"அந்த நாள் ஞாபகம்" கண்டக்டராக வேலைபார்த்த டெப்போவிற்கு விசிட்.. ஊழியர்களுடன் ரஜினிகாந்த் கலகலப்பு
பெங்களூர்: பெங்களூர் சென்றுள்ள நடிகர் ரஜினிகாந்த், தான் திரைத்துறையில் நுழைவதற்கு முன்பாக கண்டக்டராக பணியாற்றிய பஸ் டெப்போவிற்கு சென்றார். அங்கிருந்த கண்டக்டர் மற்றும் டிரைவர்களிடம் மிகவும் சகஜமாக பேசினார். இது தொடர்பான வீடியோ சமுக வலைத்தளங்களில் பரவி வருகிறது.
தமிழ் திரையுலகின் உச்ச நட்சத்திரம் ரஜினிகாந்த். சூப்பர் ஸ்டார் என்று ரசிகர்களால் கொண்டாடப்படும் ரஜினிகாந்த் தமிழ் திரையுலகம் மட்டும் இன்றி இந்திய அளவில் முன்னணி நடிகராக உள்ளார். அண்மையில் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான ஜெயிலர் திரைப்படம் வசூலை வாரி குவித்தது. திரைப்படம் வெளியாகும் முன்பே இமயமலைக்கு ஆன்மீக பயணமாக ரஜினி சென்றார்.

இமயமலை சென்று விட்டு திரும்பும் வழியில் ஜார்க்கண்ட் மற்றும் உத்தர பிரதேச மாநிலத்திற்கும் ரஜினிகாந்த் சென்றார். உத்தர பிரதேசத்தில் அம்மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத் மற்றும் முன்னாள் முதல்வர் அகிலேஷ் யாதவ் ஆகியோரை சந்தித்து பேசினார். குறிப்பாக யோகி ஆதித்ய நாத்தை சந்தித்து பேசும் போது அவரது காலில் விழுந்து வணங்கியது தமிழகத்தில் பெரும் விவாதப்பொருளானது.
ரஜினியின் செயலுக்கு ஆதரவு எதிர்ப்புமாக சமூக வலைத்தளங்களிலும் அதிகம் கருத்துக்கள் பகிரப்பட்டன. தனது பயணத்தை முடித்துக் கொண்டு சென்னை திரும்பிய ரஜினிகாந்த் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது, யோகி ஆதித்யநாத் காலில் விழுந்தது வணங்கியது தொடர்பான சர்ச்சைகளுக்கு முற்றுப்புள்ளி வைத்தார். வயதில் குறைவாக இருந்தாலும் சந்நியாசி காலில் விழுவது எனது வழக்கம் அந்த அடிப்படையில் தான் காலில் விழுந்ததாக கூறி இந்த விவாதத்திற்கு முற்றுப்புள்ளி வைத்தார்.

ஜெயிலர் பட வெற்றியால் மகிழ்ச்சியில் இருக்கும் ரஜினிகாந்த், தற்போது பெங்களூர் சென்றுள்ளார். பெங்களூரில் உள்ள ஜெயநகரா பேருந்து டெப்போவிற்கு சென்ற ரஜினிகாந்த் அங்கிருந்த ஓட்டுநர்கள் மற்றும் டிரைவர்கள் கலந்துரையாடினார். ரஜினிகாந்தை திடீரென பார்த்ததும் இன்ப அதிர்ச்சியில் உறைந்த பேருந்து ஊழியர்கள் ரஜினியை நோக்கி ஓடிச்சென்று கை குலுக்கினர்.
பேருந்து ஊழியர்களிடம் மிகவும் இயல்பாக பேசிய ரஜினிகாந்த், தனது பழைய நினைவுகளை பகிர்ந்து கொண்டதாக தெரிகிறது. இதே ஜெயநகரா பேருந்து டெப்போவில் தான் ரஜினிகாந்த் தனது ஆரம்ப காலங்களில் நடத்துனராக பணியாற்றியது குறிப்பிடத்தக்கது. ரஜினிகாந்த் பெங்களூரில் உள்ள பேருந்து டெப்போவில் ஊழியர்களுடன் பேசும் காட்சிகள் சமூக வலைத்தளங்களில் அதிகம் பரவி வருகிறது.
-
மும்மொழி.. மத்திய அரசுக்கு எதிராக அண்ணாமலை முதல் முறையாக கருத்து? -
பிரதமர் மோடியை வணங்கி.. பத்மஸ்ரீ விருது பெற்ற சிலம்ப கலைஞர் பழனிவேல்! தமிழருக்கு பெரிய கவுரவம் -
மாசம் ரூ.10000 கோடி செலவு.. படிச்சு படிச்சு மோடி சொல்ல இதுதான் காரணம்..! -
அண்ணன் வர்றாரு! என்னப்பா ஆரம்பிச்சுருவோமா? அண்ணாமலை ஆரம்பிக்கும் ’பார்ட்டி’.. இதுதான் கொடி, சின்னமா? -
விஜய் செய்த சாணக்கியத்தனம்.. சத்தமில்லாமல் வெளியேற்றப்பட்ட கம்யூனிஸ்ட்கள்! இதை யாரும் கவனிக்கலையே! -
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு -
இசக்கி சுப்பையா யார் தெரியுமா? அடுத்து தாவும் அரசியல் புள்ளி இவரா? தவெக பக்கம் சாயும் அதிமுக கோட்டை -
மு.க.ஸ்டாலின் - எடப்பாடி பழனிசாமி இணைவார்கள்!ஆருடம் கணித்த.. ஆதவ் அர்ஜுனா! -
ஈரான் மக்களுக்கு விடிவுகாலம் பிறந்தது.. 87 நாட்களுக்கு பின்பு.. ஈரான் அதிபர் வெளியிட்ட அறிவிப்பு! -
இதெல்லாம் எந்த நினைப்பில் விஜய் செய்கிறார் தெரியலையே.. மிகப்பெரிய ரிஸ்க்.. சறுக்குனா காலிதான்! -
பயிர் கடன் தள்ளுபடியில் விஜய் வைத்த செக்.. 100%, 50% தள்ளுபடிக்கு பின் இருக்கும் ஸ்மார்ட் கணக்கு! -
ஸ்டாலின் கொண்டு வந்த காலை உணவு திட்டம் தொடரும்.. மெனு மாற்றம்.. அமைச்சர் ராஜ்மோகன் உறுதி












Click it and Unblock the Notifications