Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

அரண்ட பெங்களூர்..டிபன் கூட செய்யாமல் அப்படியென்ன தூக்கம்? மகனின் ஆவேசம்.. காலங்காத்தாலேயே அலறிய தாய்

Subscribe to Oneindia Tamil

பெங்களூர்: முறையாக சாப்பாடு தராத காரணத்தினால், பெற்ற தாயை இரும்பு கம்பியால் தாக்கி கொன்றுள்ளார் 17 வயது மகன்.. இந்த சம்பவம் பெங்களூரில் நடந்து பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகிறது.

கர்நாடகாவில் கோலார் மாவட்டம், முல்பாகலை சேர்ந்த பெண் நேத்ரா.. இவருக்கு 40 வயதாகிறது.. தற்போது பெங்களூரு கே.ஆர்.புரம் பீமய்யா லே - அவுட்டில் குடும்பத்துடன் வசித்து வருகிறார். இவருக்கு 2 பிள்ளைகள் இருக்கிறார்கள்.. இதில், மகனுக்கு 17 வயதாகிறது.. அங்குள்ள கல்லூரி ஒன்றில், டிப்ளமோ படித்து வருகிறார்..

Bangalore incident and 17 year old boy Kills 40 year old mother surrenders at police station


கல்லூரி:
இந்நிலையில், நேற்று முன்தினம் இரவு, நேத்ராவுக்கும், மூத்த மகனுக்கும் மகனுக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.. இதனால் கோபமடைந்த மகன், சாப்பிடாமலேயே தூங்க போய்விட்டார்... பிறகு, நேற்று காலை 7:30 மணிக்கு காலேஜ் செல்வதற்காக பரபரப்பாக கிளம்பி கொண்டிருந்தார்.

அப்போது சாப்பிட்டு கிளம்பலாம் என்றால், டைனிங் டேபிளில் , டிபன் வைக்கப்படாமல் இருந்துள்ளது.. இதனால், டிபன் கேட்பதற்காக தன்னுடைய அம்மாவின் ரூமுக்குள் சென்றால், அங்கே அவர் தூங்கி கொண்டிருந்தாராம்.

டிபன் எங்கே: காலேஜ் போவது தெரிந்தும்கூட, டிபன்கூட செய்யாமல் இன்னமும் அம்மா தூங்கி கொண்டிருப்பதை பார்த்ததும் மகனுக்கு கோபம் வந்துள்ளது.. எனவே, நேத்ராவை எழுப்பி டிபன் கேட்டுள்ளார்.. இதனால், ஆத்திரமடைந்த நேத்ரா, மகனை சத்தம் போடவும், மீண்டும் வாய் தகராறு இரு தரப்பிலும் வெடித்துள்ளது.

ஒருகட்டத்தில் கோபமடைந்த நேத்ரா, "நீ என் மகனே இல்லை" என்று சொல்லிவிட்டார்.. இதைக்கேட்டு ஆவேசமடைந்த மகன், வீட்டிற்குள்ளிருந்து இரும்பு கம்பியை எடுத்து வந்து, நேத்ராவின் தலையில் ஓங்கி அடித்தார். இதில், ரத்த வெள்ளத்தில் நேத்ரா சுருண்டு விழுந்து, சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதைப்பார்த்து அதிர்ச்சி அடைந்த மகன், நேராக கே.ஆர்.புரம் போலீசில் சரண் அடைந்துவிட்டார்.

இரும்பு கம்பி: இந்த சம்பவம் நடந்தபோது, வீட்டில் இவர்கள் 2 பேரை தவிர வேறு யாருமில்லை என்று கூறப்படுகிறது. இதையடுத்து போலீசார் நேத்ராவின் சடலத்தை கைப்பற்றி, வழக்கும் பதிவு செய்து, தாயை கொன்ற மகனிடம் விசாரணையும் நடத்தியிருக்கிறார்கள்.

அப்போது, தன்னுடைய அம்மா தன்னை சரியாக கவனிப்பதில்லை, முறையாக சாப்பாடும் தருவதில்லை.. சம்பவத்தன்று காலேஜூக்கு கிளம்பும்போது தன்னை திட்டியதால், அது வாக்குவாதம் முற்றிவிட்டது. ஆத்திரத்தில் இரும்புகம்பியால் பலமாக தாக்கிவிட்டதாக வாக்குமூலம் தந்துள்ளார். இந்த சம்பவம் பெங்களூருவில் பெரும் பரபரப்பை தந்துவருகிறது..

விசாரணை: நேத்ராவுக்கு இன்னொரு மகள் இருக்கிறார்.. அவர் ஜியர்ஜியாவில் மருத்துவ படிப்பு படித்து வருகிறாராம். கடந்த 30 வருடங்களாக கே.ஆர்.புரா பகுதியில் வாடகை வீட்டில் வசித்து வந்திருக்கிறார் நேத்ரா.. காலை 7.30 மணிக்கு துவங்கிய வாக்குவாதம், வெறும் அரை மணி நேரத்திலேயே கொலையாக முடிந்துவிட்டது என்கிறார்கள்.. குற்றம் சாட்டப்பட்டவர் மைனர் என்பதால், அவரை காவலில் எடுத்து விசாரித்து வருவாக போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+