Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

மதம் மாறாவிட்டால் ‛ரேப் கேஸ்’ கொடுப்பேன்! மனைவி தெஹ்ரீன் மீது காதல் கணவர் விஷால் பரபர குற்றச்சாட்டு

Subscribe to Oneindia Tamil

பெங்களூர்: காதலித்து திருமணம் செய்த பிறகு கட்டாயமாக மதம் மாற வேண்டும். இல்லாவிட்டால் பலாத்காரம் செய்ததாக போலீசில் புகாரளித்து சிறையில் அடைப்பதாக காதல் மனைவி தெஹ்ரீன் தனது குடும்பத்தினருடன் சேர்ந்து மிரட்டுவதாக விஷால் என்பவர் பரபரப்பான குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார். இதனால் பயந்துபோய் இஸ்லாமுக்கு மதம் மாறியதாக கூறியுள்ளார். இந்த விஷயத்தில் தெஹ்ரீன் மற்றும் அவரது குடும்பத்தினர் மீது நடவடிக்கை எடுக்க இந்து அமைப்பினர் வலியுறுத்தி வருவது கர்நாடகாவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

கர்நாடகா மாநிலம் கதக் மாவட்டத்தை சேர்ந்தவர் விஷால் கோகாவி. இவரது மனைவி பெயர் தெஹ்சின் ஹொசமணி. இவர்கள் 2 பேரும் பழக்கம் ஏற்பட்டது. இந்த பழக்கம் நாளடைவில் காதலாக மாறியது. விஷால் கோகாவி இந்து மதத்தை சேர்ந்தவர். தெஹ்சின் ஹொசமணி இஸ்லாமிய மதத்தை சேர்ந்தவர்.

islam karnataka

மதத்தை கடந்து இருவரும் காதலித்தனர். 3 ஆண்டு உறவில் இருந்த அவர்கள் கடந்த 2024 நவம்பர் 26ம் தேதி சிறப்பு திருமண சட்டத்தின் கீழ் தங்களின் திருமணத்தை பதிவு செய்து கொண்டனர்.

அதன்பிறகு 2025 ஏப்ரல் மாதம் 25ம் தேதி விஷால் கோகாவி - தெஹ்சின் ஹொசமணி ஆகியோர் இடையே 2வது முறையாக திருமணம் நடந்தது. அப்போது இஸ்லாமிய முறைப்படி திருமணம் செய்து கொண்டனர். இந்நிலையில் தான் விஷால் கோகாவி பரபரப்பான குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார். தன்னை கட்டாயப்படுத்தி இந்து மதத்தில் இருந்து இஸ்லாம் மதத்துக்கு மாற்றியதாகவும், மதம் மாறாவிட்டால் பலாத்கார புகார் அளிப்பதாக தனது மனைவி மற்றும் அவரது குடும்பத்தினர் மிரட்டி உள்ளதாக தெரிவித்துள்ளார்.

இதுபற்றி விஷால் கோகாவி கூறியுள்ளதாவது: நான் இஸ்லாமிய பெண்ணை காதலித்தேன். 3 ஆண்டு உறவில் இருந்தேன். எனது காதலின் குடும்பத்துக்கு எங்களின் காதல் விவகாரம் தெரியவந்தது. அப்போது, ‛‛என்னை திருமணம் செய்து கொண்டால் எப்போதும் உன்னுடன் இருப்பேன். இல்லாவிட்டால் ரயில் முன்பு பாய்ந்தோ, விஷம் குடித்தோ தற்கொலை செய்து கொள்வேன்'' என்று கூறினார்.

