Thug Life: பெங்களூரில் இருந்து ஓசூர் தியேட்டர்களுக்கு படையெடுக்கும் ரசிகர்கள்

Subscribe to Oneindia Tamil

பெங்களூர்: தக் லைஃப் திரைப்படம் நாளை பெங்களூர் உள்பட கர்நாடகாவில் ரிலீஸ் ஆகாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் பெங்களூரில் உள்ள ரசிகர்கள் கர்நாடகா - தமிழ்நாடு எல்லையில் உள்ள ஓசூர் தியேட்டர்களில் டிக்கெட் முன்பதிவு செய்து வருகின்றனர். பெங்களூரில் படம் வராவிட்டால் என்ன? ஓசூரில் வந்து பார்ப்போம் என்று அவர்கள் ஆன்லைனில் டிக்கெட் முன்பதிவு செய்துள்ளனர்.

இயக்குநர் மணிரத்னம் இயக்கத்தில் நடிகர் கமல்ஹாசன் நடித்துள்ள திரைப்படம் தக் லைஃப். நடிகர் சிம்பு, திரிஷா உள்பட பலர் நடித்துள்ளனர். இந்த திரைப்படம் நாளை திரைக்கு வர உள்ளது. இந்த படத்தின் இசை வெளியீடு சென்னையில் நடந்தது. சிறப்பு விருந்தினராக கன்னட நடிகர் சிவராஜ் குமார் பங்கேற்றார் இந்த விழாவில் கமல்ஹாசன் பேசினார்.

bangalore-fans-booking-thug-life-movie-ticket-in-hosur-theatres

கமல்ஹாசன் , ‛‛தமிழில் இருந்து பிறந்ததுதான் உங்கள் கன்னடம்'' என்று கூறினார். இதற்கு கர்நாடகாவில் உள்ளவர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். மேலும் கமல் மன்னிப்பு கேட்க வேண்டும். இல்லாவிட்டால் தக் லைஃப் திரைப்படத்தை கர்நாடகாவில் வெளியிடமாட்டோம் என்று அறிவித்தனர்.

கமல் மன்னிப்பு கேட்க மறுத்துவிட்டார். கமல்ஹாசன் மன்னிப்பு கேட்கும் வரை தக் லைஃப் திரைப்படம் கர்நாடகாவில் வெளியிடப்படாது என்று கர்நாடகா திரைப்பட வர்த்தக சபை அறிவித்துள்ளது. இதையடுத்து கமல்ஹாசனின் ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் நிறுவனம் கர்நாடகா உயர்நீதிமன்றத்தை நாடியது. திரைப்படத்தை வெளியிட அனுமதிக்க வேண்டும். போலீஸ் பாதுகாப்பு வழங்க வேண்டும் என்று மனுவில் கூறப்பட்டு இருந்தது. இதனை விசாரித்த உயர்நீதிமன்றம் கமல்ஹாசனை மன்னிப்பு கோரும்படி கூறியது. கமல் மன்னிப்பு கோராத நிலையில் வழக்கை ஜூன் 10க்கு ஒத்திவைத்தது.

இதனால் திட்டமிட்டப்படி தக்லைஃப் திரைப்படம் நாளை கர்நாடகாவில் வெளியாகாது. கர்நாடகாவில் கமல்ஹாசனுக்கு குறிப்பிடும்படியாக ரசிகர்கள் உள்ளனர். தற்போது கர்நாடகா தியேட்டர்களில் இந்த திரைப்படம் வெளியாகாத நிலையில் அவர்கள் எல்லையில் உள்ள தமிழ்நாட்டின் ஓசூர் தியேட்டர்களை நோக்கி படையெடுக்கின்றனர் ஓசூரில் உள்ள தியேட்டர்களில் தக்லைஃப் திரைப்படத்தை பார்க்க பெங்களூரில் வசிப்போர் டிக்கெட் முன்பதிவு செய்துள்ளனர்.

இதுதொடர்பாக bookmyshow இணையதளத்தை பார்த்தோம். மதியம் 12 மணி நிலவரப்படி லட்சுமி சினிமாஸ் தியேட்டரில் நாளை காலை 9 மணி மற்றும் 9.20 மணி காட்சிகளுக்கான டிக்கெட் முழுவதுமாக புக் ஆகிவிட்டது. அதேவேளையில் மதியம் 12.20, 12.40, பிற்பகல் 3.40, மாலை 4 மணி, இரவு 7 மணி, 7.20 மணி, 10.30 மணி, 10.40 மணி காட்சிகளுக்கான டிக்கெட்டுகள் Almost Full என வருகின்றன. சில இருக்கைகள் மட்டும் இன்னும் முன்பதிவு செய்யப்படாமல் உள்ளது.

bangalore-fans-booking-thug-life-movie-ticket-in-hosur-theatres

அதேபோல் Ticketnew.com இணையதளத்தை செக் செய்து பார்த்தோம். அதில் ஓசூர் கர்ணூர் பஸ் நிலையத்தின் அருகே கிராண்ட் சினிமாஸ் தியேட்டரில் காலை 8.45 மணி காட்சிக்கான டிக்கெட் முழுவதும் முன்பதிவு செய்யப்பட்டுள்ளது. காலை 9 மணி, 9.15, 9.30, மாலை 6.50, 7.00, 7.15, 7.30 மணி காட்சிகளுக்கான டிக்கெட் Almost Full என்று வந்துள்ளது. மதியம் 12.05, 12.20, 12.40, 12.50, பிற்பகல் 3.30, 3.40, 3.55, 4.10, இரவு 10.20, 10.30, 10.40, 10.50 மணிக்கான காட்சிகளுக்கான டிக்கெட்டுகளும் வேகமாக முன்பதிவு செய்யப்பட்டு வருகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+