பெங்களூரில் இளைஞரை விரட்டி சென்று கொன்ற கும்பல்.. நொடியில் நடந்த கொடூரம்! பதற வைக்கும் சம்பவம்
பெங்களூர்: கர்நாடக தலைநகர் பெங்களூரில் சினிமாவில் வருவதைப் போல நடந்த ஒரு மோசமான படுகொலை சம்பவத்தின் வீடியோ இப்போது இணையத்தில் வேகமாக வருகிறது.
பெங்களூரில் பகிரங்கமாக நடந்த ஒரு கொலையின் வீடியோ இப்போது இணையத்தில் வேகமாகப் பரவி வருகிறது. அதில் சினிமாவில் வருவதைப் போலவே ஒருவர் உயிருக்குப் பயந்து ஓட, ஸ்கார்பியோ கார் ஒன்று அவர் மீது ஓடுகிறது.

இந்தச் சம்பவம் கடந்த அக்டோபர் 18ஆம் தேதி நள்ளிரவு 12:30 மணியளவில் நடந்துள்ளது. இந்த சம்பவம், பெங்களூரின் புலகேசி நகர்ப் பகுதியில் நடந்துள்ளது. இதை அங்கிருந்த ஒருவர் வீடியோவாக பதிவு செய்துள்ளார்.
படுகொலை: இந்தக் கொலை சம்பவத்தில் அம்ரீன் என்பவர் முக்கிய குற்றவாளியாக அடையாளம் காணப்பட்டுள்ளார். அவருடன் மேலும் இரண்டு குற்றவாளிகள் அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில், மூன்று பேரும் கைது செய்யப்பட்டுள்ளார். பண தகராறு காரணமாக இந்த கொலையைச் செய்ததாக அவர்கள் வாக்குமூலம் அளித்தாகத் தகவல் வெளியாகியுள்ளது.
இந்த வீடியோ இணையத்தில் வேகமாகப் பரவி வருகிறது. அதில் அந்த நபர் உயிரைக் காப்பாற்றிக் கொள்ள சினிமாவில் வருவதைப் போல தட்டுத்தடுமாறி ஓடுகிறார். அப்போது பின்னாலேயே வரும் ஸ்கார்பியோ கார் அவரை துரத்துகிறது. அந்த நபர் காரில் இருந்து தப்ப சாலையில் இங்கும் அங்கும் ஓடுகிறார். இருப்பினும், அவரை விடாமல் துரத்தும் அந்த ஸ்கார்பியோ கார் அவரை திட்டமிட்டு முட்டி தூக்குகிறது. இந்த வீடியோ பார்க்கும் அனைவருக்கும் பீதியைத் தருவதாகவே இருக்கிறது.
என்ன நடந்தது: முதலில் இந்த வீடியோ வெளியாகாத நிலையில், இதை விபத்து சம்பவம் என்றே நினைத்து போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். இதற்கிடையே வீடியோ வெளியான பிறகே இது கொலை சம்பவம் என்பது உறுதியானது. இதையடுத்து போலீசார் விசாரணையை ஆரம்பித்தனர். கொலை செய்யப்பட்ட நபர் அஸ்கர் என்று அடையாளம் காணப்பட்டது. அஸ்கரின் நண்பரின் அளித்த வாக்குமூலமே இந்தக் கொலையைச் செய்தது யார் என்பதைக் கண்டறிய உதவியது. அந்த வாக்குமூலத்தின் அடிப்படையில் அம்ரீன் உட்பட 3 பேர் மீது போலீசார் கொலை வழக்குப் பதிவு செய்தனர்.
கொலை செய்யப்பட்ட அஸ்கர் ஒரு செகண்ட் ஹேண்ட் கார் டீலர். அவர் அம்ரீனுக்கு கார் ஒன்றை விற்றுள்ளார். இருப்பினும், அம்ரீன் அதற்கு ரூ.4 லட்சம் பணத்தைத் தரவில்லை. அஸ்கர் தனது காருக்கான பணத்தை அமீரனிடம் கேட்டுள்ளார். அப்போது இரு தரப்பினருக்கும் இடையே மோதல் ஏற்பட்டுள்ளது. அப்போது அவர்கள் இருவருக்கும் இடையே வாக்குவாதம் சண்டையாக மாறியது. இது தொடர்பாக ஏற்கனவே ஜேசி காவல் நிலையத்தில் புகாரும் அளிக்கப்பட்டுள்ளது.

வாக்குமூலம்: தன் மீதான புகாரைத் திரும்பப் பெறுமாறு அம்ரீன் அஸ்கரிடம் கேட்டுள்ளார். இருப்பினும் அதற்கு அஸ்கர் மறுப்பு தெரிவித்துள்ளார். கொலை நடந்த அன்று இரவு, அஸ்கரை பேச்சுவார்த்தை அழைப்பது போல அம்ரீன் அழைத்துள்ளார். அப்போது அம்ரீன் உட்பட மூன்று பேர் திட்டம் போட்டு அஸ்கர் மீது காரை மோதி கொலை செய்துள்ளனர்.
போலீசார் விசாரணையை ஆரம்பித்த போது, மூன்று பேரும் தங்கள் மீதான குற்றச்சாட்டை மறுத்துள்ளனர். இருப்பினும், போலீசார் தங்கள் விசாரணையை தீவிரப்படுத்திய நிலையில், அவர்கள் மூன்று பேரும் தங்கள் குற்றத்தை ஒப்புக் கொண்டனர்.
-
உலுக்கிடுச்சே.. மூடிய அறைக்குள் சிக்கிய காதலன்.. அரண்டு போன பிசினஸ்மேன் கணவன்! பெங்களூரு பகீர் -
பெங்களூர்: என்னடா அநியாயம் பண்றீங்க.. வீட்டு வாடகை ரூ.1.1 லட்சமா.. அதிர்ச்சியில் ஐடி ஊழியர்கள்! -
6வது இடத்துக்கு தள்ளப்பட்ட சென்னை விமான நிலையம்.. முந்திய பெங்களூர்! பிசியான ஏர்போர்ட் லிஸ்ட் -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன்












Click it and Unblock the Notifications