பாஜகவை வீழ்த்தணும்.. அழைத்த ராகுல்! ‛ஓகே’ சொன்ன கமல்.. கர்நாடகாவில் காங்கிரசுக்காக பிரசாரம்.. ஆஹா
பெங்களூர்: கர்நாடகா சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் கட்சிக்கு ஆதரவாக மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசன் தீவிர பிரசாரம் செய்ய உள்ளார். பிரசாரத்துக்கு ராகுல் காந்தி அழைப்பு விடுத்த நிலையில் அதனை கமல்ஹாசன் ஏற்றுள்ளார்.
கர்நாடகா சட்டசபை தேர்தல் மே மாதம் 10ம் தேதி நடைபெற உள்ளது. தற்போது அங்கு பாஜக ஆட்சி நடக்கிறது. இந்நிலையில் தான் நடைபெற உள்ள தேர்தலில் பாஜகவை வீழ்த்தி வெற்றி பெறும் முனைப்பில் காங்கிரஸ் கட்சி தீவிரமாக செயல்பட்டு வருகிறது.

காங்கிரஸ் சார்பில் தேசிய தலைவர் மல்லிகார்ஜூன கார்கே, ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி, முன்னாள் முதல்வரும் தற்போதைய எதிர்க்கட்சி தலைவருமான சித்தராமையா, கர்நாடகா மாநில காங்கிரஸ் தலைவர் டிகே சிவக்குமார் உள்ளிட்டவர்கள் தீவிர பிரசாரம் மேற்கொண்டு வருகின்றனர்.
இந்நிலையில் தான் காங்கிரஸ் கட்சிக்கு ஆதரவாக மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசனை பிரசாரம் செய்ய ராகுல் காந்தி அழைத்துள்ளதாக கூறப்படுகிறது. இந்த அழைப்பை தற்போது கமல்ஹாசன் ஏற்றுள்ளார். அதன்படி கமல்ஹாசன் கர்நாடகா தேர்தலில் காங்கிரஸ் கட்சிக்கு ஆதரவாக பிரசாரம் மேற்கொள்ள உள்ளார்.
மே மாதம் முதல் வாரத்தில் கமல்ஹாசன் கர்நாடகாவில் தீவிர பிரசாரம் செய்ய இருக்கிறார். கர்நாடகாவில் பெங்களூரில் ஏராளமான தமிழர்கள் உள்ளனர். குறிப்பாக பெங்களூர் சிவாஜிநகர், காந்தி நகர், சாம்ராஜ்பேட்டை, ராஜாஜிநகர், ஆர்ஆர் நகர், புலிகேசி நகர் உள்பட பல தொகுதிகளில் வேட்பாளர்களின் வெற்றியை நிர்ணயிக்கும் அளவில் தமிழர்கள் வசிக்கின்றனர்.
அதேபோல் சிவமொக்கா, பெங்களூர் புறநகர், சாம்ராஜ்நகர் உள்பட பல மாவட்டங்களில் கணிசமான அளவில் தமிழர்களின் வாக்கு உள்ளது. இந்நிலையில் தான் கமல்ஹாசன் காங்கிரஸ் கட்சிக்கு ஆதரவாக கர்நாடகாவில் தேர்தல் பிரசாரம் செய்ய உள்ளார்.

