மதங்களை கடந்த காதல்.. பஜ்ரங்தள எதிர்ப்பை மீறி முஸ்லிம் இளைஞரை கரம்பிடித்த இந்து பெண்..பரபர கர்நாடகம்
பெங்களூர்: கர்நாடகத்தில் இந்து பெண்ணை முஸ்லிம் இளைஞர் திருமணம் செய்வதை ‛லவ்ஜிகாத்' எனக்கூறி பஜ்ரங்தளத்தை சேர்ந்தவர்கள் தடுத்து நிறுத்தி தாக்கிய நிலையில் போலீஸ் விசாரணைக்கு அந்த காதல் ஜோடி இன்று மதங்களை கடந்து கலப்பு திருமணம் செய்தனர்.
கர்நாடக மாநிலம் சிக்கமகளூர் மாவட்டம் கசபா தாலுகாவில் தாசரஹள்ளி அருகே உள்ள லட்சுமிபுரா கிராமத்தை சேர்ந்தவர் சைத்ரா.
இவருக்கும் ஜாபர் என்பவருக்கும் பழக்கம் ஏற்பட்டது. இந்த பழக்கம் காதலாக மாறியது. இதையடுத்து இருவரும் திருமணம் செய்து கொள்ள முடிவு செய்தனர்.

லவ் ஜிகாத் புகார்
அதன்படி அவர்கள் கடந்த புதன்கிழமை திருமணம் செய்ய முடிவு செய்தனர். இதையடுத்து அவர்கள் இருவரும் திருமணம் செய்து கொள்ள சப் ரிஜிஸ்டர் அலுவலகத்துக்கு சென்றனர். அங்கு அவர்கள் 2 பேரும் திருமணம் பதிவு செய்ய தயாராக இருந்தனர். இதற்கிடையே தான் சப் ரிஜிஸ்டர் அலுவலகத்தில் இந்து பெண்ணை முஸ்லிம் வாலிபர் ‛லவ் ஜிகாத்' திருமணம் செய்து கொள்ள உள்ளதாக தகவல்கள் பரவின.

திருமணம் தடுத்து நிறுத்தம்
இதையடுத்து சப் ரிஜிஸ்டர் அலுவலகத்துக்கு சென்ற இந்து அமைப்பான பஜ்ரங்தளம் அமைப்பினர் ஜாபரை பிடித்து தாக்கினர். மேலும் அவர்கள் 2 பேரையும் பிடித்து பசவனஹள்ளியில் உள்ள மகளிர் போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தனர். போலீசார் அவர்கள் 2 பேரிடமும் விசாரித்தனர். விசாரணையில் அவர்கள் 2 பேரும் காதலித்து நிச்சயத்தார்த்தம் செய்ததும், திருமணம் செய்து கொள்ள இருந்தது தெரியவந்தது. மேலும் 2 பேரும் திருமண வயதை எட்டியவர்கள் என்பதும், சுயவிருப்பத்தின் அடிப்படையில் திருமணம் செய்து கொள்ள இருந்ததாகவும் கூறினர்.

போலீஸ் விசாரணை
இதுபற்றி எஸ்பி உமா பிரசாந்த் விசாரணை நடத்தினார். மேலும் சம்பவம் குறித்து ஜாபர் கொடுத்த புகாரின் பேரில் பஜ்ரங்தளம் அமைப்பை சேர்ந்த 4 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர் இதற்கிடையே இளம்பெண்ணின் தாய் ேஷாபா போலீஸ் நிலையம் வந்தார். அப்போது அவரும் திருமணத்துக்கு பச்சைக்கொடி காட்டினார். இதுபற்றி சைத்ராவின் தாய் ேஷாபா கூறுகையில், "என் மகள் இஸ்லாமியரை திருமணம் செய்வதை ஏற்றுக்கொள்கிறேன். இருவரும் பத்திரமாக வீட்டுக்கு வர வேண்டும். அவர்களின் மகிழ்ச்சி தான் எனக்கான சந்தோஷம்'' என தெரிவித்தார். இதையடுத்து போலீசார் அவர்கள் 2 பேரையும் விடுவித்தனர்.

எதிர்ப்பை மீறி திருமணம்
இருப்பினும் பாதுகாப்பு கருதி இருவரையும் போலீசார் தங்கள் கண்காணிப்பில் ஒருநாள் வைத்திருந்தனர். இந்நிலையில் சைத்ரா-ஜாபர் ஜோடி இன்று நேற்று திருமணம் செய்து கொண்டனர். இவர்களின் திருமணத்துக்கு நண்பர்கள், உறவினர்கள் மட்டும் பங்கேற்றனர். அதன்பிறகு திருமணம் தொடர்பாக சைத்ரா மகிழ்ச்சியை தெரிவித்தார்.

