அந்த பக்கம் போலீஸ் பிடிக்கிறாங்க.. வாகன ஓட்டிகளை அலர்ட் செய்யும் கூகுள் மேப்ஸ்.. எப்படின்னு பாருங்க
பெங்களூர்: போக்குவரத்து போலீசார் அடிக்கடி வாகன சோதனை நடத்தும் இடங்களை கூகுள் மேப்சில் லேண்ட் மார்க்காக குறிப்பிட்டு, போலீசார் இருப்பார்கள் கவனமாக செல்லவும் என சில நெட்டிசன்கள் மார்க் செய்து வைத்து இருக்கிறார்கள். பெங்களூரில் தான் இத்தகைய சுவாரசிய நிகழ்வு நடைபெற்றுள்ளது. இது குறித்த விவரங்களை பார்க்கலாம்.
போக்குவரத்து விதிகளை மீறும் வாகன ஓட்டிகளுக்கு போக்குவரத்து போலீசார் அபராதம் விதித்து வருகிறார்கள். ஹெல்மெட் அணியாமல் வருவது, கார்களில் வந்தால் சீட் பெல்ட் அணியாமல் வருவது, வாகனங்களுக்கு போதிய ஆவணம் இல்லாமல் இருப்பது என விதி மீறல்களில் ஈடுபடும் வாகன ஓட்டிகளை பிடித்து போலீசார் ஸ்பாட்டிலேயே தற்போது பைன் அடித்து விடுகிறார்கள்.

வாகன தணிக்கை: சென்னை, பெங்களூர் போன்ற மெட்ரோ நகரங்களிலும் பிரதான சாலைகளில் பல இடங்களில் போக்குவரத்து போலீசார் வாகன தணிக்கையில் ஈடுபட்டு இருப்பதை காண முடியும். சில நேரங்களில் போலீசார் நிற்பதை அறிந்தால் எதிரே வரும் வாகன ஓட்டிகளிடம் அந்த பக்கம் போலீஸ் நிற்குறாங்க பார்த்து போங்க என சிக்னல் கொடுத்து விட்டு செல்வதையும் காண முடியும்..
போலீசார் நிற்கும் இடம்: ஆனால், தற்போதைய டெக்னாலஜி காலத்தில், இதை ஒரு படி மேலே கொண்டு போன நெட்டிசன்கள், கூகுள் மேப்பில் போலீசார் அடிக்கடி நிற்கும் இடத்தை மார்க் செய்து வாகன ஓட்டிகளுக்கு அலார்ட் கொடுக்க வைத்து இருக்கிறர்கள். கர்நாடக மாநில தலைநகர் பெங்களூரில் இந்த சம்பவம் நடந்துள்ளது. இது குறித்த விவரம் வருமாறு:-
பொதுவாக நகர்ப்புறங்களில் போலீசார் சில குறிப்பிட்ட இடங்களில் ரெகுலராக வாகன தணிக்கையில் ஈடுபடுவார்கள். அதாவது, போக்குவரத்து விதி மீறல் அதிகம் நடக்கும் இடங்களை குறிவைத்து போக்குவரத்து போலீசார் வாகன தணிக்கையில் ஈடுபடுவார்கள்.. அதேபோன்றுதான் பெங்களூரிலும் முக்கியமான இடத்தில் எப்போதும் போலீசார் வாகன சோதனையில் ஈடுபடுவார்கள்.
ஸ்கிரீன் ஷாட் இமேஜ்: போக்குவரத்து போலீசார் சோதனை நடத்தும் இடங்களை கூகுள் மேப்பில் சில நெட்டிசன்கள் மார்க் செய்துள்ளனர். அதாவது, ஒரு குறிப்பிட்ட இடத்திற்கு, ஊருக்கு செல்ல வேன்டும் என்றால் கூகுள் மேப்பில் சியர்ச் செய்வது போல போலீஸ் சோதனை நடத்தும் இடத்தை தேடினால், போக்குவரத்து போலீசார் எங்கெல்லாம் நிற்பார்கள் என்பதை காட்டுகிறது. இதை ஸ்கிரீன் ஷாட் செய்த நெட்டிசன் ஒருவர் தனது எக்ஸ் தளத்தில் பகிர்ந்துள்ளார்.