இவர் தமிழர்கள் அதிகம் வசிக்கும் பகுதிகளில் பிரசாரம் செய்ய உள்ளார். கமல்ஹாசன் பிரசாரம் செய்ய உள்ள தொகுதி, தேதி குறித்த விபரங்கள் விரைவில் ரெடியாக உள்ளன. அதன்பிறகு மே முதல் வாரத்தில் கமல்ஹாசன் கர்நாடகாவில் தேர்தல் பிரசாரத்தை தொடங்கலாம் என்ற தகவல்கள் தற்போது வெளியாகி உள்ளன.
தமிழ்நாட்டில் மக்கள் நீதி மய்யம் எனும் கட்சியை தொடங்கிய கமல்ஹாசன் கடந்த 2019 நாடாளுமன்ற தேர்தலிலும் அதன்பிறகு 2021ம் ஆண்டில் நடந்த தமிழக சட்டசபை தேர்தலிலும் வேட்பாளர்களை நிறுத்தினார். இந்த தேர்தலில் அவரது கட்சி வேட்பாளர்கள் வெற்றி பெறவில்லை. கடந்த சட்டசபை தேர்தலில் கமல்ஹாசன் கோவை தெற்கு சட்டசபை தொகுதியில் குறைந்த வாக்கு வித்தியாசத்தில் பாஜக வேட்பாளர் வானதி சீனிவாசனிடம் வெற்றியை பறிகொடுத்தார்.
அதன்பிறகு தற்போது கமல்ஹாசன் காங்கிரஸ் கட்சியுடன் நெருக்கம் காட்டி வருகிறார். ராகுல் காந்தியின் பாரத் ஜோடோ யாத்திரையில் டெல்லியில் கமல்ஹாசன் பங்கேற்றார். இதையடுத்து இருகட்சிகள் இடையே நல்ல உறவு இருந்து வருகிறது. இந்நிலையில் தான் கர்நாடகா தேர்தல் பிரசாரத்துக்கு ராகுல் காந்தி அழைப்பு விடுத்த நிலையில் கமல்ஹாசன் ஓகே சொல்லியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
-
வேட்பாளர் அறிவிப்பு இருக்கட்டும்.. இப்படி ஏன் செஞ்சீங்க? எடப்பாடி பழனிசாமி மீது கொந்தளித்த ரரக்கள்! -
இரட்டை இலையை விட்டுவிட்டு.. தாமரைக்கு தாவும் கூட்டணி கட்சிகள்! எங்கேயோ இடிக்குதே! -
பாஜகவின் 27 வேட்பாளர்கள் இவர்கள்தானா? வெளியான உத்தேச பட்டியல்.. அண்ணாமலைக்கு சீட் இல்லை? -
உளவுத்துறை சொன்னது என்ன? 155 சீட் பின்னணியில் அமித்ஷா தந்த கிரீன் சிக்னல்! எடப்பாடி முகம் பிரகாசம் -
அண்ணாமலைக்கு சீட் கொடுக்க கூடாது.. எடப்பாடி எடுத்த முடிவு.. பாஜக தொகுதி பங்கீட்டில் என்ன நடந்தது? -
14 அமைச்சர்களிடம் நேருக்கு நேர் மோதல் இல்லை.. பாஜக, அமமுகவை கோர்த்துவிட்ட எடப்பாடி பழனிசாமி! -
எடப்பாடி சாமர்த்தியசாலியா.. அமித்ஷா சாமர்த்தியசாலியா.. அதிமுக கூட்டணியில் நடக்கும் எதார்த்தம் என்ன -
அரைக் கிணறை தாண்டாத அறிவாலயம்.. அதிவேகத்தில் அதிமுக! போட்ட ஸ்கெட்சை பக்காவாக முடித்த எடப்பாடி! -
பலே ஆளுங்க எடப்பாடி பழனிசாமி.. பாஜகவின் 27 தொகுதிகளில் இப்படி ஒரு ட்விஸ்டா! பாவம் ஜிகே வாசன்? -
அதிமுக வேட்பாளர்கள் யார்? 146 வேட்பாளர்களை எப்போது அறிவிப்பார் எடப்பாடி! உச்சகட்ட டென்ஷனில் ர.ர.கள்! -
நடிகை கவுதமியை மீண்டும் ஏமாற்றிய அதிமுக – பாஜக.. ராஜபாளையம் ஜான் பாண்டியனுக்கு ஒதுக்கியதன் பின்னணி -
30 சிறுமிகளிடம் சில்மிஷம்.. தொக்காக சிக்கிய பாஜக கவுன்சிலர் மகன்! கோவாவில் ஷாக்












Click it and Unblock the Notifications