நீ இந்துவா? ‛ஆம்' என சொன்ன அடுத்த நொடியே இளைஞருக்கு விழுந்த அடி.. ரூ.50,000 கொள்ளை - பெரும் ஷாக்
பெங்களூர்: இரவில் ரோட்டில் நடந்து சென்ற இளைஞரை வழிமறித்த 4 பேர் கும்பல், ‛‛நீ இந்துவா? முஸ்லிமா?''என கேள்வி கேட்டுள்ளது. அதற்கு அந்த இளைஞர் ‛இந்து' என்று சொன்னதுமே அந்த கும்பல் அவரை சரமாரியாக தாக்கி அவரிடம் இருந்த ரூ.50 ஆயிரத்தை கொள்ளையடித்து சென்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இதுபற்றிய சிசிடிவி வீடியோ வெளியாகி அனைவரையும் உறைய வைத்துள்ளது.
சிவமொக்காவை சேர்ந்தவர் ஹரிஷ். இவர் கடந்த 17 ம் தேதி நள்ளிரவில் தனது வீட்டு அருகே பார்ட்டி கசானாவால் 2வது கிராஸ் டவுனில் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது மணி இரவு 11.15 இருக்கும்.

அப்போது அவரை 4 பேர் கும்பல் வழிமறித்துள்ளது. அவர்கள் ‛நீ இந்துவா? இல்லை முஸ்லிமா?'' என்று கேட்டுள்ளனர். அதற்கு ஹரிஷ், ‛நான் இந்து'' என்று கூறியுள்ளார். இதையடுத்து அந்த நபர்கள் ஹரிசை சரமாரியாக தாக்கி உள்ளனர்.
கண்இமைக்கும் நொடியில் அந்த கும்பல் தாக்கியதால் ஹரிஷ் அதிர்ச்சியடைந்தார். 4 பேர் மாற்றி மாற்றி தாக்கியதால் அவரால் எதுவும் செய்ய முடியவில்லை. இருப்பினும் போராடிய ஹரிஷ் அவர்களிடம் இருந்து தப்பித்து ஓட முயன்றார். அந்த நபர்கள் விடவில்லை. அவரை விரட்டி விரட்டி தாக்கி உள்ளனர். மேலும் அவர் வைத்திருந்த ரூ.50 ஆயிரம் பணத்தை கொள்ளையடித்துவிட்டு அங்கிருந்து சென்றுவிட்டனர்.
இந்த தாக்குதலில் ஹரிஷ் காயமடைந்தார். இதையடுத்து குடும்பத்தினர் அவரை மீட்டு அருகே உள்ள மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு அவருக்கு டாக்டர்கள் சிகிச்சை அளித்து வருகின்றனர். இதுபற்றி ஹரிஷ் கூறுகையில், ‛‛என்னை தாக்கிய நபர்கள் என்னிடம் நேரடியாக மதத்தை கூறினார். நான் இந்து என்று கூறியதும் அவர்கள் தாக்கிவிட்டு ரூ.50 ஆயிரத்தை எடுத்து கொண்டு ஓடிவிட்டனர். கத்தியை காட்டி எனது தங்க சங்கிலியை கேட்டனர். ஆனால் அந்த வழியில் பைக்கில் ஒருவர் வந்ததால் பயந்து ஓடிவிட்டனர்.
புகார் அளிப்பதற்கு முன்பாக உயிருக்கு பயந்து வீட்டிலேயே சிகிச்சை பெற்றேன். அதன்பிறகு தான் மருத்துவமனைக்கு சென்றேன். போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இதற்கிடையே தான் சாலையில் சென்ற ஹரிசை வழிமறித்து 4 பேர் கும்பல் தாக்கியது அந்த பகுதியில் உள்ள சிசிடிவி கேமராவில் பதிவாகி உள்ளது. அந்த கேமரா காட்சிகள் தற்போது வெளியாகி அனைவரையும் அதிர வைத்துள்ளது.
