நடிகர் தர்ஷன் வழக்கில் ட்விஸ்ட்.. ரேணுகாசுவாமி கொலையில் அதிரடி திருப்பம்.. சாட்சியாக மாறியவர் ஷாக்

Subscribe to Oneindia Tamil

பெங்களூர்: கன்னட திரையுலகில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய ரேணுகாசுவாமி என்ற இளைஞர் கொலை வழக்கில், தற்போது புதிய மற்றும் திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த வழக்கில் முதன்மை குற்றவாளியாகக் கருதப்படும் பிரபல கன்னட நடிகர் தர்ஷன் மற்றும் அவரது தோழி பவித்ரா கவுடா உள்ளிட்ட பலரும் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

இந்நிலையில், இந்த வழக்கின் 14-வது குற்றவாளியான பிரதோஷ், நீதிமன்றத்தில் மன்னிப்பு சாட்சியாக மாறுவதற்கும், சட்டப்பூர்வ மன்னிப்பு கோரியும் மனு தாக்கல் செய்துள்ளார். அந்த மனுவின் விவரங்கள், ரேணுகாசுவாமிக்கு நேர்ந்த கொடுமைகள் மற்றும் அதைத் தொடர்ந்து நடந்த மறைமுக வேலைகளை வெளிச்சத்திற்கு கொண்டு வந்துள்ளன.

Actor Darshan Case

தாக்குதல் சம்பவங்கள்

பிரதோஷ் தாக்கல் செய்துள்ள மனுவில், ரேணுகாசுவாமி, தர்ஷனின் காதலி பவித்ரா கவுடாவிற்கு அனுப்பிய குறுஞ்செய்திகள் தொடர்பாக நடிகர் தர்ஷன் ரேணுகாசுவாமியை நேரில் அழைத்து கடுமையாக எச்சரித்துத் தாக்கியுள்ளார். இந்தத் தாக்குதலின் போது ரேணுகாசுவாமியின் தலையிலிருந்து ரத்தம் வழியத் தொடங்கியது.

மேலும், பவித்ரா கவுடாவை ரேணுகாசுவாமியின் முன் நிறுத்தி, அவரைச் செருப்பால் அடிக்குமாறு தர்ஷன் கூறியுள்ளார். அதன்பின்னர், ரேணுகாசுவாமியின் ஆடைகள் களையப்பட்டு, பிற குற்றவாளிகளான நந்தீஷ், பவன் மற்றும் நாகராஜ் ஆகியோரால் மரக்கட்டைகள் மற்றும் நைலான் கயிற்றால் கொடூரமாகத் தாக்கப்பட்டுள்ளார். நந்தீஷ் என்பவர் ரேணுகாசுவாமியை டாடா ஏஸ் வாகனத்தில் தூக்கிலிட முயன்றதாகவும், நாகராஜ் தொடர்ந்து கயிற்றால் தாக்கியதாகவும் கூறப்படுகிறது.

தாக்குதலின் உச்சகட்டமாக, ரேணுகாசுவாமியின் மொபைல் போன் செய்திகளை உரக்கப் படித்துக் கொண்டே தர்ஷன் நைலான் கயிற்றால் அவரது கைகளிலும் முதுகிலும் பலமுறை அடித்துள்ளார். பின்னர், ரேணுகாசுவாமியின் ஆடைகளை முழுமையாக அகற்றி, அவரது ரகசிய உறுப்புகளில் தர்ஷன் கடுமையாக உதைத்துள்ளார். பிரதோஷ் பலமுறை தலையிட்டு, தாக்குதலை நிறுத்தாவிட்டால் ரேணுகாசுவாமி உயிரிழந்துவிடுவார் என எச்சரித்தும் தாக்குதல் தொடர்ந்தது.

