குட்நியூஸ்.. கர்நாடகா அணைகளில் இருந்து காவிரியில் நீர்திறப்பு அதிகரிப்பு.. எவ்வளவு கனஅடி தெரியுமா?
பெங்களூர்: காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் கனமழையின் காரணமாக கர்நாடகாவில் உள்ள கபினி, கேஆர்எஸ் அணைகளில் இருந்து திறக்கப்படும் தண்ணீரின் அளவு அதிகரித்துள்ளது. அங்கு தற்போது பல இடங்களில் மழை பெய்து வரும் நிலையில் வரும் நாட்களில் தமிழகத்துக்கு திறக்கப்படும் தண்ணீரின் அளவு என்பது இன்னும் அதிகரிக்கும் என எதிர்க்கப்பார்க்கப்படுகிறது.
தமிழகத்தை போல் கர்நாடகாவில் தென்மேற்கு பருவமழை காலம் துவங்கி உள்ளது. ஆனாலும் எதிர்பார்த்த அளவுக்கு மழை இல்லை. இந்நிலையில் தான் கடந்த 2 நாட்களாக காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் மழை பெய்து வருகிறது.

இதனால் கேஆர்எஸ் எனும் கிருஷ்ணராஜசாகர் மற்றும் கபினி அணைகளுக்கு அதிகளவில் நீர்வரத்து வருகிறது. இந்த அணைகளில் இருந்து திறக்கப்படும் தண்ணீர் தான் காவிரி ஆறு மூலம் தமிழகத்துக்கு வரும்.
தற்போதைய சூழலில் மண்டியா மாவட்டத்தில் உள்ள 124.80 அடி உயரம் கொண்ட கேஆர்எஸ் அணையின் நீர்மட்டம் என்பது 100 அடியை நெருங்கி உள்ளது. அணைக்கு 44 ஆயிரம் கனஅடிக்கும் அதிகமாக தண்ணீர் வருகிறது. இதனால் அணையில் இருந்து திறக்கப்படும் தண்ணீரின் அளவு என்பது தொடர்ந்து அதிகரித்து வருகிறது. அதன்படி கேஆர்எஸ் அணையில் இருந்து காவிரியில் 2,688 கனஅடி நீர் காவிரியில் திறக்கப்பட்டுள்ளது
அதேபோல் கபினி அணையின் நீர்மட்டமும் தொடர்ந்து அதிகரிக்கப்பட்டு வருகிறது. கடல் மட்ட அளவில் இருந்து 2,284 அடி கொள்ளவு கொண்ட கபினி அணை முழுவதுமாக நிரம்ப இன்னும் 5 அடி மட்டுமே பாக்கி உள்ளது. அணைக்கான நீர்வரத்து என்பது 25 ஆயிரம் கனஅடியாக உள்ளது. இதனால் விரைவில் கபினி அணை முழு கொள்ளளவை எட்ட வாய்ப்புள்ளது.
மேலும் தற்போது பல இடங்களில் மழை பெய்து வருவதால் அணைக்கான நீர்வரத்து அதிகரித்து வருகிறது. இதனால் அணையின் பாதுகாப்பு கருதி கபினியில் இருந்து காவிரியில் திறக்கப்படும் தண்ணீர் 12 ஆயிரம் கனஅடியில் இருந்து 15 ஆயிரம் கனஅடியாக அதிகரித்துள்ளது. இதன்மூலம் கபினி, கேஆர்எஸ் அணைகளில் இருந்து காவிரி ஆற்றில் 17,688 கனஅடி நீர் பாய்ந்து வருகிறது.
மேலும் குடகு, கேரளா மாநிலம் வயநாடு உள்ளிட்ட காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் மழை அதிகரிக்க வாய்ப்புள்ளது என கூறப்படுகிறது. இதனால் வரும் நாட்களில் அணைக்கு வரும் நீர்வரத்து அதிகரிக்கலாம். இது நடக்கும் பட்சத்தில் தமிழகத்துக்கு காவிரியில் திறக்கப்படும் நீரின் அளவும் தொடர்ந்து கூடும் என்பது குறிப்பிடத்தக்கது.
-
"எதிரிகள் சர்வ நாசம்".. எம்ஜிஆர், ஜெ., பாணியில் விஜய்.. கொல்லூர் மூகாம்பிகை கோவிலுக்கு செல்வது ஏன்? பின்னணி -
தங்கப்பத்திரத்தில் 1.50 கோடி முதலீடு செய்தவர்களுக்கு 6 கோடி தந்த மத்திய அரசு.. லாபம் 4.85 கோடி -
தனியார் பள்ளிகள் லஞ்சம் தரவேண்டாம்.. அதற்கு பதிலாக.. ராஜ்மோகன் உத்தரவால் வரப்போகும் மாற்றம் -
"ஜனவரி 1 முதல் ஆர்.எஸ்.பாரதி அரை மீசை பாரதி என்று அழைக்கப்படுவார்" - மாணிக்கம் தாகூர் கிண்டல்! -
அரசு ஊழியர்களுக்கு அழுத்தம் ஏற்படாது.. சேவை பெறும் உரிமைச் சட்டம் தான் பெஸ்ட்.. அன்புமணி -
ஸ்டாலின் கையில் ஆழ்வார்பேட்டை ரிப்போர்ட்! அப்பவே சொன்னோம்ல.. கழண்டு விழுகிறதா திமுக கூட்டணி கியர்? -
கூட்டுறவு வங்கி பயிர்க்கடன் தள்ளுபடி.. அரசாணையில் குளறுபடி? "அப்பவே சொன்னோமே" சீறும் கோவை விவசாயிகள் -
டிசிஎஸ் சைலெண்டாக செய்யும் விஷயம்.. 50000 ஊழியர்களுக்கு டார்கெட்.. தனி பிரிவு உருவாக்க முடிவு! -
"நீட் வேண்டாம்.. +2 மார்க் அடிப்படையில் மருத்துவ சேர்க்கை.." பிரதமர் மோடியிடம் விஜய் வைத்த கோரிக்கை! -
என் சொந்த பணத்தையே பயன்படுத்துங்க.. விஜய்யின் டெல்லி பயணம்.. தனியார் ஜெட்டுக்கு சொந்த காசில் செலவு? -
"5 லட்சம் AI ஏஜெண்டுகள்.." இனி முன்பு போல ITல் வேலை இருக்காது.. வெளிப்படையாக பேசிய டிசிஎஸ் சேர்மேன் -
2 மனைவிகளும் எனக்கு வேணும் சார்.. ஒரு நிமிஷம் போலீசுக்கே தலைசுத்திருச்சு.. திகைத்த திண்டுக்கல்












Click it and Unblock the Notifications