இன்று ஒரு நாள் மட்டும் ஆஃபர்.. நீங்க கமலாவா யூ ஆர் செலக்டட்!.. நீங்கள் விமலான்னா யூ ஆர் ரிஜக்டட்!

Subscribe to Oneindia Tamil

பெங்களூர்: அமெரிக்க துணை அதிபராக பொறுப்பேற்றுள்ள கமலா ஹாரீஸை கவுரவிக்கும் வகையில் கமலா என்ற பெயருடன் வருபவர்களுக்கு வொண்டர்லா பொழுதுபோக்கு பூங்காவில் இலவசமாக அனுமதிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

அமெரிக்காவின் துணை அதிபராக நியமிக்கப்பட்டவர் கமலா ஹாரீஸ். துணை அதிபராக பொறுப்பேற்ற முதல் பெண், முதல் கருப்பினர், முதல் தென்னாசிய நபர் என்ற பல பெருமைகளை இதன் மூலம் பெற்றவர் கமலா ஹாரீஸ்.

கமலா பொறுப்பேற்ற தருணத்தை அவரது சொந்த ஊரான மன்னார்குடி மக்கள் உள்பட தமிழர்கள், இந்தியர்கள் என கொண்டாடி மகிழ்ந்தனர்.

பெருமை

பெருமை

இந்த நிலையில் கமலாவுக்கு பெருமை சேர்க்கும் வகையிலும் அவரை கவுரவிக்கும் வகையிலும் வொண்டர்லா எனும் பொழுதுப்போக்கு பூங்கா அதிரடி ஆஃபரை அறிவித்துள்ளது. இந்த பூங்கா கொச்சி, பெங்களூர், ஹைதராபாத் ஆகிய நகரங்களில் உள்ளன.

கமலாக்கள்

கமலாக்கள்

இன்றைய தினம் கமலா என்ற பெயருடன் பொழுதுபோக்கு பூங்காவுக்கு வருகை தருவோருக்கு கட்டணம் ஏதுமின்றி இலவசமாக அனுமதிக்கப்படுவார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து தனது பேஸ்புக் பதிவில் அந்த பூங்கா நிர்வாகம் கூறுகையில் இந்த ஞாயிற்றுக்கிழமை அனைத்து கமலாக்களும் வெல்வார்கள்!

பேருக்கு

பேருக்கு

கமலா என்ற பெயருடன் எங்கள் பூங்காவுக்கு வருகை தருவோருக்கு கட்டணம் இல்லாமல் அனுமதி அளிக்கப்படுகிறது. இதற்கு புகைப்படத்துடன் கூடிய அடையாள அட்டை அவசியம். அதிலும் முதலில் வரும் 100 பேருக்கு மட்டுமே இந்த ஆஃபர் வழங்கப்படும்.

ஆஃபர் கிடையாது

ஆஃபர் கிடையாது

கமலா மட்டுமல்ல, கமலா, கமல், கமலம் ஆகிய பெயர்கள் இருந்தாலும் இந்த ஆஃபர் பொருந்தும். மற்றவர்களுக்கு இந்த ஆஃபர் கிடைக்காது. இந்த ஆஃபர் எங்களது பெங்களூர், கொச்சி, ஹைதராபாத் ஆகிய நகரங்களில் உள்ள கிளைகளுக்கு பொருந்தும் என அறிவித்துள்ளார்கள். வாடிக்கையாளர்கள் ஈர்க்க சரியான திட்டம் என நெட்டிசன்கள் கூறுகிறார்கள்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+