ஜெகதீஷ் ஷெட்டர் ரிட்டர்ன்.. கர்நாடகா பாஜகவில் வெடித்தது ஆர்.எஸ்.எஸ். Vs லிங்காயத் ஜாதி மோதல்!
பெங்களூர்: கர்நாடகா முன்னாள் முதல்வர் ஜெகதீஷ் ஷெட்டர் காங்கிரஸில் இருந்து விலகி மீண்டும் பாஜகவில் இணைந்திருப்பது பாஜகவில் பெரும் பிரளயத்தை ஏற்படுத்தி வருவதாக கூறப்படுகிறது. பாஜகவின் தாய் அமைப்பான ஆர்.எஸ்.எஸ். தலைவர்களுக்கு தெரியாமலேயே முன்னாள் முதல்வர் எடியூரப்பா தலைமையிலான லிங்காயத் ஜாதி லாபிதான் ஜெகதீஷ் ஷெட்டரை பாஜகவில் மீண்டும் இணைத்துவிட்டதாக குமுறல்கள் வெடித்துள்ளன.
கர்நாடகாவில் லிங்காயத் மற்றும் ஒக்கலிகா கவுடா ஜாதிகள்தான் பெரும்பான்மையினராக உள்ளனர். கர்நாடகா அரசியலிலும் இந்த இரு ஜாதிகள்தான் தீர்மானிக்கும் சக்திகளாக இருக்கின்றனர். லிங்காயத் ஜாதி வாக்குகள் பாஜகவுக்கும் ஒக்கலிகா கவுடா வாக்குகள் காங்கிரஸுக்கும் என பிரிந்து நிற்கின்றன.

கர்நாடகா பாஜகவில் லிங்காயத் ஜாதிகளின் முகமாக இருப்பவர் முன்னாள் முதல்வர் எடியூரப்பா. கடந்த ஆட்சியில் முதல்வர் பதவியில் இருந்து எடியூரப்பாவை பாஜக மேலிடம் விலக சொல்லி இருந்தாலும் அவருக்கான முக்கியத்துவத்தை குறைக்கவில்லை. அவரது மகன் விஜயேந்திராவுக்கும் மாநில பாஜக தலைவர் பதவியை கொடுத்தது. இது லிங்காயத் ஜாதி வாக்குகளை தக்க வைக்கிற பாஜக மேலிடத்தின் நடவடிக்கையாகவே பார்க்கப்பட்டது. இதனால் மாநில பாஜக தலைவர் பதவியை எதிர்பார்த்த இதர ஜாதி முகங்கள் ரொம்பவே ஏமாற்றமும் விரக்தியும் அடைந்தனர்.
இந்த நிலையில் தற்போது காங்கிரஸில் இருந்து விலகி மீண்டும் பாஜகவில் இணைந்துள்ளார் முன்னாள் முதல்வர் ஜெகதீஷ் ஷெட்டர். இவரும் லிங்காயத் ஜாதியை சேர்ந்தவர்தான். பொதுவாக கர்நாடகா பாஜகவின் நகர்வுகள், அதன் தாய் அமைப்பான ஆர்.எஸ்.எஸ்-ன் முகங்களான பிஎல் சந்தோஷ், பிரகலாத் ஜோஷி ஆகியோரின் கண்ணசைவு இல்லாமல் நகருவது கிடையாது. ஆனால் ஜெகதீஷ் ஷெட்டர் விவகாரம் அப்படி நடக்கவில்லையாம்.
ஜெகதீஷ் ஷெட்டர் லிங்காயத் என்பதால் எடியூரப்பா, அவரது மகன் விஜயேந்திரா என்கிற லிங்காயத் லாபி டெல்லி மேலிடத்துடன் நேரடியாக பேச்சுவார்த்தை நடத்தி மீண்டும் பாஜகவில் இணைத்துவிட்டதாம். ஜெகதீஷ் ஷெட்டரின் மீள் வருகை, ஆர்.எஸ்.எஸ். லாபியிஸ்டுகளான பிரகலாத் ஜோஷி, பிஎல் சந்தோஷுக்கு தெரியப்படுத்தவில்லையாம். ஆர்.எஸ்.எஸ். இயக்கத்தை மீறி லிங்காயத் லாபி, கர்நாடகா பாஜகவில் கை ஓங்குவதை எப்படி அனுமதிக்க முடியும் என்கிற கொந்தளிப்பில் இருக்கின்றனராம் அவர்களது ஆதரவாளர்கள்.
எப்படியெல்லாம் பிரச்சனை வெடிக்குது சாமீகளா!
-
1000% கன்ஃபார்ம்.. புதிய கட்சி ஆரம்பிக்கும் அண்ணாமலை! அடுத்த வாரம் இருக்கு கச்சேரி! பரபர பாஜக! -
"2.0 அவதாரம் எடுக்கும் அண்ணாமலை!".. பாஜகவா? புதிய கட்சியா? அரசியல் களத்தை அலற விட்ட போஸ்டர்கள் -
திரிணாமுல் எம்பிகள் மீது தொடர் தாக்குதல்.. பாஜகதான் காரணமா? வெளியான ஷாக் தகவல்! -
டெல்லியில் க்ளைமாக்ஸ்! நெருங்கும் மெகா பிளான்.. பிரதமர் மோடியின் மத்திய அமைச்சரவையில் அதிரடி மாற்றம் -
கொஞ்சம் பொறுமையா இருங்க ஜி! தனித் தவில் வாசிக்க தயாரான அண்ணாமலை! அமைதிப்படுத்த இறங்கிய அமித் ஷா? -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
சிம்பிளாக பதவியேற்பு.. கர்நாடகாவில் கவனத்தை ஈர்க்கும் டி.கே.சிவகுமார்! காரணம் இதுதான்! -
கர்நாடகா முதல்வராக தேர்வானார் டிகே சிவக்குமார்.. காங்., எம்எல்ஏக்கள் ஆதரவு.. பதவியேற்பு எப்போது? -
டி.கே.சிவகுமாருக்கு செக்.. ஆட்டத்தை தொடங்கிய சித்தராமையா! ராகுல் காந்திக்கு பறந்த முக்கிய கோரிக்கை! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
கர்நாடகா முதல்வராகிறார் டிகே சிவக்குமார்.. ஜூன் 3ம் தேதி பதவியேற்பு.. சித்தராமையா மகனுக்கு ‘ஜாக்பாட்' -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு












Click it and Unblock the Notifications