குடிக்கவே நீர் இல்லை.. ஆனால் ‛ஷவர் பார்ட்டிக்கு’ ரெடியான பெங்களூர் ஸ்டார் ஓட்டல்கள் - ரெசார்ட்டுகள்!
பெங்களூர்: பெங்களூரில் கடுமையான தண்ணீர் பஞ்சம் ஏற்பட்டிருக்கும் நிலையில், பிரபல ஸ்டார் ஓட்டல்கள் ஹோலி கொண்டாட்டத்திற்கு ஏராளமான அளவு தண்ணீரை வீணடிக்க தயாராகி வருகின்றன. இது தொடர்பான விளம்பரங்கள் பெங்களூர் மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்தியாவின் டெக் நகரமான பெங்களூர் தற்போது தண்ணீரின்றி தவித்து வருகிறது. ஒட்டுமொத்த கர்நாடக மாநிலத்தை பொறுத்த அளவில் 236 தாலுகாக்களில் 223 தாலுகாக்கள் வறட்சியால் தத்தளிக்கின்றன, அவற்றில் 219 மோசமாக பாதிக்கப்பட்டுள்ளன என அரசு அதிகாரிகள் கூறுகின்றனர். வழக்கமாக இதுபோன்ற வறட்சி காலங்களில் தனியார் டேங்கர் லாரிகளை மக்கள் நாடுவார்கள். ஆனால் இந்த முறை தனியார் டேங்கர் உரிமையாளர்களே தண்ணீர் இன்றி தவித்து வருகின்றனர்.

பெங்களூரில் 14,000 ஆழ்துளை கிணறுகளிலிருந்து, 4000 டேங்கர் லாரிகள் தண்ணீரை எடுத்து சப்ளை செய்கின்றன. ஆனால் இந்தமுறை சுமார் 7000 ஆழ்துளை கிணறுகள் வறண்டுவிட்டன. எனவே மொத்த தண்ணீர் விநியோகத்தில் 50 சதவிகிதம் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. இதனால் டேங்கர் லாரி தண்ணீரின் விலையும் உயர்ந்திருக்கிறது. வழக்கமாக ஒரு டேங்கர் லாரி தண்ணீர் ரூ.500-600 வரை விற்பனையாகும். ஆனால் தற்போது ரூ.2000ஆக இது உயர்ந்திருக்கிறது.
தண்ணீர் பற்றாக்குறை பிரச்னையை சரி செய்ய அரசு தீவிரமாக முயன்று வருகிறது. நிலைமை இப்படி இருக்கையில் வரும் 25ம் தேதி ஹோலி கொண்டாட்டத்திற்கு தண்ணீரை அதிக அளவு வீணடிக்க பெங்களூரின் பிரபல ஸ்டார் ஓட்டல்களும், ரிசார்ட்களும் திட்டமிட்டு வருகின்றன. அதாவது, ஹோலி பண்டிகையை கொண்டாடும் விதமாக ஷவர் விளையாட்டுக்களுக்கும், நீச்சல் குளத்தில் நேரத்தை கழிக்கவும் அழைப்பு விடுத்து விளம்பரங்களை செய்து வருகின்றன.
அலோஃப்ட் ஓட்டலால் நடத்தப்படும் பார்ட்டியில் அன்லிமிடெட் ஷவர் நடனங்களை கொண்டாடலாம் என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது. இதில் பங்கேற்க குழந்தைகளுக்க ரூ.49 டிக்கெட் கட்டணமாக நிர்ணயிக்கப்பட்டிருக்கிறது. பெரியவர்களை பொறுத்த அளவில் 8 பேர் கொண்ட குழுவுக்கு ரூ.2600 கட்டணமாக நிர்ணயிக்கப்பட்டிருக்கிறது.
