"25 ஆண்டுகளில் 2 முறை மட்டும்.." புதிர் போடும் கர்நாடக மக்கள்.. இந்த முறை எக்ஸிட் போல் சொல்வது என்ன
பெங்களூரு: கர்நாடக மாநிலத்தில் கடந்த 25 ஆண்டுகளில் நடந்த தேர்தலில் இரண்டு முறை மட்டுமே தெளிவாக முடிவு கிடைத்துள்ளது. இதற்கிடையே இந்தத் தேர்தலில் தொங்கு சட்டசபை அமையும் என்றே பெரும்பாலான கருத்துக்கணிப்புகள் கூறியுள்ளது.
அண்டை மாநிலமான கர்நாடகாவில் இன்று சட்டசபைத் தேர்தல் நடைபெற்றது. மொத்தம் இருக்கும் 224 தொகுதிகளில் இன்று ஒரே கட்டமாகத் தேர்தல் நடைபெற்றது. காலை 7 மணிக்குத் தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 6 மணிக்கு நிறைவடைந்தது.

பெரும்பான்மைக்கு 113 இடங்கள் தேவை என்ற நிலையில், அங்கே பாஜக மற்றும் காங்கிரஸ் கட்சிகளுக்கு இடையே கடும் போட்டி நிலவி வருகிறது. மேலும், மஜத கட்சியும் சில இடங்களில் கடும் போட்டி தருகிறது.
இதில் அங்கே பல தொகுதிகளில் மும்முனை போட்டி நிலவுகிறது. தென் இந்தியாவில் பாஜக ஆட்சியில் இருக்கும் ஒரே மாநிலம் கர்நாடகா என்பதால் அங்கே ஆட்சியைத் தக்க வைக்க பாஜக கடுமையாக முயல்கிறது. அதேநேரம் பாஜக அரசு மக்கள் மீது அதிருப்தி இருப்பதால் எளிதாக வெல்வோம் என்று காங்கிரஸ் நம்பிக்கையில் இருக்கிறது.
இப்போது வாக்குப்பதிவு நிறைவடைந்துள்ள நிலையில் தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்புகள் வெளியாகத் தொடங்கியுள்ளது. இதில் அனைத்து கருத்துக்கணிப்புகளிலும் கடும் போட்டி இருக்கும் என்றே சொல்லப்படுகிறது. தொடக்கத்தில் காங்கிரஸ் பெரியளவில் வெல்லும் என்றே சொல்லப்பட்டது.
இருப்பினும் கடைசிக் கட்டத்தில் பாஜக தனது பிரசாரத்தைத் தீவிரப்படுத்தியதால் வாக்குகள் கடைசி நேரத்தில் மாறியதாகத் தெரிகிறது. இதன் காரணமாகவே பல்வேறு கருத்துக்கணிப்புகளிலும் கடும் போட்டி இருக்கும் என்றே கூறப்படுகிறது.
அதிலும் சில கருத்துக்கணிப்புகளில் தொங்கு சட்டசபை அமையும் என்றும் கூறப்பட்டுள்ளது. இதற்கான வாய்ப்புகள் அங்கு அதிகமாகவே இருக்கிறது. ஏனென்றால் நமது அண்டை மாநிலமான கர்நாடகாவில் தொங்கு சட்டசபை கடந்த காலங்களிலும் அடிக்கடி ஏற்பட்டே இருக்கிறது.
கடந்த 25 ஆண்டுகளில் 1999, 2004, 2008, 2013 மற்றும் 2018 என ஐந்து முறை தேர்தல்கள் நடந்துள்ளன. இதில் 1999 மற்றும் 2013 என இரு தேர்தல்கள் மட்டுமே தெளிவான முடிவு கிடைத்துள்ளது. அதைத் தவிர அனைத்து தேர்தல்களிலும் தொங்கு சட்டசபையே நிலவி உள்ளது.
அதனால் காங்கிரஸ் மற்றும் பாஜக என இரு கட்சியுமே மற்ற கட்சியின் ஆதரவுடனேயே ஆட்சியைப் பிடித்துள்ளது.
1999 தேர்தலில், காங்கிரஸ் 132 இடங்களுடன் (பெரும்பான்மை 113) பெரும்பான்மையைப் பெற்றது. இந்தத் தேர்தலில் காங்கிரஸ் 40.8% வாக்குகளைப் பெற்றது. ஜனதாதளத்தில் ஏற்பட்ட பிளவுக்குப் பின்னரே காங்கிரஸுக்கு இந்த வெற்றி கிடைத்தது.

