வருகின்றனர்.
-
சென்னையில் கொடூர சம்பவம்.. கஞ்சா விற்பனையை தட்டிக்கேட்ட இளைஞர் அம்மிக்கல்லால் அடித்து கொலை! -
கோயம்பேடு மதுபான பார் மோதலில்.. கார் ஏற்றி கொல்லப்பட்ட இலங்கை இளம்பெண்.. சென்னை வந்தது எப்படி? -
சென்னையில் ஷாக்! போலீசாரின் பிடியில் சிக்கிய மனைவியின், கழுத்தை அறுத்து கணவனே கொலை செய்த கொடூரம் -
மூணாறு கொழுக்குமலை 400 அடி பள்ளத்தில் குதித்து இறந்த சென்னை இளைஞர்! -
நெல்லையில் பரபரப்பு.. ஜெராக்ஸ் எடுக்க வந்த பெண்களை ரகசியமாக படம் பிடித்த வாலிபர்! போலீஸ் வைத்த ஆப்பு -
குளிர்பானத்தில் மயக்க மருந்து.. ஏர்வாடி விடுதியில் கொடூரம்! கூட்டு பலாத்காரம்.. தவெக நிர்வாகி கைது -
சிம்பிளாக பதவியேற்பு.. கர்நாடகாவில் கவனத்தை ஈர்க்கும் டி.கே.சிவகுமார்! காரணம் இதுதான்! -
சிறுமிகளுக்கு மது சப்ளை.. சட்டவிரோத செயல்களில் ஈடுபட்டு வந்த கோயம்பேடு பார்.. 'திடுக்' தகவல்! -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட்












Click it and Unblock the Notifications