’என்னடா இது பித்தலாட்டமா இருக்கு’ 1 கிமீ-க்கு ரூ.425 ஆ.. ஆட்டோ கட்டணத்தை பார்த்து பெங்களூர் நபர் ஷாக்
பெங்களூர்: பெங்களூரில் (Bangalore Auto Rate) ஒரு கிலோ மீட்டர் தொலைவிற்கு ஆட்டோவில் செல்வதற்கு ரூ.425 உபேர் செயலியில் காட்டியதாகாவும், இதனால் எதுக்கு வம்பு என்று தனது நண்பர் நடந்தே சென்றுவிட்டதாகவும் நெட்டிசன் ஒருவர் பதிவிட்டுள்ளார். "வடிவேலு சொல்வது போல, என்னடா இது பித்தலாட்டமாக உள்ளது என்றுதான் சொல்லத் தோன்றுகிறது" என நெட்டிசன்கள் இதற்கு கமெண்ட் பதிவிட்டு வருகிறார்கள். சமூக வலைத்தளங்களில் இந்த பதிவு அதிகம் விவாதிக்கப்பட்டு வருகிறது.
கர்நாடக மாநில தலைநகர் பெங்களூர் நாட்டின் ஐடி தலைநகரம் என்று அழைக்கப்படுகிறது. உலக அளவில் போக்குவரத்து நெரிசல் அதிகம் உள்ள நகரங்களில் ஒன்றாக அறியப்படும் பெங்களூரில், வாடகை கார், ஆட்டோ கட்டணமும் அதிக அளவில் இருப்பதாக அவ்வப்போது பெங்களூர் வாசிகள் சமூக வலைத்தளங்களில் பதிவிட்டு ஆதங்கத்தை கொட்டுவதை பார்க்க முடியும்.

ஒரு கிலோமீட்டருக்கு ரூ.425
அந்த வகையில், பெங்களூரில் ஒரு கிலோ மீட்டர் தூரத்திற்கு ரூ. 425 ஆட்டோ கட்டணம் உபேர் செயலி காட்டியதாக நெட்டிசன் ஒருவர் பதிவிட்டது சமூக வலைத்தளங்களில் விவாதத்திற்குள்ளாகியுள்ளது. ரெட்டிட் சமூக வலைத்தளத்தில் அவர் கூறியிருப்பதாவது:-
பெங்களூரில் மழை பெய்து கொண்டிருந்தது. எனது நண்பர் ஊருக்கு செல்ல வேண்டியிருந்ததால், உபேரில் ஆட்டோ புக் செய்ய நினைத்தேன். வெறும் ஒரு கிலோ மீட்டர் தொலைவிற்கு ரூ.425 கட்டணமாக காட்டுகிறது. கார் புக் செய்யலாம் என்று பார்த்தால் அதற்கு ரூ.364 ஆக காட்டியது. ஒரு கிலோ மீட்டர் தொலைவிற்கு இவ்வளவு கட்டணம் என்பது மிகவும் அதிகம்.
நெட்டிசன்கள் கமெண்ட்ஸ்
கட்டணத்தை பார்த்ததும் நானும் எனது நண்பரும் அதிர்ச்சி அடைந்தோம். இவ்வளவு கட்டணமா என பார்த்த எனது நண்பர் ஒரு குடையை எடுத்துக்கொண்டு நடக்க ஆரம்பித்துவிட்டர்" என்று பதிவிட்டுள்ளார். இந்த பதிவு சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வரும் நிலையில், நெட்டிசன்கள் பலரும் தங்கள் கருத்துக்களை பதிவிட்டு வருகிறார்கள்.
நெட்டிசன் ஒருவர் கூறுகையில், "பெங்களூரில் டாக்சி கட்டணம் என்பது மேலை நாடுகளுக்க்கு நிகரானதாக உள்ளது" என்று பதிவிட்டுள்ளார். அதாவது, ஜெர்மனியில் பென்ஸ் காரில் பயணிப்பதற்குதான் இப்படி கட்டணம் வசூலிக்கப்படும். நம்ம ஊரில் ஆட்டோவிற்கே இப்படியா என்று பதிவிட்டுள்ளார். மேலும், ஆட்டோ வாங்குவதற்கான சரியான நேரம் இதுதான் என்றும் பதிவிட்டுள்ளார்.
வடிவேலு சொல்வது போல
மற்றொரு நெட்டிசன் கூறுகையில், "வடிவேலு சொல்வது போல, என்னடா இது பித்தலாட்டமாக உள்ளது என்றுதான் சொல்லத் தோன்றுகிறது" என பதிவிட்டு இருக்கிறார். இன்னொரு நெட்டிசன் கூறுகையில், "ஆட்டோவில் ஏன் போக வேண்டும், நடந்து போக வேண்டியதானே என கேட்க வேண்டும் என நினைத்தேன். பெங்களூர் சாலையின் கட்டமைப்புகள் எனக்கு தெரியும். எனவே அங்கு குறுகிய தொலைவுக்கு ஆட்டோவில் செல்வதை விட நடந்து போவதே சிறந்தது" என்று பதிவிட்டுள்ளார்.
மற்றொரு நெட்டிசன் கூறுகையில், "பெங்களூர் நகரின் அசுர வளர்ச்சி, போதிய போக்குவரத்து வசதி இல்லாதது, குறுகலான சாலைகள் உள்ளிட்டவை காரணமாக கட்டணங்கள் வாடகை கார், ஆட்டோக்களில் அசுரத்தனமாக உள்ளது. அதிலும் பீக் நேரங்களில் சொல்லவே தேவையில்லை" என்று பதிவிட்டுள்ளார். பெங்களூரில் மெட்ரோ உள்ளிட்ட வசதிகள் கொண்டு வந்தாலும், நகர திட்டமிடல் மோசமான அளவில் இருப்பதால் இப்படி கடுமையான போக்குவரத்து நெரிசல் மற்றும் போக்குவரத்து கட்டணம் இருப்பதாக பெங்களூர் வாசிகள் கூறுவதையும் பார்க்க முடிகிறது.
-
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்!












Click it and Unblock the Notifications