அமித்ஷாவை வெறிநாய் கடித்துவிட்டது.. அம்பேத்கர் விவகாரத்தில் விளாசிய கர்நாடகா அமைச்சர் பிரியங் கார்கே
பெங்களூர்: அண்ணல் அம்பேத்கரை விமர்சித்த மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை வெறிநாய் கடித்துவிட்டது என கர்நாடகா அமைச்சர் பிரியங் கார்கே பேசியிருப்பது பெரும் சர்ச்சையாக வெடித்துள்ளது. மேலும் கடவுள் பெயரை உச்சரிக்காமல் அம்பேத்கர் பெயரை உச்சரித்தால் சமூக, அரசியல் சமத்துவம் உருவாகும் என்றும் பிரியங் கார்கே, அமித்ஷாவுக்கு பதிலடி கொடுத்துள்ளார்.
ராஜ்யசபாவில் அரசியல் சாசனம் மீதான விவாதம் நடைபெற்ற போது பேசிய மத்திய அமைச்சர் அமித்ஷா, அம்பேத்கர்.. அம்பேத்கர்.. அம்பேத்கர் என கோஷம் போடுவது பேஷனாகிவிட்டது; அம்பேத்கர் பெயரை உச்சரிப்பதற்கு பதிலாக கடவுள் நாமத்தை உச்சரித்தால் சொர்க்கத்துக்கு செல்லலாம் என பேசியிருந்தார்.

அமித்ஷாவின் இந்தப் பேச்சுக்கு நாடு முழுவதும் கடும் எதிர்ப்பு எழுந்தது. டெல்லியில் நாடாளுமன்றத்தை இந்தியா கூட்டணி எம்பிக்கள் முடக்கினர். நாடாளுமன்ற வளாகத்தில் அமித்ஷா ராஜினாமா கோரி இந்தியா கூட்டணி எம்பிக்கள் போராட்டம் நடத்தினர். இதற்கு எதிராக பாஜக எம்பிக்களும் போராட்டம் நடத்தியதால் கடும் மோதல் ஏற்பட்டது. இந்த மோதல் தொடர்பாக லோக்சபா எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
இதேபோல நாடு முழுவதும் காங்கிரஸ் கட்சியினர் போராட்டங்களை நடத்தினர். தமிழ்நாட்டில் திமுக, இடதுசாரிகள் தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகின்றனர்.
இந்த நிலையில் கர்நாடகா அமைச்சர் பிரியங் கார்கே கூறுகையில், மத்திய அமைச்சர் அமித்ஷாவை வெறிநாய் கடித்துவிட்டது; அதனால்தான் அம்பேத்கர் குறித்து விமர்சித்துள்ளார். கடவுளின் பெயரை உச்சரித்தாலே சொர்க்கம் எப்படி கிடைக்கும் என தெரியவில்லை; ஆனால் அம்பேத்கர் பெயரை உச்சரித்தால் சமூக, அரசியல், பொருளாதார துறைகளில் சமத்துவம் கிடைக்கும் என்றார். மத்திய அமைச்சர் அமித்ஷா குறித்த பிரியங் கார்கேவின் இந்த விமர்சனத்துக்கு பாஜக தலைவர்கள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
-
அமித் ஷாவிடம் நேரடியாக அண்ணாமலை சொன்ன மேட்டர்.. அடுத்த நொடி அலறிய சென்னை பாஜக அலுவலகம்! என்ன நடந்தது -
அந்த 2 லேடீஸ்..1 மாஜி தலை! பாஜக மண்ணைக் கவ்வ ‘இவர்கள்’ தான் காரணம்! அமித் ஷாவிடம் அடுக்கிய அண்ணாமலை! -
அமித்ஷா தரும் அந்த 'பவர்ஃபுல்' புதிய ஆஃபர்.. அண்ணாமலை பச்சை கொடி காட்டுவாரா? இன்று என்ன முடிவு? -
ரொம்ப அவசரப்படாதீங்க அண்ணாமலை.. அமித் ஷா போட்ட அன்புக் கட்டளை! இன்னும் தமிழ்நாடு திரும்பாதது ஏன்? -
பலே ஆளுங்க அண்ணாமலை.. ‘பயோ’வைப் பாருங்களேன்! பிள்ளையையும் கிள்ளி.. தொட்டிலையும் ஆட்டி.. பரபர பாஜக! -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்!












Click it and Unblock the Notifications