பெங்களூர் சிறையில் சசிகலா சொகுசு வாழ்க்கையை மிஞ்சும் நடிகர் தர்ஷன்! வயிற்று வலிக்கு "கோழிக்கறி"!
பெங்களூர்: ரேணுகாசாமி கொலை வழக்கில் பெங்களூர் பரப்பன அக்ரஹார சிறையில் அடைக்கப்பட்டுள்ள கன்னட நடிகர் தர்ஷன், சசிகலாவை விட அதீதமாக சொகுசு வசதிகளை அனுபவித்து வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. பெங்களூர் பரப்பன அக்ரஹார சிறை மருத்துவமனைக்கு வயிற்று வலி என தினமும் செல்கிறாராம் நடிகர் தர்ஷன். ஆனால் அன்று இரவே ராகி களியுடன் கோழிக்கறியை சுவைத்து சாப்பிடுகிறார் தர்ஷன் என்கின்றன தகவல்கள்.
கர்நாடகாவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருப்பது ரேணுகாசாமி கொலை வழக்கு. நடிகர் தர்ஷன்,தமது தோழி பவித்ரா கவுடாவுக்கு ஆபாச படம், மெசேஜ் அனுப்பி தொந்தரவு செய்தார் ரேணுகாசாமி என்பது புகார். இதனால் ஆத்திரம் அடைந்த தர்ஷன் கூலிப்படையை ஏவி ரேணுகாசாமியை வெட்டிப் படுகொலை செய்தார் என்பது வழக்கு. இந்த வழக்கில் தர்ஷன், பவித்ரா கவுடா உள்ளிட்ட 17 பேர் கைது செய்யப்பட்டு பெங்களூர் பரப்பன அக்ரஹாரா சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

நடிகர் தர்ஷன், பவித்ரா கவுடா இருவருமே பெங்களூர் சிறையில் சொகுசு வாழ்க்கை வாழ்கின்றனர் என ஊடகங்கள் தொடர்ச்சியாக செய்திகளை வெளியிட்டு வருகின்றன. இதே பரப்பரன அக்ரஹாரா சிறையில் ஜெயலலிதா மீதான வருமானத்துக்கு அதிகமான சொத்து குவிப்பு வழக்கில் 4 ஆண்டுகள் சிறை தண்டனை அனுபவித்தார் சசிகலா. அப்போது சசிகலாவும் அவரது உறவினர் இளவரசியும் சிறையில் இருந்து வெளியே சென்று ஷாப்பிங் செய்துவிட்டு திரும்பும் வீடியோக்கள் வெளியாகி இருந்தன. மேலும் சிறைக்குள்ளேயே அதி சொகுசு வசதிகளை சசிகலா அனுபவித்தார் என்கிற குற்றச்சாட்டுகள் கர்நாடகாவில் பெரும் புயலைக் கிளப்பி இருந்தன.
தற்போது நடிகர் தர்ஷனும் சசிகலாவைப் போல அதி சொகுசு வசதிகளை அனுபவித்து வருகிறாராம். நடிகர் தர்ஷன் ஏர்கூலரை பயன்படுத்தி வருகிறாராம். குளுகுளு அறையில் நாள்தோறும் இந்தி திரைப்படங்களை தமக்கு கொடுக்கப்பட்ட டிவியில் பார்த்து வருகிறாராம். அத்துடன் சில நாட்களாகவே தமக்கு தலைவலி, வயிற்று வலி என சொல்லி சிறை மருத்துவமனைக்கு சேன்றுவிடுகிறாராம் தர்ஷன்.
சிறை மருத்துவமனைக்கு சென்றுவிட்டு திரும்பும் தர்ஷன், இரவு நேரத்தில் கோழிக்கறி, ராகி களியையும் சாப்பிடுகிறாராம். அதாவது வயிற்று வலிக்கு 'மருந்து' போல கோழிக்கறியை சாப்பிட்டு வருகிறார் போல நடிகர் தர்ஷன் என்கின்றன தகவல்கள். இது தொடர்பாக சிறை அதிகாரிகள் கூறுகையில், நடிகர் தர்ஷன் தமக்கு வயிற்று வலி, தலைவலி என கூறுவது எல்லாம் உண்மை இல்லை என்கின்றனர்.
-
கை, கால்களை வெட்டினால்தான் பயம் வரும்! பலாத்கார வழக்கில் கட் அண்ட் ரைட்டாக சொன்ன கர்நாடக ஹைகோர்ட் -
சித்தராமையாவிற்கு புது பொறுப்பு.. காங்கிரஸில் முக்கிய முடிவுகளை எடுக்கும் செயற்குழுவில் இடம் -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட்












Click it and Unblock the Notifications