மெட்ரோ ரயில் கட்டணம் 30% வரை குறைப்பு.. பயணிகள் எதிர்ப்பால் வழிக்கு வந்த பெங்களூர் நம்ம மெட்ரோ

Subscribe to Oneindia Tamil

பெங்களூர்: பெங்களூரில் மெட்ரோ ரயில்களில் 45 சதவீத கட்டணம் உயர்த்தப்பட்டு இருந்தது. இந்த கட்டண உயர்வு கடந்த ஞாயிற்றுக்கிழமை முதல் அமலுக்கு வந்தது. கட்டண உயர்வுக்கு பயணிகள் மத்தியில் கடும் எதிர்ப்பு கிளம்பிய நிலையில், மெட்ரோ ரயில் கட்டணம் 30 சதவிகிதம் குறைக்கப்படுவதாக மெட்ரோ நிர்வாகம் அறிவித்துள்ளது.

கர்நாடக மாநில தலைநகரான பெங்களூரில் போக்குவரத்து நெரிசல் பிரச்சினைக்கு தீர்வுகாணும் விதமாக மெட்ரோ ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன. செல்லக்கட்டா முதல் காடுகோடி வரையும், நாகவாராவில் இருந்து சில்க் நிறுவனம் வரையும் மெட்ரோ ரயில்கள் இயக்கப்பட்டு வருகிறது. தற்போது 76 கிலோ மீட்டருக்கு தற்போது மெட்ரோ ரயில் சேவை உள்ளன.

Bangalore Metro Rail Railway

இன்னும் 5 ஆண்டுகளில் 220 கிலோ மீட்டர் தூரத்திற்கு மெட்ரோ ரயில் சேவையை விரிவாக்க திட்டமிடப்பட்டுள்ளது. இதற்காக நகரில் மெட்ரோ ரயில் விரிவாக்க பணிகள் முழு வீச்சில் நடைபெற்று வருகின்றன. பெங்களூர் நம்ம மெட்ரோ ரயில் டிக்கெட் கட்டணம் கடந்த 2017-ம் ஆண்டு உயர்த்தப்பட்டு இருந்தது. அதன்பிறகு, கட்டணம் உயர்த்தப்படவில்லை. இந்த நிலையில் தான், நம்ம மெட்ரோ ரயில் டிக்கெட் கட்டணத்தை உயர்த்த ஒரு குழு ஒன்றை நிர்வாகம் அமைத்தது.

அந்த குழுவினர் 40 முதல் 45 சதவீதம் வரை கட்டணத்தை உயர்த்தலாம் என்று அறிக்கை அளிக்கப்பட்டது. இதன்படி, பெங்களூரில் மெட்ரோ ரயில் டிக்கெட் கட்டணம் 45 சதவீதம் வரை உயர்த்தப்பட்டது. இந்த கட்டண உயர்வு கடந்த 9 ஆம் தேதி முதல் அமலுக்கு வந்தது. குறைந்தபட்ச கட்டணமாக ரூ.10 எனவும், அதிகபட்சமாக ரூ.90 எனவும் கட்டணம் நிர்ணயிக்கப்பட்டு இருக்கிறது.

அதாவது ஒவ்வொரு கிலோ மீட்டருக்கு ஏற்றவாறு கட்டண உயர்வு அமல்படுத்தப்பட்டு இருந்தது. அதன்படி, 2 கிலோ மீட்டர் வரை ரூ.10 கட்டணமும், 30 கிலோ மீட்டருக்கு மேல் ரூ.90 கட்டணமும் நிர்ணயிக்கப்பட்டது. கட்டண உயர்வுக்கு பயணிகள் மத்தியில் கடும் எதிர்ப்பு கிளம்பியது. கட்டண உயர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து சமூக வலைத்தளங்களில் ஹேஷ்டேக்குகள் போட்டு நெட்டிசன்கள் டிரெண்ட் செய்தனர்.

இந்த நிலையில், மெட்ரோ ரயில் கட்டணத்தை குறைப்பதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. 30 சதவிகிதம் வரை கட்டணம் குறைக்கப்படுவதாகவும் இந்த கட்டண குறைப்பு உடனடியாக அமலுக்கு வரும் எனவும் மெட்ரோ ரயில் நிர்வாகம் கூறியுள்ளது. பெங்களூர் மெட்ரோ ரயில் கார்ப்பரேஷன் லிமிட்டெடு (BMRCL) மேலாண்மை இயக்குனர் மகேஸ்வர் ராவ் இது தொடர்பாக கூறியிருப்பதாவது:-

பயணிகளிடம் இருந்து கருத்துக்கள் பெறப்பட்டன. பின்னர் வரப்பெற்ற பரிந்துரைகள் தொடர்பாக விரிவாக ஆலோசிக்கப்பட்டது. இதன் தொடர்ச்சியாக கட்டணத்தில் திருத்தங்கள் செய்ய முடியும் என்று முடிவு செய்தோம். அதன்படி, கட்டணத்தில் 30 சதவீதம் குறைக்க முடிவு செய்துள்ளோம். அது இன்று முதல் உடனடியாக அமலுக்கு வரும். பயணிகளின் நலனுக்காக இது செய்யப்படுகிறது" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+