'என் பொண்டாட்டி ஊருக்கு போயிட்டா'.. பெங்களூர் ஆட்டோ டிரைவர் பயணிகளுக்கு கொடுத்த இன்ப அதிர்ச்சி
பெங்களூர்: தன்னுடைய மனைவி தாய் வீட்டுக்கு சென்றதால் உற்சாகமாக ஆட்டோ டிரைவர் ஒருவர் பெங்களூரில் வித்தியாசமான முறையில் அதனை கொண்டாடியுள்ளார். தனது ஆட்டோவில் ஏறிய பயணிகளுக்கு இலவசமாக பிஸ்கட் எல்லாம் வழங்கி குதூகலமாக இருந்துள்ளார். பெங்களூர் ஆட்டோ டிரைவர் தனது காதல் மனைவி, சொந்த ஊருக்கு சென்றதை ஆட்டோவில் எழுதி கொண்டாடியது சமூக ஊடகங்களில் பேசுபெருளாக உள்ளது.
இந்தியாவின் ஐடி தலைநகர் என்று போற்றப்படும் பெங்களூரை, இந்தியாவின் சிலிக்கான் வேலி என்று சொல்லலாம்.. எங்கு திரும்பினாலும் ஐடி நிறுவனங்கள் உள்ளன. பெங்களூரில் இல்லாத தொழிலே இல்லை என்று சொல்லும் அளவிற்கு நிறுவனங்கள், தொழிற்சாலைகள் உள்ளன. ஐடி, கனரக வாகனங்கள் உதிரிபாகங்கள் தொழிற்சாலை, பஸ் பாடி கட்டும் தொழிற்சாலை, பேருந்து தயாரிப்பு தொழில், வாகனங்கள் தயாரிப்பு தொழில், ஜவுளி, கார்மெண்ட்ஸ் மற்றும் எலக்ட்ரானிக்ஸ் என பல தொழில்கள் உள்ளன. இதன் காரணமாக பெங்களூர் மாநகரில் கோடிக்கணக்கான மக்கள் வசிக்கிறார்கள். சாலைகள் நினைத்து பார்க்க முடியாத அளவிற்கு போக்குவரத்து நெரிசல் மிகுந்தவையாகும். மக்கள் கலாச்சார ரீதியாகவும், மொழி, இனம் என அடிப்படையிலும் வித்தியாசமான நகரமாக உள்ளது.

இதன் காரணமாக எப்போதுமே பெங்களூர் நகரில் அடிக்கடி வித்தியாசமான விஷயங்கள் நடக்கின்றன. பெங்களூரைச் சேர்ந்த ஆட்டோ டிரைவர் ஒருவர். தனது மனைவி தாய் வீட்டுக்கு சென்றதை எண்ணி மகிழ்ச்சி அடைந்து, தனது ஆட்டோவில் ஏறும் பயணிகளுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்துள்ளார்.
பெங்களூருவை சேர்ந்த குறிப்பிட்ட ஆட்டோ டிரைவர் ஒருவர், தனது மனைவி, அவரது தாய் வீட்டுக்கு சென்றதை குறிப்பிட்டு, தனது ஆட்டோவில் பயணிக்கும் பயணிகளுக்கு இலவசமாக பிஸ்கட் வினியோகித்திருக்கிறார். அத்துடன் மனைவி தாய் வீட்டுக்கு சென்றது தொடர்பாக கன்னடம் மற்றும் ஆங்கிலத்தில் 'எனது மனைவி அவரது தாய் வீட்டுக்கு சென்றதால் நான் மிகவும் மகிழ்ச்சியில் இருக்கிறேன்’ என எழுதி ஆட்டோவில் தனது இருக்கையின் பின்புறம் ஒட்டி வைத்திருக்கிறார்
அருகில் ஒரு ஸ்டேன்ட் வைத்து கிரீம் பிஸ்கட் பாக்கெட்டையும் வைத்திருக்கிறார். இதை ஒரு பயணி தனது செல்போனில் படம் பிடித்துள்ளார். பின்னர் அதனை சமூக வலைத்தளத்தில் பதிவிட்டிருக்கிறார். மணிரத்னம் இயக்கத்தில் வெளியான அக்னி நட்சத்திரம் படத்தில் நடிகர் ஜனகராஜ் தனது மனைவி ஊருக்கு செல்வதை கொண்டாடும் விதமாக " என் பொண்டாட்டி ஊருக்கு போயிட்டா... என் பொண்டாட்டி ஊருக்கு போயிட்டா..." என பஸ் ஸ்டாண்டிலேயே குதூகலிப்பார். அந்த பட பாணியில் பெங்களூர் ஆட்டோ டிரைவரின் இந்த செயல் சமூக வலைதளங்களில் பேசுபெருளாகி உள்ளது.
மனைவி ஊருக்கு போனால் நண்பர்களுடன் ஜாலியாக சுற்றலாம்.. நன்றாக குடித்துவிட்டு வீட்டில் ஆட்டம் போடலாம்.. இரவில் எவ்வளவு நேரம் வெளியில் சுற்றினாலும் கேட்க ஆள் இருக்க மாட்டார்கள்.. என்பதால் மனைவி ஊருக்கு போவதை இன்றைய இளைஞர்கள் விரும்புகிறார்கள். இப்படி மனைவி ஊருக்கு போவதை இளைஞர்கள் கொண்டாடுவார்கள் என்றாலும், ஒருவர் இந்த அளவிற்கு கொண்டாடியிருப்பது சமூக வலைதளங்களில் கிண்டலுக்கு உள்ளாகி உள்ளது. இதுதான்யா உனக்கு சுதந்திர தினம் என்றெல்லாம் பதிவிட்டு வருகிறார்கள்.
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது












Click it and Unblock the Notifications