நெட்டிசன்கள் கருத்து: இந்த பதிவு தற்போது இணையத்தில் தீயாய் பரவி வருகிறது. நெட்டிசன்கள் பலரும் தங்கள் கருத்துக்களை பதிவிட்டு வருகிறார்கள். அதேபோல, இங்கே போலீஸ் நிற்கும்.. ஹெல்மெட் அணிந்து கொண்டு செல்லுங்கள் என மற்றொரு பகுதியையும் நெட்டிசன்கள் கூகுள் மேப்பில் மார்க் செய்து வைத்துள்ளார்கள்.
டெக்னாலாஜியை தங்கள் வசதிக்கு ஏற்றமாதிரி பயன்படுத்துவதில் இந்தியர்களுக்கு நிகர் யாரும் இல்லை என சில நெட்டிசன்கள் பதிவிட்டுள்ளனர். அதேவேளையில், சில நெட்டிசன்கள், போக்குவரத்து விதி மீறலை ஊக்குவிப்பது போல இது அமைகிறது எனவும் கருத்துக்களை பதிவிட்டு வருகிறார்கள்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தலை எதிர்கொள்ள திமுகவின் இரட்டை வியூகம்.. இள ரத்தத்திற்கு முக்கியத்துவம்! -
டாஸ்மாக்கில் ரூ.3,600 கோடி ஊழல்.. லிஸ்ட் எடுத்த தவெக.. அமைச்சர் விக்னேஷ் திடுக் தகவல் -
96,000 வாக்குகள் வித்தியாசத்தில்.. தவெக வேட்பாளரை ஜெயிக்க வைத்த தொகுதிக்கு இந்த நிலைமையா? -
ரூ.15 லட்சம் கோடி பஸ்பம் ஆகும்? சரிகிறது இந்தியாவின் தங்க’ சாம்ராஜ்யம்.. நாட்டையே உலுக்கும் சம்பவம் -
அதிகாலையே கணக்கில் வரவு வைக்கப்பட்ட ரூ.3000.. வந்தது மே மாதம் பேமெண்ட்.. அரசின் அசத்தல் மூவ்! -
இந்தியாவை தாக்கும் பெரிய ஆபத்து.. விஷயம் கேட்டு எலான் மஸ்க் கூட அதிர்ந்து போனார்! பேரழிவு கன்பார்ம்? -
சென்னை சூட்கேஸில் தலை இல்லாத சடலம்... இப்படி ஒரு பெண்ணா? பார்கோடு தந்த மரண துப்பு.. அலறிய பெரம்பூர் -
சொத்துகளை மறைக்கும் சென்னை மேயர் பிரியா.. துணை மேயர் உள்பட 75% கவுன்சிலர்கள் 4 ஆண்டுகளாக ‘டிமிக்கி' -
அடித்து ஆடும் விஜய்.. வருகிறது ராமநாதபுரம் புதிய விமான நிலையம்.. பொருளாதார புரட்சிக்கு அடித்தளம்! -
ஸ்டாலின் காங்கிரஸுக்கு தந்த பவர்புல் ஷாக்! பாஜகவும் இல்லை.. அப்ப தேசிய அரசியலில் திமுகவின் ரூட் என்ன -
அதெப்படி திமிங்கலம்.. தமிழ்நாட்டிற்கு வரவேண்டிய ஒப்பந்தம் வரிசையா.. கரெக்ட்டா ஆந்திராவுக்கு போகுது! -
டெல்லியில் இந்தியா கூட்டணி ஆலோசனை.. திமுக, ஆம் ஆத்மி புறக்கணிப்பு.. வைகோ, திருமாவளவன் பங்கேற்பு












Click it and Unblock the Notifications