மோடி வீட்டில் ஏன் குண்டு போடல? வீடியோ வெளியிட்டவருக்கு நேர்ந்த கதி.. யார் இந்த பெங்களூர் நவாஸ்?
பெங்களூர்: நம் நாட்டுக்கும், பாகிஸ்தானுக்கும் இடையே பதற்றம் என்பது ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் தான் பாகிஸ்தான் ஏன் பிரதமர் மோடி வீட்டில் குண்டு போடவில்லை? என்று கேள்வி எழுப்பி இன்ஸ்டாகிராமில் சர்ச்சையாக வீடியோ வெளியிட்ட பெங்களூர் இளைஞரை போலீசார் அதிரடியாக கைது செய்துள்ள நிலையில் அவர் பற்றிய பரபரப்பான தகவல்கள் வெளியாகி உள்ளன.
நம் நாட்டுக்கும், பாகிஸ்தானுக்கும் இடையே இருந்த மோதல் தணிந்துள்ளது. நம் நாடு நடத்திய அதிரடி தாக்குதல் காரணமாக பாகிஸ்தான் பணிந்தது. போரை நிறுத்த வேண்டும் என்று பாகிஸ்தான் ராணுவ அதிகாரி, நம் ராணுவ அதிகாரியை தொடர்பு கொண்டு பேசினார். இதையடுத்து தான் நம் நாடு போர் நிறுத்தத்துக்கு ஒப்புக்கொண்டது.

தற்போது ஜம்மு காஷ்மீர், ராஜஸ்தான், பஞ்சாப் உள்ளிட்ட இடங்களில் இந்தியா - பாகிஸ்தான் எல்லையோர கிராமங்களில் அமைதி நிலவி வருகிறது. இருப்பினும் கூட போர் நிறுத்தம் அமலான பிறகு ஜம்மு காஷ்மீரில் நேற்று முன்தினம் ட்ரோன்கள் தென்பட்டன. இதனால் பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் பயங்கரவாதிகள் மீது நம்பிக்கையில்லாமல் எல்லையில் நம் ராணுவம் தீவிர கண்காணிப்பை மேற்கொண்டு வருகிறது.
இதற்கிடையேதான் பிரதமர் மோடியின் வீட்டில் குண்டு வைக்க வேண்டும் என்ற பொருள்படும்படி பேசியவர் கைது செய்யப்பட்டுள்ளார். பெங்களூரை சேர்ந்த நவாஸ் என்பவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், ‛பாகிஸ்தான் ஏன் பிரதமர் வீட்டின் மீது குண்டு போடாமல் உள்ளது?'' என்று கேள்வி எழுப்பி ஆதங்கத்தை வெளிப்படுத்தி இருந்தார். இந்த வீடியோவுக்கு கடும் எதிர்ப்பு கிளம்பியது.
மேலும் அந்த வீடியோ சமூக வலைதளங்களில் பரவ தொடங்கியது. இதையடுத்து போலீசார் விசாரணையை தொடங்கினர். விசாரணையில் பெங்களூர் பண்டே பாளையாவில் உள்ள பிஜியில் தங்கியிருக்கும் நவாஸ் என்பவர் தான் வீடியோ வெளியிட்டது என தெரியவந்தது. இதையடுத்து பண்டேபாளையா போலீசார் நவாஸை அதிரடியாக கைது செய்தனர். நவாஸிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.
இந்த விசாரணையில் நவாஸ் பெங்களூர் எலக்ட்ரானிக் சிட்டியை சேர்ந்தவர். தற்போது பண்டேபாளையா பிஜியில் தங்கி பணியாற்றி வருகிறார். கம்ப்யூட்டர் மெக்கானிக்காக இருக்கும் அவர் மீது போதைப்பொருள் வழக்கு உள்ளது. துமகூருவில் இந்த வழக்கு நிலுவையில் உள்ளது. துமகூரு போலீசார் அவரை தேடிவந்த நிலையில் மோடி பற்றி சர்ச்சை வீடியோ வெளியிட்டு அவர் பண்டேபாளையா போலீசில் சிக்கி உள்ளார்.
அதன்பிறகு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய போலீசார் பெங்களூர் பரப்பன அக்ரஹாரா சிறையில் அடைத்தனர். இதுபற்றி பெங்களூர் கிழக்கு மண்டல போலீஸ் இணை கமிஷனர் ரமேஷ் பனோத் கூறுகையில், ‛‛பிரதமர் வீட்டில் வெடிகுண்டு வைக்க வேண்டும் என்று பேசியதால் கைது செய்துள்ளோம்'' என்றார்.
முன்னதாக கடந்த மாதம் 22ம் தேதி பஹல்காமில் நடந்த பயங்கரவாத தாக்குதலில் மொத்தம் 26 அப்பாவி சுற்றுலா பயணிகள் இறந்தனர். இந்த தாக்குதலை நியாயப்படுத்தும் வகையில் கடந்த வாரம் தட்சிண கன்னடா மாவட்டத்தை சேர்ந்த ‛நிச்சு மங்களூர்' என்ற முகநூல் பக்கத்தில் ஒ பதிவுகள் போட்டனர். இது தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வரும் நிலையில் பிரதமர் மோடி வீட்டில் குண்டு வைக்க வேண்டும் என்ற பொருளில் பேசிய பெங்களூரை சேர்ந்த நவாஸ் என்பவரை போலீசார் கைது செய்துள்ளனர்.
-
செல்போன் ஸ்விட்ச் ஆஃப்.. கர்நாடக அமைச்சர் பதவியை ராஜினாமா செய்த பெங்களூர் எம்எல்ஏ மாயம்.. தமிழ்நாட்டில் பதுங்கல்? -
பெங்களூர் நகர வளர்ச்சி துறை அமைச்சர் யார் தெரியுமா? கர்நாடக அமைச்சர்களின் இலாகா விவரம் -
டிகே சிவக்குமாருக்கு முதல் அடி! பதவியேற்ற 2 நாளில் கர்நாடக சீனியர் அமைச்சர் ராமலிங்க ரெட்டி ராஜினாமா -
தன்னை கேலி செய்தாலும்.. கர்நாடகா முதல்வரானதும் டிகே சிவக்குமாருக்கு வாழ்த்து கூறிய விஜய் -
மாணவிகளுக்கு மட்டுமில்லை, பள்ளி, கல்லூரி மாணவர்கள் அனைவருக்கும் இலவச பஸ் பாஸ்! டிகே சிவகுமார் பலே -
மேகதாது அணை: முதல்வரானதும் டி.கே.சிவகுமார் அதிரடி! முடிவெடுக்க வேண்டியது தமிழ்நாடு இல்லை! -
மோடியை சந்தித்த அண்ணாமலை? மீண்டும் தமிழக பாஜக தலைவராக்க டெல்லி தலைமை திட்டம்? -
மோடியை சந்தித்த அண்ணாமலை! புது கட்சியா? பாஜகவில் புதிய பொறுப்பா? நாளை தெரிந்துவிடும் -
டிரம்ப் உடைத்த சர்ப்ரைஸ்.. "மோடி என் நண்பன்".. விரைவில் இந்தியா அமெரிக்கா வர்த்தக ஒப்பந்தம் -
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் -
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்?












Click it and Unblock the Notifications