பாஜகவில் இணைகிறாரா ஓபிஎஸ்? அண்ணாமலை சொன்ன அந்த பதில்.. அப்படித்தான் நடக்கப் போகுதோ?
பெங்களூர்: முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் பாஜகவில் இணைகிறாரா? என்ற கேள்விக்கு தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்த பதில்தான் இப்போது அரசியல் வட்டாரங்களில் பரபரப்பை கிளப்பிவிட்டுள்ளது.
அதிமுகவில் 2 முறை தர்மயுத்தம் நடத்திப் பார்த்தும் தோல்வியைத் தழுவிவிட்டார் ஓ.பன்னீர்செல்வம். அதிமுக இப்போது எடப்பாடி பழனிசாமி வசமாகிவிட்டது. அதிமுக பொதுச்செயலாளர் பதவியை கைப்பற்றிய எடப்பாடி பழனிசாமி கட்சியை தம் கட்டுப்பாட்டில் வைத்துள்ளார்.

ஆனாலும் இன்னமும் ஏதோ சில நம்பிக்கைகளில் அதிமுக நானே; அதிமுக ஒருங்கிணைப்பாளர் பதவி காலாவதியாகவில்லை என கூறி வருகிறார் ஓபிஎஸ். அண்மையில் ஓபிஎஸ் அணி நடத்திய திருச்சி மாநாடும் கூட பெரிய பரபரப்பை கிளப்பாமலே போனது.
இந்நிலையில் அதிமுக பொதுச்செயலாளர் பழனிசாமி தலைமையிலான அக்கட்சி மூத்த தலைவர்கள் குழு, டெல்லி சென்று மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை சந்தித்தது. இந்த சந்திப்பின் போது தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை உள்ளிட்டோர் உடனிருந்தனர். இச்சந்திப்பின் போது லோக்சபா தேர்தலுக்கான அதிமுக- பாஜக கூட்டணி உறுதிப்படுத்தப்பட்டதாக அறிவிக்கப்பட்டது.
ஆனால் தமிழ்நாடு பாஜகவினரோ 25 சீட் கொடுத்தால்தான் அதிமுகவுடன் கூட்டணி என திடீரென பேச தொடங்கி உள்ளனர். இதற்கு அதிமுக தரப்பில் இருந்தும் பதிலடி தரப்பட்டு வருகிறது.
இந்நிலையில் கர்நாடகா தேர்தல் களத்தில் பிசியாக இருக்கும் தமிழ்நாடு பாஜக தலைவரும் கர்நாடகா மாநிலத்துக்கான பாஜக மேலிட இணை பொறுப்பாளருமன அண்ணாமலையிடம், அதிமுக குறித்து கேள்வி கேட்கப்பட்டது. அப்போது, எடப்பாடி பழனிசாமிக்கும் தமக்கும் எந்த பிரச்சனையுமே இல்லை என திட்டவட்டமாக அண்ணாமலை கூறினார்.
அதேநேரத்தில் பாஜகவில் ஓபிஎஸ் இணைவாரா? என்கிற கேள்வியும் கேட்கப்பட்டது. இதற்கு, பொறுத்திருந்து பாருங்கள் என ஒரு வரியில் மட்டும் பட்டும் படாமல் அண்ணாமலை பதில் கூறியிருக்கிறார். அப்படியானால் அண்ணாமலை சொல்வதைப் போலத்தான் எதிர்காலத்தில் நடக்குமா? என்கிற கேள்விதான் அரசியல் வட்டாரங்களில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.
-
எல்லாத்தையும் நான் பாத்துக்குறேன்..நீங்க ஒத்துழைப்பு மட்டும் கொடுங்க! ர.ர.க்களுக்கு எடப்பாடி மெசேஜ்! -
“EPS மாலையிட்டால்தான் என் ஆத்மா சாந்தியடையும்”.. அதிமுக தொண்டனின் உடலுக்கு அஞ்சலி செலுத்திய எடப்பாடி -
இபிஎஸ் வர்றதுக்குள்ள இப்படியா.. எஸ்.பி.வேலுமணி முகத்துக்கு நேராக துரோகின்னு கத்திய அதிமுக நபர் இவரா? -
“மாவட்ட செயலாளர் தொலைந்து போக வேண்டும்”.. அதிமுகவை விட்டு வெளியேறும் முக்கிய நிர்வாகி விட்ட சாபம்! -
ஒரு உயிர் போயிருச்சு..விஜய் வைத்திருக்கும் கைக்கூலி! அதிகாரம் எப்பவுமே இருக்காது! உதயகுமார் வார்னிங் -
எடப்பாடி பழனிசாமிக்கு நிம்மதி.. IT விசாரணை கோரிய வழக்கை தள்ளுபடி செய்தது சென்னை உயர் நீதிமன்றம் -
விஜய்க்கு அரசு பாதுகாப்பு மேல நம்பிக்கை இல்லையா? தனி பாதுகாவலரோடு வருவது ஏன்? லாக் செய்த அதிமுக -
இதுவும் பெரிய திமிங்கலம் தான்.. அதிமுகவுக்கு அடுத்த ஆப்பு வைத்த விஜய்! சி.விஜயபாஸ்கரின் திடீர் மூவ்! -
“எனது கடைசி ஆசை..” வீடியோவில் பேசிவிட்டு உயிரை மாய்த்துக்கொண்ட அதிமுக தொண்டர்! கட்சியினர் அதிர்ச்சி! -
இன்ஸ்டாவில் பொய் செல்லி.. ஆட்சிக்கு வந்துட்டாரு விஜய்! யாரும் கலங்க வேண்டாம்.. ஆறுதலாக பேசிய கேடிஆர் -
அதிமுக பெயரையே தவிர்க்கும் விஜய்?.. தவெக வியூகத்தால் அதிருப்தியில் தொண்டர்கள்! -
அதிமுகவிற்கு ஆதரவாக வந்த திமுக.. முதல்வர் விஜய்க்கு எதிராக வியூகம்.. கவனிச்சீங்களா












Click it and Unblock the Notifications