திடீரென பற்றி எரிந்த தீ.. உழைத்த களைப்பில் பிஎம்டிசி பஸ்சில் தூங்கிய கண்டக்டர் கருகி பலி.. சோகம்
டிரைவர் பஸ் நிறுத்தத்தின் ஓய்வறையில் தூங்கிய நிலையில் கண்டக்டர் முத்தையா மட்டும் பிஎம்டிசி பஸ்சில் படுத்து தூங்கினார்.
பெங்களூர்: பெங்களூரில் இரவில் பஸ் நிறுத்தத்தில் நிறுத்தப்பட்டு இருந்த பிஎம்டிசி பஸ் தீப்பிடித்து எரிந்ததில் உழைத்த களைப்பில் அதில் படுத்து தூங்கிய கண்டக்டர் உடல் கருதி பலியான துயர சம்பவம் நடந்துள்ளது. அதிர்ஷ்டவசமாக டிரைவர் பஸ் நிறுத்த ஓய்வறையில் தூங்கியதால் அவர் உயிர் பிழைத்தார்.
கர்நாடகா தலைநகரான பெங்களூரு மற்றும் புறநகர் பகுதிகளுக்காக பிஎம்டிசி எனும் பெங்களூர் மெட்ரோபாலிட்டன் போக்குவரத்து கழகம் செயல்பட்டு வருகிறது. இந்த போக்குவரத்து கழகம் சார்பில் பெங்களூர், பெங்களூர் புறநகர், ராமநகர் வரை மாநகர பஸ்கள் இயக்கப்பட்டு வருகின்றன.
சாதாரண பஸ்கள், வால்வோ பஸ்கள், ஏசி பஸ்கள் என பல்வேறு வசதிகளுடன் கொண்ட பஸ்களை இந்த போக்குவரத்து கழகம் இயக்கி வருகிறது.

பாகல்கோட்டையை சேர்ந்தவர்
இந்த பிஎம்டிசி போக்குவரத்து கழகத்தில் கண்டக்டராக பணியாற்றி வந்தவர் முத்தையா (வயது 43). இவர் பாகல்கோட்டை மாவட்டத்தை சேர்ந்தவர். இவருக்கு திருமணமாகி மனைவி மஞ்சுளா மற்றும் 14 வயதில் மகள் உள்ளார். இவர் பெங்களூரில் தங்கி வேலை செய்து வந்தார். இந்நிலையில் முத்தையா நேற்று டிரைவர் பிரகாசுடன் பணி செய்தார்.

பஸ்சில் தூங்கிய கண்டக்டர்
நேற்று இரவு பணி முடிந்தவுடன் பஸ்சை லிங்கதீரனஹள்ளி பஸ் நிறுத்தத்தில் அவர்கள் இரவு 10.30 மணிக்கு பார்க் செய்தனர். அதன்பிறகு டிரைவர் பிரகாஷ் பஸ் நிறுத்தத்தில் உள்ள ஓய்வறைக்கு சென்று படுத்தார். உழைத்த களைப்பில் முத்தையா பஸ்சிலேயே தூங்கினார்.

தீப்பிடித்து எரிந்த பஸ்
இந்நிலையில், அதிகாலை 4.30 மணியளில் திடீரென்று பிஎம்டிசி பஸ் தீப்பற்றி எரிந்தது. அப்போது டிரைவர் பிரகாஷ் கண்விழித்த நிலையில் பஸ் தீப்பிடித்து எரிவதை பார்த்து அதிர்ச்சியடைந்தார். இதையடுத்து உடனடியாக போலீசார் மற்றும் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. உடனடியாக தீயணைப்பு துறையினர் ஓடிவந்து பஸ்சில் பிடித்த தீயை அணைத்தனர்.

உடல் கருகி பஸ்
ஆனால் அதற்குள் பஸ்சில் படுத்து தூங்கிய கண்டக்டர் முத்தையா சாமி உடல் கருகி இறந்தார். இதையடுத்து அவரது உடல் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. தீ விபத்துக்கான காரணம் என்ன? என்பது தெரியவில்லை. இதுபற்றிய புகாரின் போில் போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
-
சிம்பிளாக பதவியேற்பு.. கர்நாடகாவில் கவனத்தை ஈர்க்கும் டி.கே.சிவகுமார்! காரணம் இதுதான்! -
IPL 2026: அடேங்கப்பா..! ஐபிஎல் பரிசுத்தொகை எவ்வளவு? வைபவ் சூர்யவன்ஷி காட்டில் கொட்டிய பணமழை! -
பெங்களூர்: என்னடா அநியாயம் பண்றீங்க.. வீட்டு வாடகை ரூ.1.1 லட்சமா.. அதிர்ச்சியில் ஐடி ஊழியர்கள்! -
நள்ளிரவில் ஜொலிக்கும் பெங்களூர்.. RCB வெற்றியால் ரசிகர்கள் செய்த சம்பவம்.. இந்த வீடியோ பாருங்க -
அலப்பறைக்கு ரெடியான RCB ரசிகர்கள்.. பெங்களூரில் மேம்பாலங்களை மூடும் போலீசார்.. பின்னணி இதுதான் -
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்!












Click it and Unblock the Notifications