இதையடுத்து சட்டப்பூர்வமாக திருமணம் செய்து கொண்டோம். எங்களின் திருமணத்தை பதிவும் செய்தோம். அதன்பிறகு அவரது உறவினர் இப்ராஹிம் சாப் தவால் கான் மற்றும் அவரது அம்மா பேகம் பானு ஆகியோர் என்னிடம் மதம் மாற கூறினர். அதோடு ஜமாத்துக்கு செல்ல கூறினர். என் மனைவியிடம் இதை என்னிடம் கூறினார். அதேபோல் இஸ்லாமிய முறைப்படி திருமணம் செய்ய வேண்டும் என்று என் மனைவி கூறினார். நான் மறுத்தேன். இதனால் பிரச்சனையானது. ஜமாத்தை சேர்ந்தவர்கள் மொத்தமாக கூடி எனக்கு அழுத்தம் கொடுத்தேன். ஜமாத்துக்கு வர வேண்டும். அங்குள்ள நடைமுறையை பின்பற்ற வேண்டும் என்று அழுத்தம் கொடுத்தனர்.

அதுமட்டுமின்றி இஸ்லாமிற்கு மாறவில்லை என்றால் பலாத்கார புகார் அளித்து அந்த வழக்கில் கைது செய்ய நடவடிக்கை எடுப்போம் என்று மிரட்டினார். இதனால் எனக்கு மன அழுத்தம் ஏற்பட்டது. இறுதியாக தொடர் அழுத்தத்தால் என்னை மதம் மாற்றினர். நமாஸ் செய்கிறேனே என்று என்னை கண்காணித்தனர். நமாஸ் செய்யும்போது போட்டோ எடுத்து எனது மனைவிக்கு அனுப்பி வைக்க வேண்டிய கட்டாயத்துக்கு தள்ளப்பட்டேன். போட்டோ அனுப்பாவிட்டால் நமாஸ் செய்தேனா.. இல்லையா என்று என்னிடம் கேள்வி கேட்பார்'' என்று பரபரப்பான குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார்.

இந்த விவகாரம் தற்போது கர்நாடகாவில் பூதாகரமாகி உள்ளது. பல்வேறு இந்து அமைப்பினர் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். அதுமட்டுமின்றி விஷால் கோகாவின் மனைவி தெஹ்ரீன் மற்றும் அவரது குடும்பத்தினர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலிறுத்தி உள்ளனர். இதுதொடர்பாக கதக் போலீஸ் சூப்பிரண்டு ரோஹன் ஜெகதீஷ் கூறுகையில், ‛‛இதுதொடர்பாக முறைப்படி புகார் எதுவும் தெரிவிக்கப்படவில்லை. இருப்பினும் இந்த விவகாரம் ஆன்லைனில் பேசும்பொருளாகி உள்ளது.

நேற்றைய தினம் சமூக வலைதளங்களில் இருவருக்கும் நடந்த திருமணம் தொடர்பான வீடியோ வெளியாகி உள்ளது. அந்த இளைஞரின் பெயர் விஷால். அவர் இந்து. இளம்பெண் பெயர் தெஹ்சீன். அவர் இஸ்லாமியர். முதற்கட்ட விசாரணையில் இருவரும் விருப்பப்பட்டு திருமணம் செய்துள்ளேன். கதக் சப் ரிஜிஸ்டர் அலுவலகத்தில் திருமணத்தை பதிவு செய்துள்ளனர். கடந்த 5 மாதங்களுக்கு முன்பாக அவர்கள் முஸ்லிம் முறைப்படி திருமணம் செய்துள்ளனர். இதுதான் தற்போது பரவி வருகிறது.

இந்த வழக்கில் மத மாற்றம் சார்ந்த அம்சம் இருப்பதாக சொல்லப்படுகிறது. ஆனால் மே 23ம் தேதி அந்த விஷால் பெட்டகேரி காவல் நிலையத்துக்கு அழைத்து பிரச்சனை உள்ளதா? என்று கேட்கப்பட்டது. அப்போது எழுத்துப்பூர்வமாக எழுதி கொடுத்தார். அதனை வீடியோ பதிவு செய்துள்ளோம். அதில் அவர் எந்த புகாரும் தெரிவிக்கவில்லை'' என்றார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+