Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

பெங்களூர் பியூட்டிஷியன்.. அதென்ன வாட்ஸ்அப் ஃபுரொபைல்? நொடியில் நடந்த சம்பவம்.. திகைத்த தாய், காதலன்

Subscribe to Oneindia Tamil

பெங்களூரு: இளைய தலைமுறையினர் பல்வேறு துறைகளில் சாதித்தாலும்கூட, சிலர் ரீல்ஸ் மோகத்துக்கு அடிமையாகிவிடுகிறார்கள். இதில் பெண்களும் சிக்கி கொள்வதால், குடும்பத்தில் பல சிக்கல்களையும், தொல்லைகளையும் சந்திக்க நேரிடுகிறது. சிலசமயம் வன்முறைகளும், கொலை சம்பவங்களும்கூட நடந்துவிடுவது கவலையை தந்து வருகிறது.. இந்நிலையில், கர்நாடக மாநிலத்தில் நேற்று ஒரே நாளில் 2 துயர சம்பவங்கள் நடந்துள்ளது.. இதுகுறித்த விசாரணையையும் காவல்துறை கையில் எடுத்துள்ளனர்.

பெங்களூரு பரப்பன அக்ரஹாரா எல்லைக்குட்பட்ட சூடசந்திரா பகுதியை சேர்ந்த நந்தினிக்கு 23 வயதாகிறது.. ஆந்திராவை பூர்வீகமாக கொண்ட இந்த பெண், சூடசந்திராவில் பெற்றோருடன் வசித்து வந்தார்.

bangalore beautician reels video

இவரது வீட்டின் அருகே புதிதாக கட்டிடம் ஒன்று கட்டப்பட்டு வருகிறது.. இந்த கட்டிடத்துக்கு தன்னுடைய தோழிகளுடன் சென்றிருக்கிறார்..

13 மாடி கட்டிடம்

அந்த கட்டிடத்தின் 13-வது மாடிக்கு சென்ற நந்தினி, அங்கிருந்து செல்போனில் செல்பி எடுக்க முயன்றுள்ளார்.. புதிதாக கட்டப்படும் கட்டிடம் என்பதால் அதற்கு தடுப்புச்சுவர் இல்லை. இதனால், திடீரென்று 13-வது மாடியில் இருந்து நந்தினி கீழே விழுந்து, உடைந்து, ரத்த வெள்ளத்திலேயே உயிரிழந்தார்.. பெற்ற மகளின் சடலத்தை கண்டு, பெற்றோர் கதறி அழுதது காண்போரை உலுக்கிவிட்டது.

இதேபோல, மற்றொரு சம்பவமும் கர்நாடகாவில் அதிர்ச்சியை தந்துள்ளது.. துமகூரு மாவட்டம் ஒசஹள்ளி பகுதியை சேர்ந்தவர் சவுபாக்யா. அதே பகுதியில் பெட்டிக்கடை நடத்தி வருகிறார். இவரது மகள் சைதன்யாவுக்கு 22 வயதாகிறது.. தும்கூருவில் தனியார் கல்லூரியில் படித்து வருகிறார்.. பார்ட் டைமில் பியூட்டிஷியனாகவும் பணியாற்றி வந்துள்ளார்.

போட்டோகிராபர்

இதற்காக விதவிதமான ரீல்ஸ் வீடியோக்களை தன்னுடைய இன்ஸ்டாவில் பதிவிட்டு வந்தார்.. ஆனால், இப்படி ரீல்ஸ் பதிவிடுவது சைதன்யாவின் காதலன், விஜய் என்பவருக்கு பிடிக்கவில்லை. எனவே, சைதன்யாவை கண்டித்துள்ளார்..

எனினும் சைதன்யா, தொடர்ந்து வீடியோ பதிவிட்டு வந்துள்ளதுடன் சம்பவத்தன்று போட்டோ கிராபர் ஒருவரையும் சந்தித்து, தன்னை வீடியோ எடுக்க சொல்லுமாறு கேட்டுள்ளார்.. வீடியோகிராபரும் சைதன்யாவை வீடியோ, போட்டோ எடுத்து தந்துள்ளார்.. இதனை சைதன்யா வாட்ஸ்-அப் ஸ்டேட்டஸ் மற்றும் இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார்.

சைதன்யா கோபம்

இதை பார்த்து கொந்தளித்த விஜய், சைதன்யாவிடம் தகராறில் ஈடுபட்டார். அத்துடன் சைதன்யாவிடமும் அவரது அம்மாவிடமும் இதுகுறித்து முறையிட்டுள்ளார்.. இதனால், சைதன்யாவை அவரது அம்மா திட்டி கண்டித்துள்ளார்.. விஜய், தாய் இருவருமே தன்னை கண்டித்ததால், கோபமடைந்த சைதன்யா ரூமுக்குள் சென்று கதவை பூட்டிக் கொண்டார்.. அதற்கு பிறகு விஜய்யும் அங்கிருந்து கிளம்பி சென்றுவிட்டார்.

ஆனால் சிறிது நேரம் கழித்து, விஜய்க்கு போனை போட்ட சைதன்யா, தற்கொலை செய்யப்போகிறேன் என்றும் சொல்லி உள்ளார்.

கதறி அழுத தாய்

இதனால் அதிர்ச்சி அடைந்த விஜய், உடனடியாக சைதன்யா வீட்டுக்கு வந்தார். ரூம் கதவை தட்டியும் சைதன்யா திறக்கவில்லை.. இதனால் கதவை உடைத்துக் கொண்டு உள்ளே சென்றால், ஃபேனில் சைதன்யா தூக்குப்போட்டு பிணமாக தொங்கி கிடந்தார்.. இதைப்பார்த்து சைதன்யாவின் தாயும், விஜய்யும் கதறி அழுதனர்..

இதுகுறித்து துமகூரு புறநகர் போலீசாருக்கு தகவல் தரப்பட்டதையடுத்து, அவர்கள் விரைந்து வந்து, சைதன்யாவின் உடலை மீட்டு போஸ்ட் மார்ட்டம் செய்வதற்காக கொண்டு சென்றனர். ரீல்ஸ் வீடியோ பதிவிடக்கூடாது என்று கண்டித்ததற்காவே, இளம்பெண் தற்கொலை செய்து கொண்டுள்ளது அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+