பாஜக தேஜஸ்வி சூர்யா திருமணம்.. தமிழக பாடகி சிவஸ்ரீ ஸ்கந்த பிரசாத்தை கரம் பிடிக்க உள்ளதாக தகவல்
பெங்களூர்: பெங்களூர் தெற்கு தொகுதி எம்பியும், பாஜக இளைஞரணி தேசிய தலைவருமான தேஜஸ்வி சூர்யாவிற்கு வரும் மார்ச் மாதம் திருமணம் நடைபெற உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. தமிழ்நாட்டைச் சேர்ந்த பிரபல கர்நாடக சங்கீத இசை பாடகி சிவஸ்ரீ ஸ்கந்தபிரசாத்தை, தேஜஸ்வி சூர்யா திருமணம் செய்கிறார் என்று தகவல்கள் வெளியாகி உள்ளன.
பெங்களூர் தெற்கு தொகுதி எம்பியும், பாஜக இளைஞரணி தேசிய தலைவருமான தேஜஸ்வி சூர்யா (34 வயது), சென்னையைச் சேர்ந்த பிரபல கர்நாடக சங்கீத இசை பாடகி சிவஸ்ரீ ஸ்கந்த பிரசாத்தை திருமணம் செய்ய உள்ளார் என்றும் இன்னும் சில மாதங்களில் பெங்களூரில் திருமண விழா நடைபெற உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. ஆனால் பெங்களூரு தெற்கு எம்.பி.யான தேஜஸ்வி சூர்யா இதுபற்றி இன்னும் அதிகாரப்பூர்வ அறிவிப்பு எதுவும் வெளியிடவில்லை..

தெலுங்கு மற்றும் ஆங்கில ஊடகங்களில் வெளியாகி உள்ள செய்திகளின் படி, சென்னையைச் சேர்ந்த கர்நாடகா இசை பாடகி சிவஸ்ரீ ஸ்கந்த பிரசாத்இ செனனை சாஸ்த்ரா பல்கலைக்கழகத்தில் பயோ இன்ஜினியரிங் பட்டம் பெற்றவர் ஆவார். இவர் சென்னை பல்கலைக்கழகத்தில் பரதநாட்டியத்தில் எம்.ஏ பட்டம் பெற்றவர் ஆவார்.
பொன்னியின் செல்வன் - பாகம் 2 படத்தின் கன்னட பதிப்பில் ஒரு பாடலை சிவஸ்ரீ பாடியிருந்தார் என்று கூறப்படுகிறது. சமூக வலைதளங்களில் மிகவும் ஆக்டிவாக இருந்து வரும் சிவஸ்ரீயை யூடியூப் வலைதளத்தில் 2 லட்சத்திற்கு அதிகமானோர் பின்தொடர்கிறார்கள். முன்னதாக கடந்த 2024 ஜனவரி மாதம் கடவுள் ராமர் குறித்த பாடல் பாடியதற்காக பிரதமர் நரேந்திர மோடி சிவஸ்ரீ ஸ்கந்த பிரசாத்தை பாராட்டினார்.
அப்போது பிரதமர் மோடி வெளியிட்ட பதிவில், கன்னடத்தில் சிவஸ்ரீ ஸ்கந்தபிரசாத்தின் இந்தப் பாடலானது கடவுள் ஸ்ரீராமரின் பக்தியின் உணர்வை அழகாக எடுத்துக்காட்டுகிறது. இத்தகைய முயற்சிகள் நமது வளமான கலாச்சார பாரம்பரியத்தைப் பாதுகாப்பதில் நீண்ட தூரம் செல்கின்றன" என்று குறிப்பிட்டிருந்தார்.
தேஜஸ்வி சூர்யா, சிவஸ்ரீ ஸ்கந்தபிரசாத் திருமணம் வரும் மார்ச் மாதம் 4ம் தேதி பெங்களூரில் நடைபெறலாம் என்று சொல்கிறார்கள். தமிழக பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலையும் தேஜஸ்வி சூர்யாவும் நெருங்கிய நண்பர்கள் ஆவார். தேஜஸ்வி சூர்யாவை பொறுத்தவரை திருமணம் குறித்து பலமுறை கேட்கப்பட்ட போதிலும், இது வரை எந்த கருத்தும் கூறியது இல்லை.
-
ஸ்டாலினின் எச்சரிக்கை.. பதறிப்போய் ஆளை தூக்கிய விஜய்.. பயத்தில் அவசர அவசரமாக வியூகம்.. நடந்தது என்ன? -
மும்மொழி.. மத்திய அரசுக்கு எதிராக அண்ணாமலை முதல் முறையாக கருத்து? -
பிரதமர் மோடியை வணங்கி.. பத்மஸ்ரீ விருது பெற்ற சிலம்ப கலைஞர் பழனிவேல்! தமிழருக்கு பெரிய கவுரவம் -
மாசம் ரூ.10000 கோடி செலவு.. படிச்சு படிச்சு மோடி சொல்ல இதுதான் காரணம்..! -
அண்ணன் வர்றாரு! என்னப்பா ஆரம்பிச்சுருவோமா? அண்ணாமலை ஆரம்பிக்கும் ’பார்ட்டி’.. இதுதான் கொடி, சின்னமா? -
விஜய் செய்த சாணக்கியத்தனம்.. சத்தமில்லாமல் வெளியேற்றப்பட்ட கம்யூனிஸ்ட்கள்! இதை யாரும் கவனிக்கலையே! -
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு -
இசக்கி சுப்பையா யார் தெரியுமா? அடுத்து தாவும் அரசியல் புள்ளி இவரா? தவெக பக்கம் சாயும் அதிமுக கோட்டை -
மு.க.ஸ்டாலின் - எடப்பாடி பழனிசாமி இணைவார்கள்!ஆருடம் கணித்த.. ஆதவ் அர்ஜுனா! -
ஈரான் மக்களுக்கு விடிவுகாலம் பிறந்தது.. 87 நாட்களுக்கு பின்பு.. ஈரான் அதிபர் வெளியிட்ட அறிவிப்பு! -
இதெல்லாம் எந்த நினைப்பில் விஜய் செய்கிறார் தெரியலையே.. மிகப்பெரிய ரிஸ்க்.. சறுக்குனா காலிதான்! -
பயிர் கடன் தள்ளுபடியில் விஜய் வைத்த செக்.. 100%, 50% தள்ளுபடிக்கு பின் இருக்கும் ஸ்மார்ட் கணக்கு!












Click it and Unblock the Notifications