ரேணுகா சுவாமி ஆபாச மெசேஜ்கள்.. படித்ததும் கோபத்தின் உச்சத்திற்கு போன தர்ஷன்.. பகீர் வாக்குமூலம்

Subscribe to Oneindia Tamil

பெங்களூர்: கர்நாடகாவை அதிர வைத்த ரேணுகா சுவாமி கொலை வழக்கில் நடிகர் தர்ஷன் உள்ளிட்ட 16 கைது செய்யப்பட்டுள்ளனர். இதற்கிடையே ரேணுகா சுவாமியை தாக்கியதை நடிகர் தர்ஷன் ஒப்புக் கொண்டுள்ளார். அன்று அங்கு என்ன நடந்தது என்பது குறித்த தகவல்கள் எல்லாம் பெங்களூர் போலீசார் தாக்கல் செய்த குற்றப்பத்திரிக்கையில் இடம்பெற்றுள்ளது.

பெங்களூர் மேம்பாலம் அருகே கடந்த ஜூன் 9ம் தேதி ரேணுகா சுவாமி என்பவரது உடல் கண்டெடுக்கப்பட்டது. இந்த வழக்கு விசாரணையில் பல அதிர்ச்சி தகவல்கள் வெளியாகின.

darshan pavithra gowda crime

தர்ஷன்: இதில் பிரபல கன்னட நடிகர் தர்ஷன் உள்ளிட்ட 17 பேர் கைது செய்யப்பட்டனர். தர்ஷனின் ரசிகரான ரேணுகா சுவாமி தர்ஷனின் லிவ்-இன் பார்ட்னரான நடிகை பவித்ரா கவுடாவுக்கு எதிராக ஆபாச மெசேஜ்களை அனுப்பியிருக்கிறார். இதன் காரணமாகவே அவரை கடத்தி படுகொலை செய்துள்ளனர். இதற்கிடையே இந்த சம்பவத்தில் போலீசார் தாக்கல் செய்துள்ள குற்றப்பத்திரிக்கை குறித்த தகவல்கள் இப்போது வெளியாகியுள்ளது.

கடந்த ஜூன் 8ஆம் தேதி மாலை 3 மணியளவில் தனது வீட்டில் பணிபுரிந்த பவன் என்பவர் மூலமாகவே ரேணுகா சுவாமி கடத்தப்பட்டது நடிகர் தர்ஷனுக்கு தெரிய வந்துள்ளது. பட்டணகெரேயில் ஒரு இடத்தில் ரேணுகா சுவாமியை அடைத்து வைத்திருந்த நிலையில், மாலை 4.30 மணியளவில் தர்ஷன், பவித்ரா, பவன் மற்றும் மற்றொரு குற்றவாளியான பிரதோஷ் ஆகியோர் அங்கு விரைந்துள்ளனர். அங்குச் சென்ற போது ரேணுகா சுவாமி ஏற்கனவே தாக்கப்பட்டு இருந்ததாக தர்ஷன் கூறியதாகக் குற்றப்பத்திரிக்கையில் கூறப்பட்டுள்ளது.

மன்னிப்பு: அங்கு பவித்ராவுக்கு ஆபாசமான செய்திகளை அனுப்பியதை தர்ஷனிடம் ரேணுகா சுவாமி ஒப்புக்கொண்டுள்ளார். தர்ஷன் தனது வாக்குமூலத்தில் மேலும் கூறுகையில், "நான் அவரது தலை, கழுத்து மற்றும் மார்பு பகுதிகளில் வலிமையாக எட்டி உதைத்தேன். அங்கிருந்த மரக்கட்டையிலும் அடித்தேன். கைகளைக் கொண்டும் தாக்கினேன். காரில் இருந்த பவித்ரா கவுடாவை வர சொன்னேன். பவித்ரா அந்த நபரைச் செருப்பால் அடித்தார். பவித்ராவின் காலில் விழுந்து மன்னிப்பு கேட்கும்படி சொன்னோம். ரேணுகா சுவாமியும் காலில் விழுந்து மன்னிப்பு கேட்டார்" என்று கூறியிருக்கிறார்.

ரேணுகா சுவாமியை செருப்பால் அடித்ததை ஒப்புக்கொண்ட பவித்ரா கவுடா தனது வாக்குமூலத்தில் மேலும் கூறுகையில், "நான் தர்ஷனின் காதலி.. நீ எனக்கே ஆபாச செய்தி அனுப்புகிறாயா எனக் கேட்டேன். எனக்கு அவன் நிர்வாண படங்களை அனுப்பி இருந்தான். அது குறித்தும் கேட்டேன். எனக்கு என்ன ரேட் என்றெல்லாம் கேட்டது குறித்து அவனிடம் ஆவேசமாகக் கேட்டேன்" என்று கூறியிருக்கிறார்.

ஆவேசம்: அப்போது பவன், ரேணுகா சுவாமி பவித்ராவுக்கு அனுப்பிய மெசேஜ்களை படித்துக் காட்டியுள்ளார். இதைக் கேட்டதும் தர்ஷன் மீண்டும் ஆவேசமடைந்துள்ளார். ரேணுகா சுவாமி அனுப்பிய ஆபாச போட்டோக்களை பார்த்துக் கடுப்பான தர்ஷன் மீண்டும் எட்டி உதைத்து இருக்கிறார்.

ரேணுகா சுவாமியின் அடிவயிற்றில் தர்ஷன் எட்டி உதைத்துள்ளார். இதனால் நிலைதடுமாறி விழுந்த ரேணுகா சுவாமியின் மார்பில் தர்ஷன் கால் வைத்து அழுத்து இருக்கிறார். மேலும், ரேணுகா சுவாமியின் தலையிலும் எட்டி உதைத்ததில் இடது காதில் பலத்த காயம் ஏற்பட்டது.

அந்தரங்க உறுப்பு: ரேணுகா சுவாமியின் பேண்ட்டை கழற்ற தர்ஷன் சொல்லி இருக்கிறார். ரேணுகா சுவாமியின் பேண்ட்டை பவன் கழற்றிய நிலையில், அந்தரங்க உறுப்பில் தர்ஷன் உதைத்துள்ளார். இதன் பிறகு தர்ஷன் அங்கிருந்து கிளம்பிவிட்டாராம்.. அதேநேரம் அங்கிருந்த மற்றவர்கள் தர்ஷனை தொடர்ந்து தாக்கியுள்ளனர். மின்சார ஷாக் கொடுத்தும் கழுத்தை நெரித்தும் மற்றவர்கள் தாக்கிய நிலையில், அதில் ரேணுகா சுவாமி உயிரிழந்துவிட்டார். போலீஸ் குற்றப்பத்திரிக்கையில் கூறப்பட்டுள்ள இந்த தகவல்கள் அனைவருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+