கொலை மிரட்டலால் பாதுகாப்பு வேண்டும்
இதுபற்றி சைத்ரா கூறுகையில், ‛‛எனக்கு ஏற்பட்ட சம்பவம் யாருக்கு நடைபெறக்கூடாது.நாங்கள் சட்டப்படி திருமணத்தை பதிவு செய்ய சென்றோம். ஆனால் அவர்கள் வந்து எங்களை தடுத்தனர். எங்களை திருமணம் செய்து கொள்ள விடாமல் தடுப்பதற்கு அவர்களுக்கு எந்த உரிமையும் இல்லை. விருப்பத்தின்படியே திருமணம் செய்து கொள்வதாக கூறினோம். எங்களை தாக்கினார்கள். எங்களுக்கு கொலை மிரட்டல் விடுத்துள்ளனர். அவர்களிடம் இருந்து எங்களுக்கு பாதுகாப்பு வேண்டும்.

திருமணம் எங்களது விருப்பம்
எனது கணவரை பார்த்து உனக்கு இந்து பெண் வேண்டுமா என கேட்டனர். மேலும் எஸ்சி என சாதிப்பெயரை கூறினார்கள். நாங்கள் திருமணம் செய்து கொள்ள கூடாதா?. திருமணம் செய்து கொள்வது எங்களின் விருப்பம். நாங்கள் உழைத்து சாப்பிட போகிறோம். இதில் அவர்கள் தலையிட வேண்டிய அவசியமே கிடையாது. சம்பவம் குறித்து புகார் செய்துள்ளோம். '' என்றார்.
-
சென்னை மாணவி தடா அருவிக்கு நண்பர்களுடன் ஜாலியாக சுற்றுலா.. கற்பனையில் நினைக்காத சம்பவம் -
₹10 லட்சம் லோன் எடுத்தா ஒரு பகுதி இலவசமா? கூட்டுறவு வங்கியில் மானியம்.. பிசினஸ் லாபம் சூப்பர் சான்ஸ் -
சிறகடிக்க ஆசை: போலீஸ் சொன்ன விஷயம்! சந்தோஷத்தில் முத்து! அண்ணாமலை வீட்டில் கொண்டாட்டம்! விஜயா முடிவு -
லால்குடியில் களமிறங்கிய ஆதவ் அர்ஜுனா மாமியார்.. அதிமுகவில் இணைந்த 1 மாதத்தில் சீட் கொடுத்த எடப்பாடி -
ஓசூரில் சத்தமின்றி புரட்சி.. ரெடியாகும் தமிழ்நாட்டின் 6-வது பிரம்மாண்ட 'டைடல் பார்க்'.. தரமான வேகம் -
தமிழ் புத்தாண்டில் ஜாக்பாட் அடிக்கப்போகும் 3 லக்கி ராசிகள்.. லிஸ்ட்ல உங்க ராசி இருக்கா பாருங்க -
காங்கிரஸில் இணைந்தார் ஜி.கே.எம். தமிழ்க்குமரன்! பென்னாகரம் தொகுதியை குறி வைக்கும் ஜி.கே.மணி மகன்! -
திமுகவின் இளம் வேட்பாளர்.. அவினாசி தொகுதியில் 26 வயது மருத்துவருக்கு வாய்ப்பு கொடுத்த ஸ்டாலின்! -
உங்கள் வீட்டு பீரோவில் 62 சவரன் தங்கம் இருக்கா? நகைக்கு இந்த ஒரு கணக்கு இல்லனா ஐடி நோட்டீஸ் வரலாம் -
நகைக்கடன் வாங்கினீங்களா? ஏப்ரல் 1க்கு பின் தங்கம் வைத்து loan எடுக்க முடியாதா? புது ரூல்ஸ் அதிர்ச்சி -
பிடிஆர் பழனிவேல் தியாகராஜனின் தொகுதி! திமுகவின் கோட்டை மதுரை மத்தியில் சுந்தர்.சி போட்டி! யார் இவர்? -
ரசிகர்கள் எதிர்பார்த்த வீடியோவை வெளியிட்ட திரிஷா.. ஒரு வழியாக எல்லோரும் கேட்டது நடந்துடுச்சு.. குவியும் பாராட்டு












Click it and Unblock the Notifications