1994 தேர்தலில் ஜனதா தளம் ஆட்சியைப் பிடித்து இருந்தது. ஆனால், அதன் பிறகு ஜே.டி.(யு) ஜே.டி.(எஸ்) எனக் கட்சி பிளவடைந்ததால் 1999 தேர்தலில் காங்கிரஸ் பெரிய வெற்றியைப் பெற்றது. இதில் ஜே.டி.(யு), ஜே.டி.(எஸ்) கட்சிகள் முறை 18 மற்றும் 10 இடங்களை மட்டுமே வென்றது.
2004இல் கடந்த சட்டசபைத் தேர்தலில் எந்தக் கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்கவில்லை. பாஜக அதிகபட்சமாக 79 இடங்களில் வென்றது. காங்கிரஸ் 65 இடங்களிலும், ஜேடிஎஸ் 58 இடங்களிலும் வென்றது. பாஜக அதிக இடங்களைப் பெற்ற போதிலும் காங்கிரஸ் ஜேடிஎஸ் இணைந்து ஆட்சியைப் பிடித்தது. இருப்பினும் 2006 ஜேடிஎஸ் தனது ஆதரவை விலக்கிக் கொண்டதால் ஆட்சி கழிந்தது.
அதைத் தொடர்ந்து பாஜக ஜேடிஎஸ் இணைந்து கூட்டணி ஆட்சியை அமைத்தது. ஜேடிஎஸ் கட்சியின் எடியூரப்பா முதல்வராக பதவியேற்ற நிலையில், எடியூரப்பா துணை முதல்வராகப் பொறுப்பேற்றார்.
அதேபோல 2008இல் நடந்த தேர்தலிலும் யாருக்கும் பெரும்பான்மை இல்லை. பாஜக பெரும்பான்மைக்குச் சற்று குறைவாக 100 (பெரும்பான்மைக்கு 113 இடங்கள் தேவை) இடங்களைப் பெற்றது. காங்கிரஸ் 80 இடங்களையும் ஜேடிஎஸ் 28 இடங்களையும் வென்றது. பெரும்பான்மைக்கு 3 இடங்கள் குறைவாகப் பெற்ற நிலையில், சுயேச்சைகள் ஆதரவுடன் பாஜக ஆட்சியை அமைத்தது.
அடுத்து 2013 சட்டசபைத் தேர்தலில் காங்கிரஸ் தனிப்பெரும்பான்மையைப் பெற்றது. அதில் காங்கிரஸ் 122 இடங்களில் வென்றது. ஜேடிஎஸ் 40 இடங்களில் வென்ற நிலையில், பாஜகவால் வெறும் 40 இடங்களை மட்டுமே கைப்பற்ற முடிந்தது.
அதைத் தொடர்ந்து 2018இல் நடந்த தேர்தலில் பாஜக தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்த போதிலும் தனிப்பெரும்பான்மை கிடைக்கவில்லை. பாஜக 104 இடங்களில் வென்ற நிலையில், காங்கிரஸ் கட்சி 80, ஜேடிஎஸ் 37 இங்களி்ல வென்றிருந்தது.
அதாவது கடந்த 25 ஆண்டுகளில் நடந்த தேர்தலில் இரண்டு முறை மட்டுமே தெளிவாக முடிவு கிடைத்துள்ளது. இந்தத் தேர்தலில் தொங்கு சட்டசபை அமையும் என்றே பெரும்பாலான கருத்துக்கணிப்புகள் கூறும் நிலையில், உண்மை நிலவரம் இன்னும் கொஞ்ச நாட்களில் தெரிந்துவிடும்.
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து!












Click it and Unblock the Notifications