தங்கத்தை ’அங்கே’ வைத்து கடத்தினேன்..எல்லாம் யூடியூப் பார்த்து தான்! ஆபிசர்களை அலற விட்ட ரன்யா ராவ்.!
பெங்களூர்: துபாயில் இருந்து விமானம் மூலம் பெங்களூருக்கு பல கோடி ரூபாய் மதிப்புள்ள தங்க கட்டிகளை கடத்தி வந்ததாக நடிகை ரன்யா ராவ் கைது செய்யப்பட்டு இருக்கிறார். அவரது ஜாமீன் மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ள நிலையில் யூடியூப் பார்த்து தங்கம் கடத்தியதாகவும் அதே நேரத்தில் சர்வதேச கடத்தல் கும்பல் உள்ளிட்ட யாருடனும் தனக்கு தொடர்பு கிடையாது என கூறி இருக்கிறார். மேலும் தங்கத்தை எங்கே வைத்து கடத்தி வந்தேன் என்பது குறித்தும் வருவாய் புலனாய்வுத்துறை அதிகாரிகளிடம் அவர் கூறியிருப்பதாக தகவல்கள் கசிந்துள்ளன.
2016 ஆம் ஆண்டு விக்ரம் பிரபு நடிப்பில் வெளியான வாகா திரைப்படத்தில் நாயகியாக நடித்தவர் ரன்யா ராவ். தொடர்ந்து தமிழ், தெலுங்கு, கன்னடம் உள்ளிட்ட பல்வேறு மொழிகளில் அவர் நடித்திருக்கிறார். மேலும் இவர் கர்நாடக காவல்துறை டிஜிபி ராமச்சந்திராவின் வளர்ப்பு மகளும் ஆவார்.

இந்த நிலையில் கடந்த மூன்றாம் தேதி பெங்களூர் விமான நிலையத்தில் வைத்து அவர் கைது செய்யப்பட்டார். துபாயில் இருந்து 15 கிலோ எடை உள்ள தங்கத்தை கடத்தி வந்ததாக தகவல் வெளியான நிலையில் அவரை சோதனை செய்த அதிகாரிகள் கைது செய்தனர்.
மேலும் இது தொடர்பாக வருவாய் புலனாய்வு இயக்குநரக அதிகாரிகள் வழக்கு பதிவு செய்த நிலையில் அவரது வீட்டில் அதிரடி சோதனை நடத்தப்பட்டது. அதில் சுமார் இரண்டரை கோடி ரூபாய் ரொக்கம். இரண்டு கோடி ரூபாய் மதிப்புள்ள தங்க நகைகள் கைப்பற்றப்பட்டன. அவருக்கு சர்வதேச தங்க கடத்தல் மற்றும் பெங்களூரின் தங்க வியாபாரிகளுடன் தொடர்பு இருப்பதாக கூறப்பட்ட நிலையில் இந்த வழக்கில் நட்சத்திர ஹோட்டல் உரிமையாளர் தருண்ராஜ் என்பவரும் கைது செய்யப்பட்டார்.
தொடர்ந்து ரன்யா ராவிடம் நடத்தப்பட்ட விசாரணையில் பல நாட்களாக அவர் இதே போல தங்கத்தை கடத்தி வந்தது தெரிய வந்தது. மேலும் இந்த சம்பவம் தொடர்பாக மும்பை பெங்களூரு உள்ளிட்ட இந்தியாவின் முக்கிய நகரங்களிலும் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. இந்த நிலையில் வழக்கு விசாரணையால் ரம்யா ராவ் கடும் மன உளைச்சலில் இருப்பதால் மருத்துவ சிகிச்சை எடுத்துக் கொள்ள அவருக்கு ஜாமின் வழங்க வேண்டும் என பெங்களூரு பொருளாதார குற்றப்பிரிவு சிறப்பு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார்.
இந்த மனு விசாரணைக்கு வந்த போது வருவாய் புலனாய்வு இயக்குனரகம் சார்பில் கடும் ஆட்சேபனை தெரிவிக்கப்பட்டது. இதனையடுத்து ஜாமீன் மனு தள்ளுபடியான நிலையில் பெங்களூர் மத்திய சிறையில் ரனியா ராவ் அடைக்கப்பட்டிருக்கிறார். இந்த நிலையில் தங்க கடத்தல் தொடர்பாக வருவாய் புலனாய்வு இயக்குனர் அதிகாரிகளிடம் அவர் அளித்த வாக்குமூலம் வெளியாகி உள்ளது.
அதன்படி துபாயில் ரன்யா ராவ் ரியல் எஸ்டேட் தொழில் செய்து வருவதாகவும் அதற்காக 27 முறை துபாய் சென்று வந்திருக்கிறார். அப்போது அவரது நண்பரும் பிரபல நட்சத்திர ஹோட்டலின் உரிமையாளருமான தருண்ராஜ் கேட்டுக் கொண்டதால் துபாயிலிருந்து தங்கத்தை இந்தியாவுக்கு கடத்தி வந்ததாகவும் அதனை எப்படி கொண்டு வருவது என்பது குறித்து யூடியூபில் பார்த்து தெரிந்து கொண்டதாக கூறி இருக்கிறார். அதே நேரத்தில் தனக்கும் சர்வதேச கடத்தல் கும்பலுக்கும் தொடர்பு இல்லை எனவும் துபாய் விமான நிலையத்தில் அமெரிக்காவில் வசிக்கும் ஒரு நபர் 12 தங்க கட்டிகளை கொடுத்ததாகவும் அதனை தனது தொடையில் வைத்து இந்தியாவுக்கு கொண்டு வந்ததாக கூறியிருக்கிறார். தொடர்ந்து இதே போல சில முறை தங்கத்தை கடத்தி வந்ததாகவும் ரன்யா ராவ் கூறியிருக்கிறார்.


Click it and Unblock the Notifications