இதுகுறித்த புகாரின் பேரில் தாபஸ் பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணையை தொடங்கி உள்ளனர். முதற்கட்டமாக கண்காணிப்பு கேமராவில் பதிவான நபர்களை அடையாளம் கண்டு கைது செய்யும் நடவடிக்கையில் போலீசார் ஈடுபட்டுள்ளனர்.
இந்த சம்பவம் குறித்து பாஜக எம்எல்ஏ சன்னபசப்பா தாபஸ்பேட்டை போலீஸ் நிலையம் சென்று போலீசாரை கடிந்து கொண்டார். பொதுமக்களின் பாதுகாப்பை உறுதி செய்வதை விட என்ன வேலை என்று கேள்வி கேட்டார். இதுபற்றி எம்எல்ஏ சன்னபசப்பா கூறுகையில், ‛‛போலீசார் சிவில் பிரச்சனைகளில் தலையீடுவதை விட பொதுமக்களின் பாதுகாப்பை உறுதி செயய வேண்டும். சிவமொக்காவில் உள்ள மக்கள் பயத்துடன் வாழ்கின்றனர். அவர்கள் புகார் அளித்தும் போலீசார் நடவடிக்கை எடுப்பது இல்லை. இந்த நடவடிக்கையை மாற்றம் செய்ய வேண்டும்'' என்று கூறினார்.
-
கரப்பான் பூச்சி கட்சியுடன் கைகோர்க்கும் பிரகாஷ் ராஜ்! கழற்றிவிடப்பட்ட காங்கிரஸ்! பெங்களூரில் ஷாக் -
அமைச்சர் பதவிக்கு குட்பை? பெங்களூர் வளர்ச்சி துறையின் பல்லை பிடுங்கிய டிகே சிவக்குமார்.. கிருஷ்ணபைரே கவுடா அதிருப்தி -
மேகதாதுவின் மோதலும்.. பெங்களூருவின் வலியும்.. தமிழகத்தை பாதிக்காமல் மாற்று வழி உள்ளதா? -
அண்ணி மீதான மோகம்.. இளைஞரை எரித்து கொன்ற வழக்கில் பெரிய ட்விஸ்ட்! ஷாக் காரணம் -
நடத்தையில் ஏற்பட்ட சந்தேகம்.. 22 வயது காதலிக்கு, காதலன் கொடுத்த கொடூர தண்டனை.. உயிரே போச்சே -
"மேயர் பதவி கொடுத்தா தான் வருவேன்!" அழகிரி மகள் நிபந்தனை.. சிடிஆர் நிர்மல்குமார் வைத்த செக்! -
தாய்லாந்திலிருந்து காஸ்ட்லி கஞ்சா கடத்திய கேரள அழகி கைது! ரூ 11 கோடி மதிப்பில் போதை பொருள் பறிமுதல் -
யாரோட பிடிலையும் திருவண்ணாமலை கிடையாது.. செய்யாறில் ஆதவ் அர்ஜுனா பேசியது என்ன? -
தமிழக சட்டமன்ற வரலாற்றில் தவறான முன்னுதாரணம்.. சபாநாயகர் முடிவுக்கு விகே சசிகலா எதிர்ப்பு -
டாஸ்மாக்கில் பாட்டிலுக்கு 10 ரூபாய் பிரச்சனைக்கு தீர்வு.. இயந்திரங்களை நிறுவ அரசு திட்டம்.. சாத்தியமா? -
இந்துக்களின் கயிறு உறுத்துகிறா? முதல்வர் விஜய் அதிகாரத்தை இழக்க நேரிடும்.. வானதி சீனிவாசன் வார்னிங் -
சட்டமன்றத்துக்கே 11 மணிக்கு தான் வருவார்.. உதயநிதி எல்லாம் பேசலாமா.. செங்கோட்டையன் காட்டம்












Click it and Unblock the Notifications