அதேபோல பிரபல ராதா ஹோம்டெல் எனும் ஓட்டலும், ஹோலி பண்டிகை கொண்டாட்டம் குறித்து விளம்பரங்களை கொடுத்திருக்கிறது. அதில், "ஹோலியை வண்ணப்பொடிகளுடனும், ஷவர் மழை நடனங்களுடனும் கொண்டாடுங்கள்" என அழைப்பு விடுத்திருக்கிறது. இதில் பங்கேற்க சிறார்களுக்கு ரூ.99 கட்டணமாக நிர்ணயிக்கப்பட்டிருக்கிறது. 10 பேர் கொண்ட குழு ரூ.2999 கொடுத்து இதில் பங்கேற்கலாம் என்றும் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
பெங்களூரின் பெரிய பெரிய ரிசார்ட்டுகளிலும், ஓட்டல்களிலும் இதுபோன்ற பார்ட்டிகள் நடத்தப்படுவது பெரும் கேள்விகளை எழுப்பியுள்ளன. குடிநீரில் காரை கழுவினால் ரூ.5000 வரை அபராதம் விதிக்கப்படும் என பெங்களூர் மாநகராட்சி எச்சரிக்கை விடுத்திருக்கிறது. ஆனால், மறுபுறம் இதுபோன்ற தண்ணீரை வீணடிக்கும் பார்ட்டிகளுக்கு அனுமதி வழங்கப்பட்டிருப்பது குறித்து பெங்களூர் மக்கள் விமர்சனங்களை அடுக்க தொடங்கியுள்ளனர்.
-
3 நாளில் மன்னிப்பு கேட்க வேண்டும்.. தவெக எம்எல்ஏ பல்லவிக்கு திமுக அவதூறு நோட்டீஸ்.. என்ன மேட்டர்? -
டாஸ்மாக்கில் ரூ.3,600 கோடி ஊழல்.. லிஸ்ட் எடுத்த தவெக.. அமைச்சர் விக்னேஷ் திடுக் தகவல் -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தலை எதிர்கொள்ள திமுகவின் இரட்டை வியூகம்.. இள ரத்தத்திற்கு முக்கியத்துவம்! -
96,000 வாக்குகள் வித்தியாசத்தில்.. தவெக வேட்பாளரை ஜெயிக்க வைத்த தொகுதிக்கு இந்த நிலைமையா? -
இந்தியாவை தாக்கும் பெரிய ஆபத்து.. விஷயம் கேட்டு எலான் மஸ்க் கூட அதிர்ந்து போனார்! பேரழிவு கன்பார்ம்? -
அதிகாலையே கணக்கில் வரவு வைக்கப்பட்ட ரூ.3000.. வந்தது மே மாதம் பேமெண்ட்.. அரசின் அசத்தல் மூவ்! -
சொத்துகளை மறைக்கும் சென்னை மேயர் பிரியா.. துணை மேயர் உள்பட 75% கவுன்சிலர்கள் 4 ஆண்டுகளாக ‘டிமிக்கி' -
அதிமுக + திமுகவிற்கு ஷாக்.. 4 மாஜி அமைச்சர்கள் - 8 எம்எல்ஏக்கள் உள்பட 60 பேர் தவெகவில் ஐக்கியம் -
அடித்து ஆடும் விஜய்.. வருகிறது ராமநாதபுரம் புதிய விமான நிலையம்.. பொருளாதார புரட்சிக்கு அடித்தளம்! -
ரஷ்யா வச்ச ஆப்பு.. தள்ளுபடிலாம் தர முடியாது.. பிரீமியம் கட்டணம்! கச்சா எண்ணெய்க்கு 425% கூடுதல் தொகை -
ரூ.15 லட்சம் கோடி பஸ்பம் ஆகும்? சரிகிறது இந்தியாவின் தங்க’ சாம்ராஜ்யம்.. நாட்டையே உலுக்கும் சம்பவம் -
"அண்ணாமலை வந்ததால் பாஜக ஒன்னும் பலமாகவில்லை".. ஒரு இதழை கூட அசைக்க முடியாது.. தமிழிசை ‘அட்டாக்'












Click it and Unblock the Notifications