உணவும் தண்ணீரும் வழங்கப்பட்ட பின்னரும் கூட, தர்ஷன் ரேணுகாசுவாமியின் கழுத்து மற்றும் நெஞ்சில் உதைத்ததால் அவர் மயங்கி விழுந்தார். தர்ஷன் அவரது நெஞ்சின் மீது இரண்டு கால்களாலும் ஏறி நின்றதாகவும், பிரதோஷ் மீண்டும் தலையிட்டு தர்ஷனை இழுத்துச் சென்றதாகவும் மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கொலையை மறைக்க நடந்த சதி

ரேணுகாசுவாமி உயிரிழந்ததை அறிந்ததும், வழக்கை திசைதிருப்ப முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. தர்ஷன் துப்பாக்கியால் சுட்டுத் தற்கொலை செய்து கொள்வதாகப் மிரட்டியதால், அவருக்கு உதவ வேண்டிய சூழல் ஏற்பட்டதாக பிரதோஷ் கூறுகிறார்.

இதனைத் தொடர்ந்து, தர்ஷனின் வீட்டிற்குச் சென்ற குழுவினரிடம் தர்ஷன் பணப் பையைக் கொண்டு வந்து கொடுத்துள்ளார். அதில் நாகராஜுக்கு ரூ. 5 லட்சமும், வினய் என்பவருக்கு ரூ. 10 லட்சமும் வழங்கப்பட்டுள்ளது. ராகவேந்திரா, கார்த்திக் மற்றும் நிகில் ஆகியோரை காவல்துறையிடம் சரணடைய வைத்து, பணத்தகராறு காரணமாகவே இந்த அடிதடியும் கொலையும் நடந்ததாகப் பொய்யான கதையை உருவாக்கத் திட்டமிட்டனர்.

பின்னர், கொலையை மறைக்கச் சுமனஹள்ளி அருகே உள்ள ஒரு வடிகால் பகுதி தேர்ந்தெடுக்கப்பட்டது. ரேணுகாசுவாமியின் சடலம் ஒரு வெள்ளை ஸ்கார்பியோ காரில் கொண்டு செல்லப்பட்டு, வடிகாலில் வீசப்பட்டது.

சாட்சி

தனக்குத் தெரிந்த அனைத்து உண்மைகளையும் முழுமையாக வெளிப்படுத்தத் தயாராக இருப்பதாகக் கூறி பிரதோஷ் சாட்சியாக மாற மனு அளித்துள்ளார். இவரைத் தொடர்ந்து குற்றவாளிகள் 8 மற்றும் 10 ஆகிய ரவிசங்கர் மற்றும் வினய் ஆகியோரும் இதேபோன்ற மனுக்களைத் தாக்கல் செய்துள்ளனர்.

அதேவேளையில், தர்ஷன் மற்றும் பிற குற்றவாளிகளால் தனது உயிருக்கு ஆபத்து இருப்பதாகக் கூறி, சிறையில் தனி செல்லில் அடைக்கவும், நீதிமன்ற விசாரணையின் போது தனியாக அழைத்து வரவும் பிரதோஷ் தனிப் பாதுகாப்பு மனுவையும் தாக்கல் செய்துள்ளார்.

குற்றப்பத்திரிகை தாக்கல்

காவல்துறை தாக்கல் செய்த குற்றப்பத்திரிகையில், பிரதோஷ் தர்ஷனிடமிருந்து ரூ. 30 லட்சம் பெற்றுக் கொண்டு, பிற குற்றவாளிகளைச் சரணடைய வைக்கும் பணியை ஒருங்கிணைத்ததாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.

அரசுத் தரப்பு வழக்கறிஞர்கள் பிரதோஷின் மன்னிப்பு சாட்சி மனுவிற்கு நிபந்தனைகளுடன் கூடிய ஆதரவை தெரிவித்துள்ளனர். அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்டறிந்த 59-வது அமர்வு நீதிமன்றம், இந்த மனுக்கள் மீதான தீர்ப்பை ஒத்திவைத்துள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+