சிக்கன் பீஸ் இல்லாத பிரியாணி.. ஹோட்டல் மீது கேஸ் போட்ட நபர்.. நுகர்வோர் நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு
பெங்களூர்: பெங்களூரில் சிக்கன் பிரியாணி ஆர்டர் செய்த நபருக்கு ஒரு சிக்கன் பீஸும் இல்லாததை எதிர்த்து நுகர்வோர் நீதிமன்றம் சென்ற இளைஞருக்கு ஹோட்டல் நிர்வாகம் ரூ 1150 இழப்பீடு வழங்க உத்தரவிட்டது.
பெங்களூரை அடுத்த நாகபைரவி பகுதியை சேர்ந்தவர் கிருஷ்ணப்பா. இவரது வீட்டில் கடந்த ஏப்ரல் 2 ஆம் தேதி கேஸ் சிலிண்டர் தீர்ந்துவிட்டது. மாற்றுவதற்கு வேறு சிலிண்டர் இல்லாத நிலையில் அவரும் அவரது மனைவியும் அதே பகுதியில் உள்ள ஹோட்டல் பிரசாந்துக்கு சென்றனர்.

அங்கு சிக்கன் பிரியாணியை ஆர்டர் செய்து பார்சல் கொடுக்குமாறு கேட்டனர். இதற்கு ரூ 150 பணத்தை ஹோட்டல் பெற்றுக் கொண்டது. இதையடுத்து இருவரும் வீட்டிற்கு பசியுடன் வந்து பிரியாணியை ருசி பார்க்க விரும்பினர்.
அப்போது அவர்களுக்கு அதிர்ச்சி காத்திருந்தது. அந்த சிக்கன் பிரியாணியில் அடி வரை கிளறி பார்த்தும் ஒரு கறி பீஸ் கூட இல்லை. மீண்டும் மீண்டும் சோதனை செய்ததில் கறி இல்லாமல் வெறும் குஸ்கா மட்டும் கொடுத்துவிட்டு சிக்கன் பிரியாணிக்கான பணத்தை பெற்றுக் கொண்டனர். இதையடுத்து கிருஷ்ணப்பா அந்த ஹோட்டல் நிர்வாகத்திற்கு போன் செய்து விஷயத்தை சொன்னார்.
உடனே அங்கிருந்து பேசிய நபர் கிருஷ்ணப்பாவிடம் வீட்டின் முகவரியை பெற்று கொண்டு வேறு ஒரு பிரியாணியை டெலிவரி செய்வதாக தெரிவித்தனர். அடுத்த 30 நிமிடங்களில் சிக்கன் பிரியாணி உங்கள் வீட்டிற்கு வரும் என தெரிவித்ததை அடுத்து கிருஷ்ணப்பாவும் அவரது மனைவியும் காத்திருந்தனர். ஆனால் 2 மணி நேரம் ஆகியும் உணவு வரவே இல்லை.
இதையடுத்து கிருஷ்ணப்பா ஹோட்டலுக்கு போன் செய்ததில் அங்கு போனை எடுக்கவில்லை. இதனால் நேரம் ஆகிவிட்டதால் தம்பதி இருவரும் அந்த குஸ்காவை சாப்பிட்டுவிட்டு உறங்கச் சென்றுவிட்டனர். இதையடுத்து கிருஷ்ணப்பா, சாந்தி நகரில் உள்ள பெங்களூர் அர்பன் மாவட்ட நுகர்வோர் நீதிமன்றத்தை மே மாதம் அணுகினார்.
தனக்கு ஏற்பட்ட மன உளைச்சலுக்கு ஹோட்டல் நிர்வாகம் ரூ 30 ஆயிரம் இழப்பீடு வழங்க வேண்டும் என நோட்டீஸ் அனுப்பினார். இந்த நிலையில் ஒவ்வொரு முறையும் நீதிமன்றத்திற்கு ஹோட்டல் நிர்வாகம் வராமல் இருந்துள்ளனர். புகைப்படங்களையும் தம்பதி கோர்ட்டில் காட்டினர். இதையடுத்து அக்டோபர் மாதம் 5ஆம் தேதி மீண்டும் வழக்கு விசாரணைக்கு வந்த நிலையில் நீதிபதி கூறுகையில், கேஸ் சிலிண்டர் இல்லாததால்தான் தம்பதி சிக்கன் பிரியாணியை ஆர்டர் செய்து வாங்கியுள்ளனர்.
சிக்கன் பிரியாணிக்கு பணத்தை பெற்றுக் கொண்டு வெறும் பிரியாணியை கொடுத்தது ஏற்க முடியாது. அதிலும் கிருஷ்ணப்பா பார்சல் மாறிவிட்டதாக அந்த ஹோட்டலுக்கு புகார் தெரிவித்தும் அந்த ஹோட்டல் நிர்வாகம் அலட்சியமாக இருந்தது ஏற்றுக் கொள்ளவே முடியாத விஷயமாகும். எனவே பிரியாணி செலவு ரூ 150 இழப்பீடாக ரூ 1000 என ரூ 1150 ஐ கிருஷ்ணப்பாவுக்கு ஹோட்டல் நிர்வாகம் வழங்க வேண்டும் என உத்தரவிட்டுள்ளார்.
இதே போல் கோவையில் வடவள்ளியில் உள்ள ஆனந்தாஸ் ஹோட்டலில் பிரைடு ரைஸ் வாங்கிய போது பார்சல் சார்ஜ் என ரூ 5.71 காசுகளை ஹோட்டல் நிர்வாகம் வாங்கிக் கொண்டது. ஆனால் அந்த பேக்கிங்கில் அந்த கடையின் பெயர் இருந்தது. இதனால் பார்சலுக்கு காசையும் வாங்கிக் கொண்டு கடையின் பெயருடன் பார்சல் கொடுத்த நிலையில் வாடிக்கையாளர்கள் என்ன விளம்பர ஏஜென்ட்டா என கேட்டு இளைஞர் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கிலும் நுகர்வோர் நீதிமன்றம் வாடிக்கையாளருக்கு ஆதரவாக நியாயமான தீர்ப்பை வழங்கியது.
-
கேஸ் சிலிண்டர் விலை மாறுது! ஏப்.1 முதல் புதிய விலை! இல்லத்தரசிகள் மாத பட்ஜெட்டில் என்ன தாக்கம்? -
டெல்லி தந்த கிரீன் சிக்னல்.. 4 வழியாக மாறும் தமிழ்நாட்டின் மூன்று முக்கிய சாலைகள்.. மெகா பிளான்! -
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
1 சவரன் தங்க நகை வாங்க போறீங்களா? கடைக்காரர் போடும் கணக்கில் அதிக மாற்றமா? ஏமாறாமல் இருக்க பில் தேவை -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு? -
அதை சொல்ல யாருக்கும் அருகதை இல்லை.. வீட்டிலும், ஆபீஸிலும் இதுதான் நடக்குது செல்வராகவன் ஆதங்கம் -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
48 அவுட் ஆஃப் 234! திமுக கூட்டணியில் இதுவரை எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை சீட் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000!












Click it and Unblock the Notifications