ராமர் கோவில் திறப்பு: கர்நாடகாவில் 'குஜராத் மத வன்முறை'யை அரங்கேற்ற பயங்கர சதி.. காங். தலைவர் பகீர்!
பெங்களூர்: அயோத்தியில் ராமர் கோவில் திறப்பு விழாவின் போது கர்நாடகாவில் 'கோத்ரா ரயில் எரிப்பு சம்பவம்' போல வன்முறைக்கு பயங்கர சதித் திட்டம் தீட்டப்படுவதாக காங்கிரஸ் மூத்த தலைவரும் எம்.எல்.சி.யுமான பிகே ஹரிபிரசாத் பரபரப்பு தகவலை வெளியிட்டுள்ளார்.
காங்கிரஸ் மூத்த தலைவர் ஹரிபிரசாத் பெங்களூரில் நேற்று செய்தியாளர்களிடம் கூறியதாவது: 2002-ல் குஜராத்தில் கரசேவகர்கள் அயோத்தி சென்று திரும்பும் போதுதான் கோத்ரா ரயில் எரிப்பு சம்பவமும் குஜராத் மதவன்முறைகளும் வெடித்தன.

கர்நாடகாவில் மதவன்முறைக்கு சதி: கர்நாடகாவிலும் குஜராத் கோத்ரா ரயில் எரிப்பு உள்ளிட்ட சதித் திட்டத்தை நிறைவேற்றத்தை சிலர் திட்டமிட்டு வருகின்றனர். கர்நாடகாவில், குஜராத் வன்முறை சம்பவங்களைப் போல எந்த ஒரு அசம்பாவிதமும் நடக்க மாநில அரசு அனுமதித்துவிடக் கூடாது. ராமர் கோவில் திறப்பு விழாவுக்கு செல்பவர்களுக்கான அனைத்து ஏற்பாடுகளையும் எந்தவித சர்ச்சையும் இல்லாமல் மாநில அரசு செய்து தர வேண்டும்.
பாஜக சதி ஆலோசனை: குஜராத்தில் கோரா ரயில் எரிப்பு சம்பவம், அதைத் தொடர்ந்த வன்முறைகளை நிகழ்த்துவதற்கான சதித் திட்டத்தில் சில பாஜக தலைவர்கள் ஈடுபட்டுள்ளனர். இது தொடர்பான தகவல்கள் கிடைத்துள்ளன. சில அமைப்புகளின் தலைவர்கள் பிற மாநிலங்களுக்கு சென்று பாஜக தலைவர்களை சந்தித்து இத்தகைய வன்முறைகள் தொடர்பாக ஆலோசனைகளை நடத்தி இருக்கின்றனர். யார் எங்கே ஆலோசனை நடத்தினார்கள் என்பதையெல்லாம் பகிரங்கமாக சொல்ல முடியாது. அவர்கள் இந்த விவகாரத்தில் தீவிரமாக செயல்பட்டு வருகின்றனர்.
ராமர் கோவில் திறப்பு: அயோத்தி ராமர் கோவிலை மதத் தலைவர்கள், குருமார்கள் திறந்து வைத்தால் நாம் அனைவருமே அயோத்தி ராமர் கோவிலுக்கு செல்லலாம். இந்து மதத்தின் தலைவர்களாக 4 சங்கராச்சாரியார்கள் குறிப்பிடப்படுகின்றனர். இந்த 4 சங்கராச்சாரியார்கள், அயோத்தி ராமர் கோவிலை திறந்து வைத்தால் பரவாயில்லை. ஆனால் அரசியல் தலைவர்களான மோடியும் அமித்ஷாவும் திறந்து வைக்க இருக்கின்றனர். இதனால் இது அப்பட்டமான அரசியல் நிகழ்வுதான். அமித்ஷாவும் மோடியும் தர்ம குருக்கள் அல்ல. அதனால்தான் ராமர் கோவில் திறப்பு விழா நிகழ்வை நாங்கள் அரசியல் நிகழ்வு என்கிறோம்.
உப்பள்ளி கைது: கர்நாடகாவின் உப்பள்ளியில் கைது செய்யப்பட்ட முன்னாள் கரசேவகர் மீது ஏராளமான குற்ற வழக்குகள் நிலுவையில் உள்ளன. கரசேவகர் என்பதாலேயே குற்ற வழக்குகளில் அவரை கைது செய்யக் கூடாது என எப்படி சொல்ல முடியும்? இன்னமும் சொன்னால் 31 ஆண்டுகளாக அந்த கரசேவகர் மீது நடவடிக்கை எடுக்காமல் இருந்ததுதான் தவறு. இவ்வாறு காங்கிரஸ் மூத்த தலைவர் ஹரிபிரசாத் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
அதென்ன கோத்ரா சம்பவம்: 2002-ம் ஆண்டு அயோத்தியில் இருந்து கரசேவகர்கள் ரயிலில் திரும்பிக் கொண்டிருந்தனர். அப்போது குஜராத்தின் கோத்ராவில் கரசேவகர்களுடன் ரயில் தீயில் எரிந்து கருகியது. கரசேவகர்களை முஸ்லிம்கள் தீ வைத்து எரித்து கொன்றதாக தகவல் பரவ, குஜராத் முழுவதும் மிக மோசமான மதவன்முறைகள் வெடித்தன. இந்த வன்முறைகளில் ஆயிரக்கணக்கான முஸ்லிம்கள் கொடூரமாக படுகொலை செய்யப்பட்டனர். குஜராத் மதவன்முறைகள் உலகையே அதிர்ச்சியில் உறைய வைத்தது. அப்போது குஜராத் முதல்வராக இருந்தவர் இன்றைய பிரதமர் நரேந்திர மோடி.
-
மாணிக்கம் தாகூருக்கு தொடரும் சிக்கல்.. விஜய பிரபாகரன் தொடர்ந்த வழக்கை டிஸ்மிஸ் செய்தது ஐகோர்ட்! -
டெல்லி கொடுத்த ஸ்வீட் பாக்ஸ்.. அப்படியே அமுக்கிய தலைகள்! அடுக்கிய அண்ணாமலை! காங்கிரஸில் கலகம்! -
சித்தராமையாவிற்கு புது பொறுப்பு.. காங்கிரஸில் முக்கிய முடிவுகளை எடுக்கும் செயற்குழுவில் இடம் -
முடிவுக்கு வந்த சித்தராமையா யுகம்! கர்நாடகாவின் புதிய முதலமைச்சராக பதவியேற்றார் டிகே சிவக்குமார் -
மதசார்பற்ற கொள்கை.. மாநில உரிமைகளில் சமரசமே கிடையாது.. மீண்டும் அழுத்தமாக சொன்ன முதல்வர் விஜய் -
அமைச்சரவையில் காங்கிரஸ் இடம்பெற.. மாணிக்கம் தாகூர் தான் முக்கிய காரணமாம்.. சொல்கிறார் விஸ்வநாதன்! -
CBSE: மொபைல்களில் ஸ்கேன் செய்யப்பட்ட விடைத்தாள்கள்! குற்றச்சாட்டுகளை அடுக்கும் ராகுல் காந்தி! -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட்












Click it and Unblock the Notifications