அய்யோ நெஞ்சே பதறுதே.. வாகன ஓட்டிகள் மீது கொடூர தாக்குதல்.. பெங்களூர் பந்த்தில் ஷாக் - வீடியோ

Subscribe to Oneindia Tamil

பெங்களூர்: அரசு பஸ்சில் பெண்களுக்கு இலவச பயண திட்டத்தை ரத்து செய்யக்கோரி பெங்களூரில் இன்று தனியார் போக்குவரத்து சங்கங்கள் பந்த் நடத்தினர். இந்த வேளையில் ராபிடோ மற்றும் டூவீலர்களில் சென்றவர்களை போராட்டக்காரர்கள் வழிமறித்து கொடூரமாக தாக்கிய சம்பவம் தொடர்பான வீடியோ வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

கர்நாடகாவில் கடந்த மே மாதம் நடந்த சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் கட்சி வெற்றி பெற்றது. முதல்வராக சித்தராமையா பதவியேற்றார். இதையடுத்து தேர்தல் வேளையில் அவர்கள் கூறிய சிவசக்தி எனும் திட்டத்தை நிறைவேற்றினர்.

Amid of Bangalore Bandh Protesters attacks and abuse to two wheeler drivers

இந்த திட்டத்தின்படி கர்நாடகா அரசு போக்குவரத்து கழகத்தின் சாதாரண பஸ்களில் பெண்கள் இலவசமாக பயணம் செய்யலாம். இந்த திட்டம் என்பது பெண்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. அதேவேளையில் இலவச பயண திட்டத்தின் காரணம் தனியார் வாகன ஓட்டிகள் பாதிக்கப்பட்டனர்.

அதாவது பெண்கள் அரசு பஸ்களில் இலவச பயணம் செய்வதால் ஆட்டோ, வாடகை கார், தனியார் பஸ்களை புறக்கணித்தனர். இதனால் அவர்களுக்கு வருவாய் இழப்பு ஏற்பட்டது. இந்நிலையில் தான் கர்நாடகா அரசு சார்பில் நடைமுறையில் உள்ள சிவசக்தி திட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்தும், தங்களின் 30 வகையான கோரிக்கையை நிறைவேற்ற வலியுறுத்தியும் இன்று ஒருநாள் பந்த் போராட்டத்தை அறிவித்தனர்.

தனியார் போக்குவரத்து சங்கங்கள் சார்பில் இந்த பந்த் போராட்டம் இன்று காலை முதல் தொடங்கியது. பெங்களூர் நகரில் வாடகை கார், ஆட்டோ, தனியார் பஸ்கள் இயங்கவில்லை. அரசு பஸ்கள் மட்டும் குறைந்த எண்ணிக்கையில் போலீஸ் பாதுகாப்புடன் இயங்கியது. மெட்ரோ ரயில்களின் இயக்கங்களும் அதிகரிக்கப்பட்டது. இதனால் ஓரளவு மக்கள் நிம்மதியடைந்தனர்.

இருப்பினும் பல இடங்களுக்கு விரைவாக செல்ல வேண்டும் என்பதால் சிலர் ராபிடோ போன் வாடகை பயணம் வழங்கும் பைக்குகளில் சென்றனர். இதனை பார்த்த போராட்டக்காரர்கள் ராபிடோ பைக்கில் பயணித்த நபர் மற்றும் அதனை ஓட்டிய டிரைவரை தாக்கினர். மொத்தம் 4 இடங்களில் தாக்குதல் நடத்தப்பட்டது.

இந்த வேளையில் பைக்கில் சென்றவர்களின் ஹெல்மெட்டை ரோட்டில் தூக்கி வீசி போராட்டக்காரர்கள் உடைத்தனர். மேலும் பந்த் நடக்கும்போது பைக்கை ஏன் ஓட்டுகிறாய்? எனக்கூறி நடுரோட்டில் பயணி மற்றும் ராபிடோ பைக் ஓட்டுனர் மீது தாக்குதல் நடத்தப்பட்டது. இதுதவிர இன்னொரு இடத்தில் பைக்கில் சென்றவரின் ஹெல்மெட் அகற்றி தலையில் முட்டையை உடைத்து அட்டூழியம் செய்தனர்.

இதுதொடர்பான வீடியோ காட்சிகள் தற்போது வெளியாகி வேகமாக பரவி வருகிறது. இதுபற்றி பெங்களூர் மாநகர போலீஸ் கமிஷனர் தயானந்த் கூறுகையில், ‛‛அத்துமீறி தாக்குதல் நடத்தியவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும்'' என எச்சரித்தார். ஆனாலும் சில இடங்களில் அத்துமீறல் சம்பவம் நடந்தது.

இதற்கிடையே இன்று மதியம் தனியார் போக்குவரத்து சங்க நிர்வாகிகளுடன் போக்குவரத்து துறை அமைச்சர் ராமலிங்க ரெட்டி பேச்சுவார்த்தை நடத்தினார். இந்த பேச்சுவார்த்தையின்போது அவர்களின் பெரும்பாலான கோரிக்கைகளை நிறைவேற்றுவதாக அவர் வாக்குறுதி அளித்தார். இதையடுத்து பந்த் போராட்டத்தை தனியார் போக்குவரத்து சங்கத்தினர் கைவிட்டனர். இதையடுத்து இயல்பாக வாகனங்கள் இயங்க துவங்கின.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+