முகம் - தலையை கடித்து குதறிய பக்கத்து வீட்டு நாய்.. பெங்களூர் பெண்ணுக்கு 50 தையல்.. ஷாக் வீடியோ
பெங்களூர்: பெங்களூரில் காலை நேரத்தில் நடைப்பயிற்சி சென்று கொண்டிருந்த 31 வயது நிரம்பிய சாப்ட்வேர் பெண் இன்ஜினியரை விரட்டி விரட்டி நாய் ஒன்று தாக்கியது. இதில் அவர் தலை, கழுத்து, முகம், கை, கால்களில் காயமடைந்தார். மொத்தம் 50 இடங்களில் தையல் போடப்பட்டுள்ளது. இந்நிலையில் தான் அந்த பெண்ணை, தெருநாய் கடித்தது தொடர்பான வீடியோ வெளியாகி அனைவரையும் பதற வைத்துள்ளது.
பெங்களூர் எச்எஸ்ஆர் லே-அவுட்டில் டீச்சர்ஸ் காலனி உள்ளது. இங்கு வசித்து வருபவர் அமரேஷ் ரெட்டி. இவர் வீட்டில் நாய் வளர்த்து வருகிறார். இவரது வீட்டின் அருகே 31 வயது நிரம்பிய பெண் சாப்ட்வேர் இன்ஜினியர் வசித்து வருகிறார். அவரது பெயர் ஷாலினி துபே.

ஷாலினி துபே தினமும் காலையில் வீட்டின் அருகே நடைப்பயிற்சி செய்வது வழக்கம். அந்த வகையில் கடந்த 26ம் தேதி காலை 6.53 மணியளவில் அவர் தனது வீட்டின் அருகே வழக்கம்போல் நடைப்பயிற்சி மேற்கொண்டார்.
பெண்ணை பாய்ந்து தாக்கி நாய்
வீட்டின் முன்புறம் செல்லும் சாலையில் ஷாலினி துபே அங்கும் இங்குமாக நடந்து சென்றார். அப்போது வீட்டுக்கு வெளியே அமரேஷ் ரெட்டி வளர்க்கும் நாய் இருந்தது. திடீரென்று ஆக்ரோஷமான அந்த நாய் நடைப்பயிற்சி மேற்கொண்ட ஷாலினி துபேவை குரைத்து மின்னல் வேகத்தில் பாய்ந்தது. இதனால் பயந்துபான பெண் பயந்து ஓடினார். அப்போது அவர் மீது பாய்ந்த நாய் கொடூரமாக கடித்தது. ஷாலினி துபே கதறினார்.
நாய்விடாமல் ஆக்ரோஷமாக..
இந்த சத்தம் கேட்டவுடன் நாய் வளர்க்கும் வீட்டில் இருந்தவர்கள் அடுத்தடுத்து ஓடிவந்தனர். பெண்ணை கடித்த நாயை பெல்ட் மற்றும் பேட்டால் அடித்தனர். இதனால் நாய்,ஷாலினி துபேவை விட்டுவிட்டு உரிமையாளரை கடித்தது. அவரது முகம், தலையை கடித்துவிட்டு நாய் விடாமல் ஆக்ரோசமாக தரையில் இழுத்து சென்றது.
🚨 A pet dog attacked a woman in Bengaluru.
— Newsmatter (@NewsmatterIndia) January 30, 2026
The woman received 50+ stitches at the hospital.
📍HSR Layout's Teachers' Colony pic.twitter.com/Pm7XRCdh0a
இருவரும் காயம்
இறுதியாக ஏராளமானவர்கள் சேர்ந்து அந்த நாயை தாக்கி உரிமையாளரையும் மீட்டனர். இந்த சம்பவத்தில் ஷாலினி துபேவின் கை, கால், முகம், கழுத்து, தலையில் பல இடங்களில் கடித்தது. அவர் படுகாயமடைந்தார். அதேபோல் ஷாலினியை மீட்க முயன்ற நாயின் உரிமையாளரும் காயங்கள் அடைந்தார். இருவரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
50 இடங்களில் தையல்
இதில் நாய் கடியால் பாதிக்கப்பட்ட ஷாலினி துபேவிற்கு மொத்தம் 50 இடங்களில் தையல் போடப்பட்டுள்ளது. இதுபற்றி அந்த ஷாலினி துபேவின் கணவர் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் நாயின் உரிமையாளர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். ஷாலினி மற்றும் காப்பாற்ற வந்த வீட்டு உரிமையாளரை தெருவில் வைத்து நாய் கொடூரமாக கடிக்கும் வீடியோ இணையதளங்களில் வெளியாகி அனைவரையும் அதிர்ச்சியடைய வைத்துள்ளது.
-
நடத்தையில் ஏற்பட்ட சந்தேகம்.. 22 வயது காதலிக்கு, காதலன் கொடுத்த கொடூர தண்டனை.. உயிரே போச்சே -
கரப்பான் பூச்சி கட்சியுடன் கைகோர்க்கும் பிரகாஷ் ராஜ்! கழற்றிவிடப்பட்ட காங்கிரஸ்! பெங்களூரில் ஷாக் -
அமைச்சர் பதவிக்கு குட்பை? பெங்களூர் வளர்ச்சி துறையின் பல்லை பிடுங்கிய டிகே சிவக்குமார்.. கிருஷ்ணபைரே கவுடா அதிருப்தி -
"மேயர் பதவி கொடுத்தா தான் வருவேன்!" அழகிரி மகள் நிபந்தனை.. சிடிஆர் நிர்மல்குமார் வைத்த செக்! -
தாய்லாந்திலிருந்து காஸ்ட்லி கஞ்சா கடத்திய கேரள அழகி கைது! ரூ 11 கோடி மதிப்பில் போதை பொருள் பறிமுதல் -
யாரோட பிடிலையும் திருவண்ணாமலை கிடையாது.. செய்யாறில் ஆதவ் அர்ஜுனா பேசியது என்ன? -
தமிழக சட்டமன்ற வரலாற்றில் தவறான முன்னுதாரணம்.. சபாநாயகர் முடிவுக்கு விகே சசிகலா எதிர்ப்பு -
டாஸ்மாக்கில் பாட்டிலுக்கு 10 ரூபாய் பிரச்சனைக்கு தீர்வு.. இயந்திரங்களை நிறுவ அரசு திட்டம்.. சாத்தியமா? -
இந்துக்களின் கயிறு உறுத்துகிறா? முதல்வர் விஜய் அதிகாரத்தை இழக்க நேரிடும்.. வானதி சீனிவாசன் வார்னிங் -
சட்டமன்றத்துக்கே 11 மணிக்கு தான் வருவார்.. உதயநிதி எல்லாம் பேசலாமா.. செங்கோட்டையன் காட்டம் -
பாரதிராஜாவின் இறுதி சடங்கில் மகள்- மருமகள் சண்டை? என்ன நடந்தது? கங்கை அமரன் கோபத்துக்கு இதுதான் காரணமா? -
சேலத்தில் விபச்சாரத்தில் தள்ளப்பட்ட 50 பெண்கள்? பல ஆபாச வீடியோக்கள்! தவெக மணிகண்டன் சிக்கியது எப்படி












Click it and Unblock the Notifications